Shadow

“என் வியாபாரம் பெருசாகும்” – ‘அட்டகத்தி’ தினேஷ்

திருடன் போலீஸ் Thirudan Police

“அட்டகத்தியில நான் நானாவே இருந்துட்டேன். குக்கூல கொஞ்சம் வெளில போய் பண்ணியாச்சு. அதை முடிச்சுட்டு.. திருடன் போலிஸ் பண்றப்ப, கண் பார்க்கிறது என சில விஷயங்கள் எல்லாம் டஃப்பாக இருந்தது.

அரங்கேற்ற வேளை க்ளைமேக்சில் வரும் சாங்கில், வி.கே.ராமசாமி சாரை ஜனகராஜ் துரத்துவார்ல? அந்த ஃபீல்தான் ‘திருடன் போலீஸ்’ படம் தரும். என்னுடைய வியாபாரத்தை இந்தப் படம் பெருசு பண்ணும்தான்னு நினைக்கிறேன்” என்றார் ‘திருடன் – போலீஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ‘குக்கூ’ புகழ் தினேஷ்.

இரண்டு படங்களில் நாயகனாக நடித்து விட்டாலும், அட்டகத்தி தினேஷின் முதல் டூயட் சாங் இப்படத்தில்தான் இடம் பெறுகிறது. அப்பாடலும், ‘ஆரண்ய காண்டம்’ படத்திற்காக கம்போஸ் செய்யப்பட்டது. படத்தொகுப்பாளர் பிரவீன் K.L.க்கு மிகவும் பிடித்த பாடலாம் அது. அவர் தயாரிப்பாளரிடம் வாங்கிக் கேட்டு, இப்படத்தில் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் நாயகி ஐஸ்வர்யா, “பண்ணையாரும் பத்மினியும் படத்தில் நடித்த பால சரவணன் ஃபோட்டோஸ் பார்க்கப் போய் என் ஃபோட்டோவைப் பார்த்திருக்கார். 80களின் சாயலிலுள்ள படங்கள்லயே பண்ண நான் இதுக்கு செட் ஆவேன் என நம்பி இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்திருக்கார் இயக்குநட் கார்த்திக் ராஜூ. என் மேல் நம்பிக்கை வச்சதுக்கு ரொம்ப நன்றி. அதே போல், படத்தில் என்னை ரொம்ப அழகாகக் காட்டியுள்ள ஒளிப்பதிவாளர் சித்தார்த்துக்கும் நன்றி” என்றார். முதல்முறையாக இப்படத்தில் ஐஸ்வர்யா வெஸ்டர்ன் லுக்கில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“எஸ்.பி.சரண் சாருக்கும், யுவன் சாருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கும். இருவரும் முதல் பட இயக்குநர்கள்கூட பண்றப்ப ஹிட் கொடுத்துவாங்க. அதே மாதிரி யுவனும் இந்தப் படத்தில் பாடல்கள் எல்லாம் செமயா போட்டுக் கொடுத்திருக்கார். வேலையை விட்டுட்டு படம் டைரக்ட் பண்ண சப்போர்ட்டாக இருந்தது என் மனைவி. அடுத்து என் ஃப்ரெண்ட் செல்வா. கதையைக் கேட்டுட்டு அவனே ப்ரொட்யூஸ் பண்ண முன்வந்தேண். கதையைக் கேட்டதும் சரண் சார், ஜாயின்ட் வென்ச்சருக்கு ஓகே சொல்லிட்டார். ரொம்ப சந்தோஷமா இருந்தது.

‘திருடன் போலீஸ்’ என்ற தலைப்பை, விஜய் வசந்த் பிளாக் பண்ணி வச்சிருந்தார். நாங்க கேட்டதும் கொடுத்துட்டார். அதே போல் இந்தப் படத்துல ஒரு பாடலுக்கும் டான்ஸ் ஆடியிருக்கார். அவருக்கு ரொம்ப நன்றி” எனக் கூறினார் படத்தின் இயக்குநர் கார்த்திக் ராஜா.

“கார்த்திக் ராஜூ, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வேலை பண்ணவர். அவருக்கு சினிமாவை ஃப்ரேம் ஃப்ரேமாகப் பார்க்கிறார். நான்லாம் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்தப்ப அடி கணக்கில்தான் சினிமாவைப் பார்த்தேன். ஒரு அடி ஷாட், 10 அடி சீன் எனப் பேசிப்போம். ஆனா ஃப்ரேமாகப் பார்க்கும் பார்வை சி.ஜி. டெக்னிஷியனுக்கே உரியது. அப்படிப் பார்ப்பதால், தயாரிப்புச் செலவையும் கம்மி பண்ண முடியும்; காட்சியிலும் பிரம்மாண்டத்தைக் காட்ட முடியும். சிறப்பான படமெடுக்க நினைத்திருக்கும் இந்தக் குழுவிற்கு வாழ்த்துகள்” என்றார் இயக்குநர் S.P.ஜனநாதன்.