Shadow

49ஓ – மழைப் பாடல்

49ஓ

மழைதான் நம் வாழ்வின் ஆதாரம் என்பதைக் குறிக்கும் வகையில் 49ஓ படத்தின் பாடல் ஒன்று இசையமைப்பாளர் கே இசையில், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில், “பொண்ணுங்களே இப்படித்தான்” என்ற பாடலைப் பாடிக் கவர்ந்த ஜெயமுர்த்தியின் குரலில், யுக பாரதியின் அருமையான வரிகளில் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. திரையில் கவுண்டமணி விவசாயியாகத் தோன்றி மழை வேண்டிப் பாடும் இப்பாடல் (சிங்கிள் ட்ராக்), இந்த மாதம் இறுதியில் 31ஆம் தேதி, ரேடியோ மிர்ச்சியில் வெளிவர உள்ளது. விரைவில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரம்மண்டம்மாக நடைப்பெற உள்ளது .பாடல் வரிகள் இதோ!!

அம்மா போல அள்ளித்தரும் மழைதான்,
அவ ஆதாரமா நின்னா இல்லை குறைதான்,
அவ நட்டு வச்ச நாத்தை எல்லாம் கதிர் ஆக்குறா,
எங்க புள்ள குட்டி அத்தனைக்கும் பசி ஆத்தறா!!