
வணக்கம்,
உருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி, ரொட்டிக்கும் நல்லாருக்கும். ரசம் சாப்பாட்டுக்கு செம்ம காம்பினேஷன்,,,,,
தேவையான பொருட்கள்:
- உருளைகிழங்கு – 3
- பெரியவெங்காயம் (நறுக்கியது) -1
- மிளகாய் – 2
- கறிவேப்பிலை – கைப்பிடி
- மஞ்சள் தூள் -1 சிட்டிகை
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- உப்பு – தேவைக்கு.
செய்முறை:
Step 1:
உருளைகிழங்கை குக்கரில், தண்ணீர் விட்டு 3 விசில் வரை வேக வைத்து, எடுத்து, தோலுரித்து வைக்கவும். பிறகு, அதை ஒன்றிரண்டாக மசித்து, உப்பு, மஞ்சள் தூள் மிளகாய் தூள் தூவி வைக்கவும்.
Step 2:
பாத்திரத்தில், எண்ணெ ஊற்றி, கடுகு போட்டு பொரிந்ததும், கடலை பருப்பு, உளுந்து பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, மிளாகாய் போட்டு நன்கு வதக்கவும்.
Step 3:
இப்பொழுது, மசித்து வைத்த உருளைகிழங்கை போட்டு பிரட்டவும். மிதமான சூட்டில், ஒரு 2 நிமிடம் வதக்கியதும், எடுத்து பரிமாறவும்.
சுவையான, உருளைகிழங்கு மசியல் ரெடி.
- வசந்தி ராஜசேகரன்.