32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஹாலோவீன்: 40 ஆண்டுகளாகியும் தொடரும் ஓர் அச்சுறுத்தல்

Dinesh R சேலம் Published: 23/10/2018 1 நிமிட வாசிப்பு Updated: 17/11/2018 அயல் சினிமா
எழுத்து அளவு:

Halloween-11---Curtain-Raiser

‘ஹாலோவீன்’ என்ற பெயரில், 40 வருடங்களுக்கு முன் வந்த படத்தின் 11வது பாகம் இது. இந்தப் பாகத்தின் விசேஷம் என்னவென்றால், 1978இல் வந்த முதல் பாகத்தின் நேரடித் தொடர்ச்சியாக இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இடையில் வந்த மற்ற பாகங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

1978 இல் வந்த ஹாலோவீன் படத்தில், மைக்கேல் மையர்ஸ் என்பவன், ஹாலோவீன் இரவு அன்று குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பேபிசிட்டர்களைக் கொல்கிறான். அவனிடம் இருந்து தப்பிய லாரீ ஸ்ட்ரோடை, 40 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கொல்ல வருகிறான் மைக்கேல் மையர்ஸ். ஆனால், இம்முறை லாரீ அம்முகமூடி கொலைக்காரனை எதிர்கொள்ள தயாராகவே உள்ளாள்.

105 நிமிடங்கள் கால அளவு கொண்ட படத்தின் முடிவில், மைக்கேல் மையர்ஸிடம் இருந்து லாரீ ஸ்ட்ரோட் தப்பினாளா என்பதற்கான விடையுடன் படடம் நிறைவுறுகிறது.

ஒன்பது வருடங்களுக்குப் பின் இத்தொடரின் அடுத்த படம் வருவதாலும், முதல் பாகத்தின் நேரடி தொடர்ச்சி என்பதாலும், படம் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இப்படம் ஹன்சா பிக்சர்ஸ் வெளியீடு.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.