Shadow

இரண்டாம் உலகம் விமர்சனம்

Irandam-ulagam

இரண்டு அனுஷ்கா. இரண்டு ஆர்யா. இரண்டு காதல். இரண்டு உலகம். ஒன்று நாம் வாழும் உலகம்; இன்னொன்று காதலற்ற உலகம்.

படத்தில் இரண்டு காதல்கள் இருந்தாலும் அவைகள் வழக்கமானவையே. செல்வராகவனின் நாயகர்கள் நாயகியைச் சுற்றிச் சுற்றி வம்படியாகவும் வலுக்கட்டாயமாகவும்  ஒரு நெருக்கடியை உருவாக்கிக் காதலிக்க வைப்பார்கள். பெரும்பாலான தமிழ்ப்பட நாயகர்கள் அப்படித்தான். இந்த உலகத்தைச் சேர்ந்த மருத்துவர் ரம்யாவை, மதுபாலகிருஷ்ணன் அப்படித்தான் காதலிக்க வைக்கிறார். 

Aaryaசெல்வராகவனின் அந்த இன்னொரு உலகம் வண்ணமயமாக ஜொலிக்கிறது. மின்னும் காளான்கள், ஒளிக்கும் மரங்கள், மனித தலை கொண்ட விநோத மிருகம் (சிங்கம்), வண்ண நிலா என சி.ஜி. வேலைகளின் அசுர உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது. இவ்வளவு இருந்தும் அந்த உலகத்தில் பூக்கள் பூப்பதில்லை. அதற்கு அங்கு ஒரு காதல் தோன்ற(!?) வேண்டும். வர்ணாவின் மீதுள்ள காதலால் மருவன் இரண்டு முறை உயிரைவிடத் துணிகிறான். அப்போது எல்லாம் பூக்காத பூக்கள், இறந்த காதலியைத் தேடி  மதுபாலகிருஷ்ணன் வந்தவுடன் பூப்பது தான் விநோதமாக உள்ளது.

அந்த உலகத்தில் ஒரு கடவுள் வாழ்கிறார். அவரை அனைவரும் ‘அம்மா’ என்றழைக்கின்றனர். என்ன தான் கடவுள் மண்ணில் மனிதரோடே வாழ்ந்தாலும், அவ்வுலகத்தை ஆளும் மன்னனின் அதிகாரம் கண்டமேனிக்கு தான் இருக்கிறது. அந்த உலகத்தில் அனுஷ்கா, ஆர்யா தவிர்த்து மற்ற அனைவருமே வெளிநாட்டவர்கள். அதிலும் வெள்ளைத் தோலினர்கள் மட்டுமே. 

சுட்ட கதை படத்தில் கான்ஸ்டபிள் சங்கிலிராயனாக நடித்த வெங்கி ஆர்யாவின் நண்பராக சில காட்சிகளில் வருகிறார். மற்றபடி படம் முழுவதும் அனுஷ்காவும் ஆர்யாவும் தான் நிறைந்துள்ளனர். வேறு உலகத்தில் இருந்து வரும் ஆர்யாவான மதுபாலகிருஷ்ணன் காதலை ‘வர்ணா’ அனுஷ்காவிற்கு சொல்லிக் கொடுக்கிறார். அவருக்கும் உடனே மருவன் மீது காதல் பிறந்து விடுகிறது. சம்பிரதாயமான பாவனை காதல் தான் படத்தில் உள்ளதே தவிர கொண்டாட ஏதுமில்லை. அனிருதின் பின்னணி ஒலிப்பதிவு, கோலா பாஸ்கரின் படத்தொகுப்பு, ராம்ஜியின் ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜின் இசை என படத்தின் பலம் அதன் தொழில்நுட்ப உபயோகிப்பு மட்டுமே. 

Leave a Reply