32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

1000 பேபிஸ் | டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் சஸ்பென்ஸ் தொடர்

Dinesh R சேலம் Published: 23/08/2024 1 நிமிட வாசிப்பு Updated: 24/08/2024 OTT
எழுத்து அளவு:

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “1000 பேபிஸ்” தொடர், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஐந்தாவது மலையாள ஒரிஜினல் சீரிஸாகும். அடையாளத்தின் மீதான சிக்கல்கள் மற்றும் விதியின் விளையாட்டை, பல எதிர்பாராத் திருப்பங்களுடன் சொல்கிறது. தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

“1000 பேபிஸ்” தொடரில் நீனா குப்தாவும், ரகுமானும் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் நஜீம் கோயா இயக்கியுள்ளார். நஜீம் கோயா, அரூஸ் இர்பான் இணைந்து வசனம் எழுதியுள்ளார்கள். ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் சார்பில், ஷாஜி நடேசன் மற்றும் ஆர்யா ஆகியோர் இந்தத் தொடரைத் தயாரித்துள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நீனா குப்தா மற்றும் ரகுமானுடன் இணைந்து, சஞ்சு சிவராம், ஜாய் மேத்யூ, ராதிகா ராதாகிருஷ்ணன், அஷ்வின் குமார், இர்ஷாத் அலி, ஷாஜு ஸ்ரீதர், காலேஷ் ராமானந்த், ஸ்ரீகாந்த் முரளி, ஜேம்ஸ் ஆலியா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஃபைஸ் சித்திக்கின் அற்புதமான ஒளிப்பதிவிலும், சங்கர் ஷர்மாவின் வசீகரிக்கும் இசையிலும், தனுஷ் நாயனாரின் சிறந்த ஒலி வடிவமைப்பிலும், ஃபசல் A. பேக்கரின் ஒலி கலவையிலும், “1000 பேபிஸ்” சஸ்பென்ஸ் தொடராக உருவாகியுள்ளது. விரைவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் “1000 பேபிஸ்” தொடர் வெளியாகவுள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.