
இறைவனை வீட்டில் வழிபடுவதற்கும் ஆலயத்தில் வழிபடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
பொதுவான வீட்டு சாப்பாட்டிற்கும் ஹோட்டல் சாப்பாட்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுதான் இதுவும், வீட்டு சாப்பாடுதான் கோவில் வழிபாடு, ஹோட்டல் சாப்பாடுதான் வீட்டு வழிபாடு, பொதுவாக வீட்டு சாப்பாட்டில் தான் ருசியும். சத்தும் அதிகளவில் இருக்கும், ஆனால் ஹோட்டல் சாப்பாட்டில் தரம் குறைவாகவே இருக்கும். கோவிலில் தீயவர்கள் நுழைந்தால் கூட நாம் கோவிலில் நுழைந்துவிட்டோம் என்று நினைத்து “இறைவா” என்னைக் காப்பாற்று என்று பிரார்த்தனை புரிவார்கள், நல்லவர்கள் நுழைந்தால் உலக அமைதி. நன்மைக்காக பிரார்த்திப்பார்கள், இதோடு இறைவனின் அருள் அவன் அமர்ந்திருக்கும் இடத்தில் மிக அதிகபட்சமாக கண்கிலடங்காத அளவில் நிறைந்திருக்கும், அதே சமயம் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிக்க முடியாதவர்கள் வீட்டிலிருந்தே வழிபடலாம். ஹோட்டல் சாப்பாடு போன்றதுதான் இறைவழிபாடு என கூறக்காரணம் வீட்டில் பல பிரச்சினைகளால் மனம் அலைகழிக்கப்படும். சிந்தனை இறைவன்பால் இருக்காது என்பது சர்வ நிச்சயம். ஆகவே நாம் அனைவரும் கோவில்களுக்கு சென்று அங்கமர்ந்து பக்தர்களின் துயரைப் போக்கும்.
இறைவனுடைய திருவடி கமலங்களை நினைவில் நிறுத்தி நாமும்.. நமது குடும்பமும்.. நமது தேசமும்.. நமது பிரபஞ்சமும்.. எல்லா வளமும் பெற்று நன்றாக இருக்க பிரார்த்தனை செய்வோமாக.
– யோகி ஸ்ரீராமானந்த குரு