Shadow

நெருப்பு சூறாவளி

நெருப்புச் சுழல் Fire Whirl

காடுகளில் மரங்கள் அல்லது காய்ந்த புற்கள் ஒன்றோடு ஒன்று உரசும் போது தீ பற்றிக் கொள்ளும். இத்தகைய காட்டுத் தீ மிகவும் ஆபத்தான ஒன்று.

 

சமயங்களில் காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலையைப் பொறுத்து இந்த காட்டுத் தீ, நெருப்பு பந்தாக உருவெடுத்து நெருப்புச் சுழலாய் மாறும். காற்றின் சுழற்சியால் செங்குத்தாய் உருவாகும் இத்தகைய தீப் பந்துகள்  சமயங்களில் 30 முதல் 200 அடி உயரமும், சுமார் 10 அடி அகலமும் கொண்ட சூறாவளியாக மாறிவிடும். காற்றின் திசை மற்றும் வேகத்தை பொறுத்து இவை அதிக நேரம் நீடிக்கும்.

இத்தகைய நெருப்புச் சூறாவளியின் வெப்பம் மிகவும் அதிகமாய் இருக்கும். இதனால் இது பயணிக்கும் பாதையில் உள்ள மரங்கள், செடிகள் எல்லாம் சொற்ப நேரத்தில் தீயில் கருகிப் போகும்.

மிகவும் குறுகிய நேரத்தில் பேரழிவை உண்டாக்கிடும் தன்மையுடையது நெருப்புச் சூறாவளி. மரங்கள் செடிகள் மட்டும் இல்லாமல் காட்டில் வசிக்கும் பறவைகள், விலங்குகள், பூச்சியினங்கள் எல்லாம் கொத்துக் கொத்தாய் செத்து மடிந்து போகும்.

[youtube]http://www.youtube.com/watch?v=G2173580ju0[/youtube]

Leave a Reply