Shadow

ரெமோ – ஏன்? யார்? எப்படி?

AM Studios Launch
REMO First Look Launch

“ஒரு நல்ல டைட்டில சொல்றவங்களுக்கு 20,000 என அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் கிட்டச் சொன்னோம். ஒண்ணும் தேறலை. ‘ஐ-ஃபோன் 6 எஸ்’ தர்றோம் என்று கூடச் சொல்லிப் பார்த்தாச்சு. ‘நெருப்புடா’ பாடின நம்ம அருண்ராஜா காமராஜ்தான் ரெமோ எனத் தலைப்பைச் சொன்னார். ‘நல்லாயிருக்கே ஏன்?’ எனக் கேட்டதுக்கு, “அந்நியன்ல ரெமோவும் காதலுக்காக வேஷம் போட்டுப் போவார்” எனச் சொன்னார். எங்களுக்கும் ரோமியோ போல் கேட்ச்சியா டைட்டில் தேவைப்பட்டது. அதுவுமில்லாம ரெமோ ஆல்ரெடி சக்சஸான ஒரு பெயர்” என்றார் சிவகார்த்திகேயன்.

“இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் செகெண்ட் ஹீரோயின் தான். சிவகார்த்திகேயன் தான் ஃபர்ஸ்ட் ஹீரோயின்” என்றார் சதீஷ். அதை ஆமோதித்த கீர்த்தி சுரேஷும், “ஆம், சதீஷ் சொன்னாப்ல இந்தப் படத்தில் நான் செகண்ட் ஹீரோயின்தான். நான் இதுவரை யாரைப் பார்த்தும் இப்படி என் வாழ்க்கையில் பொறாமைப்பட்டதே இல்லை” என்றார்.

“மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்த்தோம். அதன் பின் தான், பெண் வேடத்தில் நடிக்க தைரியம் வந்தது. இந்தக் கதையை நான் எட்டு முறை கேட்டேன். எனக்குச் சரியா வருமான்னு சந்தேகமாவே இருந்தது. இப்படியே பத்து மாசம் போயிடுச்சு. இந்தக் கேரக்டர்க்காக வெயிட் குறைச்சேன். 4 கிலோ குறைச்சேன், 6 கிலோ குறைச்சேன். அப்பப்ப ஜிம்முக்குப் போறதைலாம் நிறுத்தினேன். மேக்கப் டெஸ்ட் எடுத்தா, குண்டா இருந்தேன். கீர்த்தி சுரேஷ் கூட நின்னா, அவங்க அம்மா மாதிரி இருந்தேன். 10 கிலோ குறைச்சப்புறம் தான் பொண்ணு மாதிரி இருந்தேன்.

ஷூட்டிங் போனப்புறமும் லேசா ஒரு உறுத்தல் இருந்துட்டே இருந்துச்சு. பி.சி.ஸ்ரீராம் சார் கேமிராவில் என்னைப் பார்த்தப்புறம்தான், ‘யாருடா இந்தப் பொண்ணு அழகா இருக்கு? அட, நாம தான?’ என திருப்தி வந்துச்சு” என்றார் சிவகார்த்திகேயன்.