

ஆர்யா, விஜய் சேதுபதியுடன் புறம்போக்கு படத்தில் ஷாமும் இணைகிறார். குலு மணாலியில் ஜனவரி 14, 2014 முதல் படப்பிடிப்புத் தொடங்கவிருக்கிறது. பிக்கேனர், ஜெய்ப்பூர், பொக்ரான், ஜெய்சால்மர் என முதலில் வடஇந்திய நகரங்களில் படப்பிடிப்பு நடத்திவிட்டு ஹைதராபாத், சென்னைக்கு படப்பிடிப்பிற்காக வரவுள்ளனர்.
“என் முதல்படம் இயற்கைக்குப் பிறகு ஷாமுடன் மீண்டும் இணைவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கேன். ஷாம் வேலையில் மிகுந்த ஈடுபாடுடன் இருப்பவர். ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் என 2014இன் முக்கிய படங்களில் ஒன்றாக இருக்கும். பல நடிகர்கள் ஒரே படத்தில் நடிக்கும் ட்ரெண்ட்டையும் தொடங்கி வைக்கிறோம். தலைப்பைப் போலவே படத்தின் கதையும் வித்தியாசமானது” என்கிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.
“புறம்போக்கு பவர்ஃபுல்லான கரு கொண்ட கதை. மூன்று ஹீரோக்களுக்குமே முக்கியத்துவம் உள்ளது. ஷூட்டிங்கிற்காக ஆர்வமாகக் காத்திருக்கேன்” என்றார் ஷாம்.