ரெமோ லட்டு
"என்னை இந்தப் படத்தில் நாயகியா நடிக்க வச்சா சரியா பொருந்தும்னு பரிந்துரை செய்தது பி.சி.ஸ்ரீராம் சார் தானென பாக்கி (பாக்கியராஜ் கண்ணன்) சொன்னார். அவருக்கு ரொம்ப நன்றி.
எங்கப்பாம்மா என்னைச் சுலபத்தில் பாராட்டிட மாட்டாங்க. ஆனால், திரையரங்கில் ரெமோ பார்த்துட்டு “லட்டு மாதிரி இருக்க!” எனப் பாராட்டினாங்க. இந்தப் பாராட்டு, பி.சி.ஸ்ரீராம் சாரோட கேமிரா மேஜிக்கால் தான் நடந்தது” என்றார் ரெமோ படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ்.
“என்னிடம் படத்தைப் பற்றிப் பேசுறவங்க, அந்த பிங்க் சேலையில் ரொம்ப அழகா இருந்தீங்க. எங்க வாங்குனீங்க எனக் கேட்கிறாங்க. ‘அடப்பாவிகளா! அதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்? காஸ்ட்யூமர் அனு பார்த்தசாரதி மேடமைக் கேளுங்க’ன்னு சொல்லிட்டு வர்றேன். அவ்ளோ அக்கறையாகப் பார்த்துப் பார்த்து எனக்கு எது நல்லாயிருக்கும்னு உடை வடிவமைத்துக் கொடுத்த அவங்களுக்கு நன்றி.
யாராச்சும் நான் அழகுன்னு சொன்னா...