“அஜித் சார், கிராமத்துப் பின்னணில படம் பண்ணி நாளாச்சு. இது மலையாளப் படத் தழுவலோ, ரஜினியின் முரட்டுக்காளை படத் தழுவலோ இல்லை. அஜித் சாருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அவரோட அந்த முகத்தை இந்தப் படத்தில் காட்டியிருக்கோம். படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. எல்லாத் தரப்பினருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் ஃபேமிலி என்ட்டர்டெயினராக இருக்கும்” என்றார் இயக்குநர் சிவா.
“அஜித் சாரோடவும், ஷிவா சாரோடவும் இது எனக்கு முதல்படம்” என மகிழ்ச்சியில் இருக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். படத்தின் தீம் மியூசிக் படத்திற்கான எதிர்பார்ப்பை அடுத்த கட்டதிற்கு நகர்த்தியுள்ளதாக இயக்குநர் சிவாவும் இசையமைப்பாளருக்கு நன்றியினைச் சொல்லிக்கொண்டார்.
“எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். எனக்கு அஜித் சார் படத்தில் வொர்க் பண்ணணும் என்பது தான் அந்தக் கனவு. அது நிறைவேறியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கேன். 110 நாள் ஷூட்டிங் வாழ்வில் மறக்கவே முடியாத நாட்கள்” என்றார் ஒளிப்பதிவாளர் வெற்றி.
“நான் வொர்க் பண்ண படத்திலேயே.. இந்தப் படம் தான் எனக்கு ரொம்ப திருப்தியளித்த படம் ரிஸ்க்கான ஷாட்களை எல்லாம் அஜித் சாரே, ‘நான் பண்றேன்’ எனச் சொல்லிப் பண்ணார். ‘நான் தான பெயர் வாங்குறேன். அப்போ நான் தான் செய்யணும்’ என சொல்லிட்டு செய்தார். எங்களுக்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஆனா சண்டைக் காட்சிகள் எல்லாம் நிறைவாக வந்திருக்கு” என்றார் ‘ஸ்டண்ட்’ சில்வா. ‘தல’ பொங்கலுக்குப் போட்டியாக வெளிவரும் விஜயின் ‘ஜில்லா’ படத்திற்கும் இவர் தான் சண்டைக் காட்சிகள் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 10 முதல் திரையரங்கில், இரண்டு மணி நேரம் முப்பத்தைந்து நிமிடங்கள் ‘தல’ பொங்கல் கொண்டாட்டம் சூடு பிடிக்கத் தொடங்கிவிடும்.