32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மோசடிக்கு 465

Dinesh R சேலம் Published: 21/12/2016 1 நிமிட வாசிப்பு Updated: 12/10/2017 சினிமா
எழுத்து அளவு:

465 movie

விஜய் டி.வி.யின், ‘கனா காணும் காலங்கள்’ மற்றும் ‘ஆபீஸ்’ தொடர்களில் நடித்துப் பரவலாக அறியப்படும் கார்த்திக்ராஜ், 465 எனும் படத்தில் நாயகனாக அறிமுகம் ஆகுகிறார். நாயகியாக நடிக்கும் நிரஞ்சனாவிற்குத் தமிழில் இது மூன்றாவது படமாகும்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இப்படத்தை எல்.பி.எஸ்.பிலிம்ஸ் சார்பாக, எஸ்.எல்.பிரபு தயாரிக்கிறார். படத்தின் கதையும் அவருடையதே!

“அடுத்து என்னென்னு ஜட்ஜ் செய்ய முடியாத ஃபாஸ்ட் திரைக்கதை தான் படத்தின் பலம். இது ஹாரர் கம் த்ரில்லர் படம். ட்ரெயிலரைப் பார்த்து ஒரு கதையை யூகிப்பீங்க. ஆனால், படம் அதற்கு நேர்மாறாக இருக்கும். இது நாங்க வேணும்னே திட்டமிட்டுச் செய்தது.

படத்தின் தலைப்பெல்லாம் முடிவு செய்த பிறகு, 465 என்ற எண்ணுக்கு ஏதேனும் பொருள் இருக்கின்றதா எனத் தேடினேன். ‘பவர் ஆஃப் ஏஞ்சல் & பாசிடிவ் எனர்ஜி (Power of Angel & positive energy)’ என்று அர்த்தம் இருப்பது தெரிந்தது. தலைப்பு பாசிட்டிவாக அமைந்திருக்கே என மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால், 465 என்பது ஒரு ‘இந்தியன் பீனல் கோட்’ செக்ஷன் (மோசடிக்கான தண்டனையைச் சொல்லும் செக்ஷன்). படத்தின் கருவோடு சம்பந்தப்பட்டதால் அப்படியே உபயோகப்படுத்திக் கொண்டோம்” என்றார் நாயகன் கார்த்திக்ராஜ்.

எந்த இயக்குநர்களிடமும் பணி புரியாமலே இயக்குநராக அவதாரமெடுத்துள்ளார் ஸாய் ஸத்யம். அவரது திரைக்கதை, நிச்சயமாக ரசிகர்களைச் சுவாரசியப்படுத்தும் என நம்பிக்கையோடு தெரிவிக்கின்றனர் 465 படக்குழு.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.