Shadow

ஜெயகாந்தன்

மாயலோகத்தில்..

ஜெயகாந்தன்நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை ஜெயகாந்தன். 1950 – 60 கால கட்டத்தில் தமிழில் தோன்றிய இரண்டு மிகப்பெரிய எழுத்தாளர்களில் ஒருவர்.இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு ஜெயகாந்தன் பற்றிய அறிமுகம் அனேகமாகத் தேவைப்படாது என்றுதான் தோன்றுகிறது. 

பாரதியாரையும் புதுமைப்பித்தனையும் ஆதர்சமாகக் கொண்டு ஐம்பதுகளில் ஆரம்பத்திலிருந்து பல எழுத்தாளர்கள் தோன்றினார்கள். ஜெயகாந்தனும் அப்படித்தான்.ஒரு கால கட்டத்தில் ஜெய காந்தனை ஆதர்சமாகக் கொண்டு எழுதத் தலைப் பட்டவர்களும் உண்டு. ஜெய காந்தனின் இயற்பெயர் டி.முருகேசன். தண்டபாணிப் பிள்ளை முருகேசன்.1934 ல் கடலூரை அடுத்த மஞ்சக் குப்பம் என்கிற ஊரில் பிறந்தவர்.

படிப்பில் அதிக நாட்டமில்லாமல் சிறு வயதிலேயே சென்னை வந்து சேர்ந்தார்.சென்னையில் அடித்தட்டு மக்களிடையே வாழவும்,அவர்களுடைய வாழ்க்கையைத் தானும் அனுபவிக்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது.வறுமை வாழ்க்கையில் பல பாடங்களை அவருக்குப் படிப்பித்தது.

கம்யூனிச இயக்கத்தோடு தொடர்பு ஏற்பட்டது.கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் அதன் செல்லப் பிள்ளை போல் வளர்ந்தார்.ஜீவானந்தம்,பால தண்டாயுதம் போன்ற மிகப் பெரிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் அன்புக்கு ஆளானார்.கம்யூனிஸ்ட் கட்சியே இவருக்கு வாழ்க்கையை,உலகத்தைப் புரிந்து கொள்வதற்கான கல்லூரியாக அமைந்தது.

தனது 16வது வயதில் இவர் தனது முதல் சிறுகதையை எழுதினார்.அக்கதை `செள பாக்கியம் ‘ என்கிற பத்திரிகையில் வெளி வந்ததாக ஒரு குறிப்பிலிருந்து அறிய முடிகிறது.

இவரது ஆரம்ப காலக் கதைகள் அனைத்தும் வ.விஜய பாஸ்கரனின் `சரஸ்வதி’ இதழில் பிரசுரம் கண்டது.`சரஸ்வதி’ பத்திரிகை தமிழுக்கு மிகச்சிறந்த சில எழுத்தாளர்களை அளித்திருக்கிறது.அத

நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை ஜெய காந்தன்.1950–60 கால கட்டத்தில் தமிழில் தோன்றிய இரண்டு மிகப்பெரிய எழுத்தாளர்களில் ஒருவர்.இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு ஜெய காந்தன் பற்றிய அறிமுகம் அனேகமாகத் தேவைப்படாது என்றுதான் தோன்றுகிறது. .

பாரதியாரையும்,புதுமைப்பித்தனையும் ஆதர்சமாகக் கொண்டு ஐம்பதுகளில் ஆரம்பத்திலிருந்து பல எழுத்தாளர்கள் தோன்றினார்கள்.ஜெய காந்தனும் அப்படித்தான்.ஒரு கால கட்டத்தில் ஜெய காந்தனை ஆதர்சமாகக் கொண்டு எழுதத் தலைப் பட்டவர்களும் உண்டு.

ஜெயகாந்தனின் இயற்பெயர் டி..முருகேசன்.தண்டபாணிப் பிள்ளை முருகேசன். 1934 இல் கடலூரை அடுத்த மஞ்சக் குப்பம் என்கிற ஊரில் பிறந்தவர்.

படிப்பில் அதிக நாட்டமில்லாமல் சிறு வயதிலேயே சென்னை வந்து சேர்ந்தார்.சென்னையில் அடித்தட்டு மக்களிடையே வாழவும்,அவர்களுடைய வாழ்க்கையைத் தானும் அனுபவிக்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது.வறுமை வாழ்க்கையில் பல பாடங்களை அவருக்குப் படிப்பித்தது.

