
1931இல் பேச ஆரம்பித்தது தமிழ்த் திரைப்படங்கள். ஆரம்ப கால திரைப்படங்கள் அனைத்தும் புராண இதிகாசக் கதைகளையே உள்ளடக்கியதாக இருந்தன. இந்நிலையில், தமிழ்த்திரையின் முதல் சமூகப் படமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட திரைப்படம் ‘மேனகா’. என்.எஸ்.கிருஷ்ணன் அறிமுகமான இத்திரைப்படத்தைத் தயாரித்தவர்கள் டி.கே.எஸ்.சகோதரர்களின் ‘ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீஸ் கம்பெனி’. இது 1934இல் வெளிவந்தது. இக்கதையின் ஆசிரியர் வடுவூர் துரைசாமி ஐயங்கார். இவர் அக்காலத்தில் வெகுஜன ரசிகர்களால் நன்கு படிக்கப்பட்ட பல துப்பறியும் நாவல்களின் ஆசிரியர். எனவே திரைப்படம் சென்ற முதல் எழுத்தாளர் என்கிற பெருமை இவருக்கே உரியது. இவரைத் தொடர்ந்து பல எழுத்தாளர்கள் திரைத்துறைக்குள் நுழைந்தார்கள்; அல்லது அந்த எழுத்தாளர்களின் படைப்புக்கள் திரையில் பயன்படுத்தப்பட்டன.
ஆரம்ப காலங்களில் திரைத்துறையில் நடப்பவைகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டன. படப்பிடிப்பு நிலையங்களில் என்ன நடக்கிறதென்பது எவருக்கும் புரியாது. ஏதோ நடந்து கொண்டிருப்பது போலிருக்கும். ஆனால் என்னவென்றே புரியாத ஒரு புதிர் நிறைந்த மாயலோகமாகத்தான் இருந்தது அது.
இந்த மாயலோகத்தினுள் நுழைந்த அல்லது மாயலோகத்தினால் எடுத்துக் கொள்ளப்பட்ட பண்டைய எழுத்தாளர்கள் பலரது திரைப்பணியை விளக்கமாகக் கூறுகிறது இந்த ‘மாயலோகத்தில்’ எனும் கட்டுரைத் தொடர்.
தொடர்ந்து படியுங்கள்!
5. இளங்கோவன்
8. பாரதிதாசன்
10. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
11. மகாகவி பாரதியார்
12. கவியோகி சுத்தானந்த பாரதியார்
13. புதுமைப்பித்தன்
14. சி.என். அண்ணாதுரை (அறிஞர் அண்ணா)
15. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை
16. விந்தன்
17. அரு.ராமநாதன்
18. அகிலன்
19. தி.ஜானகிராமன்
21. ஜெயகாந்தன்
22. இறுதியாகச் சிலர்
– கிருஷ்ணன் வெங்கடாசலம்