இந்தியர்களின் அறிவில் உதித்தது. கலைகளும் இலக்கியங்களும் தான் பௌதீக வாழ்க்கைக்கு தேவையான எதையும் ஆதிகால இந்தியர்கள் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. அதை பற்றிய அறிவு என்பதே அவர்களுக்கு இருந்ததில்லை என்றும் சிலர் பேசுகிறார்கள் இப்படி பேசுவது சரியா? முறையா? என்பதை பற்றி கூட அவர்கள் சிந்திப்பது இல்லை. வெள்ளைகாரர்களையும், அயல் நாட்டினரையும் கால் பிடித்தே பழக்கப்பட்டவர்களால். இந்தியர்களின் அறிவு கம்பீரத்தை புரிந்து கொள்ளவும் முடிவதில்லை, தெரிந்து கொள்ளவும் முயலவில்லை.
எங்கள் அருகில் இருந்த வேறொரு நண்பரும் இவர் சொல்வது சரி தான். நமது குழந்தைகளின் பாடப்புத்தகத்தில் கூட இந்தியர்களின் கண்டுபிடிப்பு பற்றி எந்த குறிப்பும் இல்லையே ரசாயண உயிரியல் என்பவைகள் கூட வெளிநாட்டினர் கண்டு பிடித்து சொன்னதாக தானே இருக்கிறது என்று பக்கவாத்தியம் பாடினார். அவர்கள் இருவரின் பேச்சும் எனக்கு வேதனையாக இருந்தது. இவ்வளவு பெரியவர்களாக வளர்ந்த பின்னும் நமது தேசத்தை பற்றிய அடிப்படை ஞானம் கூட இல்லாமல், தெரியாமல், தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்களே என்று ஆதங்கம் ஏற்பட்டது.
இந்தியர்கள் ராசாயணத்தை பற்றிய அறிவை எந்த காலத்தில் பெற்றார்கள் என்று எவராலும் கால நிர்ணயம் செய்து கூற முடியாது. காரணம் அவ்வளவு பழங்காலம் முதலே ராசாயணத்தை பற்றிய முழுமையான அறிவை இந்தியர்கள் பெற்றிருந்தார்கள். யஜூர் வேதத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, காரியியம், வெள்ளியீயம் ஆகிய உலோகங்களின் தன்மைகள் விரிவாக விளக்கப்பட்டு இருக்கிறது என்றால் வேதகாலத்திற்கு முன்பே அந்த உலோகங்களை பற்றிய அறிவு இந்தியர்களுக்கு இருந்தது என்பது தானே உண்மையான அர்த்தமாகும்.
ரிக் வேதத்தில் தாவரங்களில் இருந்து பெற கூடிய மருந்துகளை பற்றிய விவரங்களை அறியலாம். அதர்வண வேதத்தில் மன நோயை நீக்க கூடிய மருந்துகளை உலோக கலப்பால் செய்யும் விவரத்தையும் காண முடிகிறது. வேதகாலத்தை விட்டு வரலாற்று காலத்திற்கு வந்து ஆதாரங்களை தேடி பார்த்தால் இந்தியர்களின் தத்துவ ஞான அறிவை மட்டுமல்ல தொழில் நுட்ப அறிவையும் படம் பிடித்து காட்டக்கூடிய கல்வெட்டு ஆதாரங்கள் ஏராளமாக கிடைக்கின்றன. பழங்கால சுவடிகளும் எண்ணற்ற தகவல்களை தருகின்றன.
உதாரணமாக டில்லிக்கு அருகிலுள்ள பத்து டன் கனமுள்ளதும் 24 அடி உயரமுள்ளதுமான சரணாத் சிம்ம துணையும் பூரி ஜெகநாதரின் ஆலயத்திலுள்ள பிரம்மாண்டமான இரும்பு விட்டங்களையும் சோமநாதர் ஆலயத்திலுள்ள மிகப்பெரிய இரும்பு கதவுகளையும், தஞ்சை கோட்டை சுவரிலுள்ள இரும்பு பீரங்கியையும் எடுத்து காட்டலாம்.
