32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

லண்டனில் நடந்த ஸ்ருதிஹாசனின் இசை நிகழ்ச்சி

Dinesh R சேலம் Published: 27/01/2019 2 நிமிட வாசிப்பு Updated: 02/02/2019 சினிமா
எழுத்து அளவு:

Sruthis london tour

தன்னுடைய 6 வயதில் தொடங்கிய இசைப் பயணத்தின் மீது கவனத்தைத் திருப்பியுள்ளார் நடிகையும் இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான ஸ்ருதி ஹாசன்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இதுவரை 100-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் தன்னுடைய திறமையால் மக்களைக் கவர்ந்த இவர், தன் வாழ்நாள் கனவான லண்டனில் இருக்கும் டரவ்படூர் (Troubadour) எனும் இசைக்கட்சேரி இடத்தலும் சமீபத்தில் பாடினார்.

இந்த வருடம் வெளிவர இருக்கும் அவரது சில சிங்கில் டிராக் பாடல்களை அவர் இந்நிகழ்ச்சியில் பாடினார்.

உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களில் சிலராகக் கருதப்படும் பாப் டைலான், எல்டான் ஜான், அட்லே, எட்ஸீரன் போன்றார் “The Troubadour ” எனும் இவ்விடத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்புகழ்பெற்ற அரங்கு1954இல் ஒரு Coffee House-ஆக தொடங்கப்பட்டது.

தி நெட் (The Ned ) என்ற பெயரில் லண்டனில் உள்ள இடத்தில் கடந்த வருடம் செப்டம்பரில் நடந்த ஸ்ருதி ஹாசனின் இசை நிகழ்ச்சி சிறப்பான விமர்சனங்களைப் பெற்றது.

மேலும் நியூ யார்கில் உள்ள மேடிஷன் அவென்யூவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி, 2018 ஆம் ஆண்டு நடந்த The Indian Day Parade எனும் உலகின் மிகப்பெரிய சுதந்திர தினக் கூட்டத்தில் இவர் முழங்கிய ‘வந்தே மாதரம்’ என்ற முழக்கம் அனைவரின் பாராட்டைப்பெற்றது. மேலும் இந்த நிகழ்வு அந்நாட்டு பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தியாகவும் இடம் பெற்றது.

சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி இருக்கும் இவரது இசை நிகழ்ச்சி வீடியோக்களை இணையத்தில் காணலாம்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.