32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மகிழ்ச்சி வெள்ளத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்

Dinesh R சேலம் Published: 22/01/2018 2 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

Devi Sri Prasad with Kamal and Rajini

“தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் நடத்திய நட்சத்திரக் கலை விழாவில் நான் மேடையில் பாட்டுப் பாடிக் கொண்டே நடனமாடினேன். விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற்ற என்னுடைய நிகழ்ச்சியை, அனைத்துத் திரையுலக நட்சத்திரங்களுடன் முன் வரிசையில் அமர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் ரசித்துக் கேட்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பலரும் எழுந்து நின்று மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர். இது என்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அப்போது நான் மேடையிலிருந்து இறங்கி சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகனின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்த போது, அவர்கள் தங்களுடைய மத்தியில் என்னை அமர வைத்துக் கொண்டனர். புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொள்ளும் அற்புதமான வாய்ப்பும் கிடைத்தது. இது என்னுடைய வாழ்நாளில் இது வரை கிடைக்காத சந்தோஷம். அது கிடைத்தபோது பரவசமானேன். இந்த இரண்டு பேருடைய பாராட்டும் ஒரே நேரத்தில் கிடைத்தது வாழ்க்கையில் மறக்க முடியாத விசயமாகிவிட்டது” என்றார் இன்ப வெள்ளத்தில் மிதக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.

இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டில் தெலுங்கில் கைதி நம்பர் 150, நேனு லோக்கல், ராரண்டோய் வேடுக சூதம், துவ்வாட ஜெகந்நாதம், ஜெய ஜானகி நாயகா, ஜெய் லவ குசா, உந்நாதி ஒகட்ட ஜிந்தகி, மிடில் கிளாஸ் அப்பாயி என எட்டு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இந்த எட்டுப் படங்களும், அந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன. ‘ஒரே ஆண்டில் எட்டுப் படங்களுக்கு இசையமைத்து எட்டுப் படங்களின் பாடல்களையும் ஹிட்டாக்கிய ஒரே இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்’ என்று தெலுங்கு ஊடகங்கள் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளன.

அதே போல் ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களைப் பட வெளியீட்டிற்கு முன் வாரந்தோறும் சிங்கிள் சிங்கிள் ட்ராக்காக வெளியிடும் உத்தியைத் தெலுங்கில் ‘கைதி நம்பர் 150’ மூலம் தொடங்கி வைத்ததும் இவர் தான். இன்று அது அனைத்து மொழி திரைப்படங்களிலும் பிரபலமாகிவிட்டது. லிரிக் வீடியோஸில் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் புகைப்படத்தையும், கான்செப்ட்டையும், கிராஃபிக்ஸையும் இணைத்து வெளியிடுவதையும் தேவிஸ்ரீபிரசாத் தான் அறிமுகப்படுத்தினார் என்பதும் கவனிக்கத்தக்கது.

தற்போது இவர் தமிழில் ‘சாமி ஸ்கொயர்’ என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். பாடல்கள் அனைத்து மிக நன்றாக வந்திருக்கின்றன. படப்பிடிப்புத் தளத்தில் படத்தின் பாடலைக் கேட்ட படக்குழுவினர், இந்த ஆண்டின் ஹிட் ஆல்பங்களில், ‘சாமி ஸ்கொயர்’ கண்டிப்பாக இடம்பெறுமென்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் ஹேப்பியோ ஹேப்பி!

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.