Shadow

சாகசமும் ஆபத்தும் – கார்த்திகேயன்

Karthikeyan

தரமான சின்ன பட்ஜெட் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, அதை போன்று மேலும் பல படங்களைத் தயாரிக்க ஊக்குவிக்கிறது. இந்த தர வரிசையில் தற்போது தயாராகி வரும் படம்தான் ‘கார்த்திகேயன் ‘.

Swathi

Magnus Cine prime pvt ltd மற்றும் Navya visual media என்ற நிறுவனத்தின் சார்பில் B.V.ஸ்ரீநிவாஸும், மல்லிகார்ஜுனனும் தயாரிக்கும் இந்தப் படத்தில் சுப்ரமணியபுரம் சுவாதி கதாநாயகியாக நடிக்கிறார். அவருக்கு இணையாக புது முகம் நிகில் நடிக்க, தமிழ்த்திரை உலகின் படங்களில் தூணாகத் திகழும் ஜெயபிரகாஷும் கிஷோரும் வலுவான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் மூலம் எல்லோருடைய பாராட்டுகளையும் அள்ளிய துளசி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சாகசமும் ஆபத்தும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை குறித்த படம் ‘கார்த்திகேயன்’. புதிய இயக்குநர் சந்து, கதைக்கேற்ப காட்சி அமைப்புடன் ரசிகர்களை நாற்காலியின் நுனிக்கு வரவழைக்கும் நவீன பாணியில் படத்தை இயக்கியுள்ளார் . ஜி. கார்த்திக் அந்தத் தருணங்களை நேர்த்தியாகப் படம்பிடித்து உள்ளார். சேகர் சந்திரா காட்சி அமைப்புக்கேற்ப இசை அமைத்துள்ளார். இறுதி கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் உள்ள, இந்த ஜனரஞ்சகமான படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது .

நடிகர்கள்:

>> ஸ்வாதி
>> நிகில்
>> கிஷோர்
>> ஜெயப்ரகாஷ்
>> பரணி ராவ்
>> ரமேஷ்
>> துளசி
>> ராஜா ரவீந்திரா
>> ப்ருத்வி
>> பிரவீன்
>> சத்யா
>> ஜோகி நாயுடு

பணிக்குழு:

>> கதை, திரைக்கதை, வசனம் – M.சந்து
>> தயாரிப்பு – B.V.ஸ்ரீநிவாஸ்
>> இணை தயாரிப்பு – P.சாய் சத்யநாராயணன் & G.மல்லிகார்ஜுனா
>> தயாரிப்பு எக்ஸ்க்யூட்டிவ் – A.சம்பத்
>> இசை – சேகர் சந்திரா
>> ஒளிப்பதிவு – G.கார்த்திக்
>> படத்தொகுப்பு – கார்த்திக் ஸ்ரீநிவாஸ்
>> வசனம் – பாரது ஷிவா சண்முகம்
>> பாடல் – நா. முத்துக்குமார்
>> அடிஷ்னல் திரைக்கதை – D.கார்த்திக் வர்மா
>> கலை – சஹி சுரேஷ்
>> உடை – K.ராமகிருஷ்ணா
>> ஒப்பனை – ஸ்ரீனு
>> ஸ்டில்ஸ் – B.ஸ்ரீநிவாஸ்
>> உடை வடிவமைப்பாளர் – ஹரிகேஷ்
>> சி.ஜி. (கணினி வரையியல் ) – ஈஷ்வர் (Srushti VFX)
>> பப்ளிசிட்டி டிசைனர் – அனில் & பானு