கம்யூனிச இயக்கத்தோடு தொடர்பு ஏற்பட்டது.கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் அதன் செல்லப் பிள்ளை போல் வளர்ந்தார்.ஜீவானந்தம்,பால தண்டாயுதம் போன்ற மிகப் பெரிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் அன்புக்கு ஆளானார்.கம்யூனிஸ்ட் கட்சியே இவருக்கு வாழ்க்கையை,உலகத்தைப் புரிந்து கொள்வதற்கான கல்லூரியாக அமைந்தது.

தனது 16வது வயதில் இவர் தனது முதல் சிறுகதையை எழுதினார்.அக்கதை `செள பாக்கியம் ‘ என்கிற பத்திரிகையில் வெளி வந்ததாக ஒரு குறிப்பிலிருந்து அறிய முடிகிறது.

இவரது ஆரம்ப காலக் கதைகள் அனைத்தும் வ.விஜய பாஸ்கரனின் `சரஸ்வதி’ இதழில் பிரசுரம் கண்டது.`சரஸ்வதி’ பத்திரிகை தமிழுக்கு மிகச்சிறந்த சில எழுத்தாளர்களை அளித்திருக்கிறது.அதில் குறிப்பிடும்படியானவர்களாக ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், கிருஷ்ணன் நம்பி,டொமினிக் ஜீவா போன்றவர்களைக் கூறலாம்.

`சரஸ்வதி’ இதழில் இவர் எழுதிக் கொண்டிருந்த காலத்தில்தான் இவரை தீவிர வாசகர்கள் அறியத் துவங்கினார்கள்.`சரஸ்வதி’ இதழில் வெளிவந்த `டிரெடில்’ என்கிற கதையின் மூலம்தான் இக்கட்டுரையாளருக்கு முதன் முதல் ஜெயகாந்தனை வாசிக்கும் அனுபவம் கிடைத்தது.இவர் `சரஸ்வதி’ யில் எழுதி வந்த காலத்தில் இவரைப் பற்றி வெகு ஜன வாசகர்கள் எவரும் அறிந்திருக்கவில்லை.

ஒரு சமயம் இவரது சிறு கதை ஒன்று பிரபலமாக இருந்த `ஆனந்த விகடன்’ இதழில் முத்திரைக் கதையாக வெளி வந்தது.வாசகர்களுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது.பிறகு ஆனந்த விகடனில் தொடர்ந்து எழுதும் வாய்ப்பை விகடன் இவருக்கு அளித்து, எவருக்கும் அது வரை கொடுக்கப் படாத சன்மானத்தையும் தொடர்ந்து ஆனந்த விகடன் வழங்கியது.வெகு ஜன வாசகர்களிடையே இப்போது ஜெயகாந்தன் நன்கு அறியப் படலானார்

ஆனந்த விகடனில் கதைகள் வெளிவர ஆரம்பித்த பிறகு ஜெயகாந்தன் தனது எழுத்துகளில் வெகு ஜன வாசகர்களின் ரசனையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டி வந்தது தவிர்க்க முடியாதது.

என்றாலும் இவர் தொடர்ந்து அடித்தட்டு மக்கள் ,பெண் உரிமை போன்றவற்றிற்காக எழுத்தின் வாயிலாக குரல் கொடுத்துக் கொண்டே வந்தார்.

சிறுகதைகளிலும் புதினங்களிலும் மரபுகளைத் தயவு தாட்சண்யமின்றி உடைத்தெறிவார். இவரது எழுத்து காட்டாற்று வெள்ளம் போல் கட்டுக் கடங்காது பாய்ந்து வரும்.

ஏராளமாக இவர் எழுதி இருந்தாலும் சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், பாரீஸுக்கு போ, சுந்தர காண்டம், உன்னைப் போல் ஒருவன் போன்ற புதினங்கள் குறிப்பிடத்தக்கவை.

சினிமாவுக்குப் போன சித்தாளு,கை விலங்கு,கோகிலா என்ன செய்து விட்டாள் போன்ற குறு நாவல்களும் பெரிதும் பேசப் பட்டன.

முதல் சிறு கதைத் தொகுப்பு`ஒரு பிடி சோறு’ .இப்போது இவரது 134 சிறுகதைகள் ஒரு தொகுப்பாக சுமார் 1700 பக்கங்களுடன் கவிதா வெளியீடாக வெளி வந்துள்ளது.