டெல்லி இரும்பு துணை பற்றி பேராசியர் பர்குஜன் என்ற ஆஸ்திரேலிய நாட்டு அறிஞர் அந்த தூணில் செதுக்கப்பட்ட எழுத்துகளில் இருந்து அதை கி.பி. 365 முதல் கி.பி. 400 வரையில் எதாவது இடைப்பட்ட காலத்தில் குப்த அரசர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரையில் ஐரோப்பாவிலோ அல்லது உலகில் எந்த மூலையிலோ இவ்வளவு பெரிய தூண் செய்யப்பட்டதாக தெரியவில்லை. 1600 வருடங்களானாலும் மழையில், காற்றில் வெய்யிலில், பனியில் கிடந்தாலும் ஒரு சிறிதளவு கூட துரு ஏறாத அதிசயத்தை காணும் போது பழங்கால இந்தியர்களின் தொழில் நுட்ப அறிவை கண்டு வியக்க மட்டும் தான் முடிகிறது என்கிறார்.
தாவரம் மற்றும் இயற்கை பொருட்களில் இருந்து உருவாக்கப்பட்ட ஆயுர்வேத மருந்துகள் உடனடியாக மனித உடலில் செயலாற்றுவதற்கு ராசாயணம் பெருந்துணை செய்தது. மேலும் சரக சம்ஹீதை, சுசுருத சம்ஹீதை ஆகிய முதல் மருத்துவ நூல்களில் எந்த மருந்தோடு எத்தகைய ரசாயணம் எவ்வளவு கலக்க வேண்டுமென்று துல்லியமாக கூறப்பட்டுள்ளது.
சற்றேக்குறைய வேதகால முடிவில் தோன்றிய இவ்விரு நூல்களுக்கு பிறகு வந்த ரசாயணம் பற்றிய நூலில் புகழ் வாய்ந்தது வாக்படர் எழுதிய அஸ்டாங்ஹிருதயம் என்ற நூலாகும். இது தவிர ரசாணர்வனம், ரசரத்னாகரம், ரசரத்னா சமுக்கியம், ரஜேந்திர சிந்தாமணி ஆகிய நூல்களும் இந்தியர்களின் ரசாயண அறிவை பற்றிய தெளிவை இன்றும் நமக்கு பறை சான்றிக் கொண்டிருக்கிறது. இந்த நூல்களில் ஒரு உலோகத்தை இன்னொரு உலோகமாக மாற்றும் வழிவகை கூறப்பட்டுள்ளது.
நம்மை பார்த்து மற்றவர்கள் தங்கத்தின் மீது மோகம் கொள்ளலாமே தவிர மற்றவர்களை பார்த்து நாம் கற்று கொண்டோம் என்பது இந்த விஷயத்தில் கிடையாது. தங்கத்தை அழகான ஆபரணங்களாக மட்டுமல்ல நாட்டின் பொருளாதார முதுகெலும்பாகவும் கொள்ள துவங்கியது இந்தியாவில் தான்.
இதனால் தான் இந்திய ரசவாதிகள் சுலபமாக தங்கம் மக்களுக்கு கிடைக்க இரும்பை பொன்னாக்கும் கலையில் விற்பன்னர்களாக திகழ்ந்தார்கள். தகரத்தை தங்கமாக்கும் கலையை அதிகமான நபர்களுக்கு அவர்கள் கற்று கொடுத்திருந்தால் இன்று உங்கள் வீட்டு குளியல் தொட்டியை கூட சிமெண்டால் செய்வதை விட மிக குறைந்த விலைக்கு தங்கத்தில் செய்து விடலாம்.
இன்னும் ஒரு உண்மையை இந்த இடத்தில் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். இன்று ஐரோப்பிய நாடுகள் ரசாயண துறையில் பெற்றிருக்கும் வளர்ச்சிகள் அனைத்திற்கும் இந்தியா தான் மூல காரணம் என்றால் அது மிகைப்படுத்தி கூறியதாக இருக்காது.
கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு பிறகு அரேபியர்களின் எழுச்சி கிரேக்க மற்றும் எகிப்தில் ஏற்பட்ட பிறகு இந்திய ரசாயண அறிவை அரபுக்களும் பயன்படுத்த துவங்கினர். ஹரூன் என்ற அரபு கலிபாவின் உத்தரவுப்படி சரக சம்ஹீதை, சுசுருத சம்ஹீதை, பதம், அஸங்கா, நிதான அஸ்டாங்கா போன்ற வடமொழி ரசாயண நூல்கள் அரபு மொழியில் பெயர்த்து எழுதப்பட்டது. அல்பெருனி என்ற இஸ்லாமிய அறிஞர் இந்த நூல்களை அரபு மொழியில் எழுதியுள்ளார்.