Shadow

தஞ்சை ‘கேவ்மிக் யு ஆரி’

Jigarthanda HD image

“டீசரும் ட்ரெயிலரும் பார்த்துட்டு.. யாருய்யா ஒளிப்பதிவு பண்ண கேவ்மிக்? வாயில் பெயரே நுழையலையே எனச் சொன்னாங்க. தென்னிந்தியாவில் இருந்து வரப் போகும் இன்னொரு மிகப் பெரிய கேமிரா மேனாக கேவ்மிக் இருப்பார். இந்தப் படம் வெளிவந்த பின் அனைவரது வாயிலும் அவரது பெயர் சுலபமாக வந்துடும்” என்றார் நடிகர் சித்தார்த்.

Gavemick U Ary“மஸ்த்ரம் என்ற ஹிந்திப் படத்திற்கு ஒளிப்பதிவு பண்ணேன். அதைப் பார்த்துட்டுதான் கார்த்திக் சுப்புராஜ் கூப்பிட்டார். இது எனது இரண்டாவது படம். தமிழில் முதற்படம்” என்றார் கேவ்மிக் யு ஆரி. தமிழ் நன்றாகப் பேசுகிறார்.

காரணம் கேவ்மிக் தஞ்சாவூர்க்காரர். பாண்டியிலுள்ள தனது தாத்தாவின் புகைப்பட ஸ்டூடியோவில் அதிக நேரம் செலவழித்த கேவ்மிக், ஃபோட்டோக்ராஃபி மீதிருந்த தனது காதலை உணர்ந்துள்ளார். சினிமேட்டோகிராஃபிக்காக படித்த இவர், 2001 முதல் சந்தோஷ் சிவனின் முதன்மை அசிஸ்டன்ட் கேமிரா மேனாக பணி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஒளிப்பதிவு வித்தியாசமாக இருக்கணும்னு நினைச்சேன். ஆனா எப்படிப் பண்றதுன்னு தெரியலை. ஆனா கேவ்மிக், ஒவ்வொரு ஃப்ரேமையும் செதுக்கியிருக்கார். ஜிகர்தண்டா கண்டிப்பாக ஒரு விஷூவல் ட்ரீட்டாக இருக்கும்” என்றார் கார்த்திக் சுப்புராஜ் மிக நம்பிக்கையுடன்.