சிறு கதைகள், புதினங்கள் தவிர ஏராளமான கட்டுரைகளும் எழுதி அவைகள் தொகுப்பாக வெளிவந்திருக்கின்றன. `ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’, ‘ஒரு பிரஜையின் குரல்’, ‘சபை நடுவே’, ‘ஒரு இலக்கியவாதியின் கலை உலக அனுபவங்கள்’ இவற்றில் முக்கியமானவை.

சினிமாவுக்காக முதன் முதலில் ` பாதை தெரியுது பார்’ என்கிற திரைப் படத்தில் ஒரு பாடல் எழுதினார்.

தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் போதினிலே,
சிட்டுக் குருவி ஆடுது – தன்
பெட்டைத் துணையைத் தேடுது

என்ற பாடலை எழுதினார். இப்பாடல் மிகவும் பிரபலமாயிற்று.

1965இல் ஆசிய ஜோதி பிலிம்ஸ் என்கிற படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து `உன்னைப் போல் ஒருவன்’ என்கிற தனது நாவலைப் படமாக்கினார். இதன் தயாரிப்பு, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புக்களையும் ஜெயகாந்தனே ஏற்றுக் கொண்டார். நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த பிரபாகரன், காந்திமதி போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். போதிய திரைப்பட அனுபவம் இல்லாமலிருந்தும் கூட கதையின் வலுவினால் பாராட்டுதல்களைப் பெற்றதோடு மத்திய அரசின் அகில இந்திய நற்சான்றிதழை அந்த வருடத்தின் மூன்றாவது சிறந்தபடத்திற்காகப் பெற்றது.

அடுத்ததாக `யாருக்காக அழுதான்’. இதுவும் ஆசிய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு தான்.ஜெய காந்தனின் இக்கதைக்கு வசனம்,இயக்கம் இரண்டுமே இவர் பொறுப்பு. நாகேஷ்,கே.ஆர். விஜயா நடித்த படம். இப்படம் நாகேஷுக்கு மிகப் பெரிய நடிகர் என்கிற பெயரை வாங்கிக் கொடுத்தது.

1969 இல் இவரது குறு நாவல்` கை விலங்கு’ காவல் தெய்வம் என்கிற பெயரிலும்,1977 ல்`சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்கிற புதினமும் தயாரிக்கப்பட்டு வெளி வந்தன.` சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்திற்காக அந்த வருடத்தின் மிகச்சிறந்த நடிகை என்னும் பரிசு மத்திய அரசால் நடிகை லஷ்மிக்கு வழங்கப்பட்டது.

1978இல் இவரது கருணையினால் அல்ல என்கிற கதை `கருணை உள்ளம்’ என்கிற பெயரிலும்,இதே ஆண்டு `ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ கதையும் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டு வெளிவந்தன. இவை எல்லாவற்றிற்கும் வசனம் எழுதியவர் ஜெயகாந்தன்.

2001இல் தயாரிக்கப் பட்டு, 2003 இல் வெளி வந்த`ஊருக்கு நூறு பேர்’ திரைப்படத்திற்கு 2001இன் சிறந்த மாநிலத் திரைப் பட விருது வழங்கப் பட்டது. கதை,வசனம் ஜெயகாந்தன்.

ஜெயகாந்தன் அடிப்படையில் ஒரு இலக்கியவாதி. தீவிர இலக்கியப் பரப்பில் இவரைப் போல் வெற்றியடைந்தவர்களைச் சொல்வது கடினம். ஆனாலும் திரைப்படத் துறையிலேயே இயங்கி வந்த பல்வேறு ஆளுமைகளும் சாதிக்கமுடியாத யதார்த்தவாதக் கதைகளைப் படமாக்கி வெற்றியும் பெற்றிருக்கிறார் என்பது பெருமையான காரியம்.

இலக்கியத் துறையில் இவர் பெறாத விருதுகளே கிடையாது. நேரு விருது,ராஜ ராஜன் விருது, சாகித்ய அகாடமி விருது, இந்தியாவின் ஆகப் பெரிய இலக்கிய விருதான ஞான பீட விருது ஆகிய அனைத்தையும் பெற்றிருக்கும் இவர் சென்ற ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி காலமானார்.

– கிருஷ்ணன் வெங்கடாசலம்