32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சாணிக்காயிதம் – பொன்னியின் பழிவாங்கும் படலம்

Dinesh R சேலம் Published: 22/04/2022 2 நிமிட வாசிப்பு Updated: 16/07/2022 Teaser
எழுத்து அளவு:

சாணிக்காயிதம் படம், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவிலும், மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் மே மாதம் 6 ஆம் தேதி அன்று வெளியாகிறது.

ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள சாணிக்காயிதம் திரைப்படத்தினை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பொன்னி மற்றும் அவளது குடும்பத்தினருக்கு அநீதி இழைக்கப்படுகிறது, தலைமுறை தலைமுறையாக அக்குடும்பத்திற்கு நீடித்து வந்த சாபம் உண்மையாக மாறத் தொடங்கும்போது, ஒரு கசப்பான கடந்த காலத்தை தன்னோடு பகிர்ந்து கொண்ட சங்கையாவோடு இணைந்து எதிரிகளைப் பழிக்குப் பழி வாங்க ஆரம்பிக்கிறார். இதனைச் சுற்றியே இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பொன்னியாக கீர்த்தி சுரேஷும், சங்கையாவாக செல்வராகவனும் நடித்துள்ளனர். தெலுங்கில், சின்னி (Chinni) என்ற பெயரிலும், மலையாளத்தில் சாணிக்காயிதம் என்ற பெயரிலும் ஒளிபரப்பாகிறது.

அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியா கன்டென்ட் லைசென்ஸிங் தலைவர் மனீஷ் மெங்கானி, “ப்ரைம் வீடியோவில் நாங்கள் எப்போதுமே மொழி மற்றும் புவியியல் எல்லைகளைத் தாண்டி அனைவரையும் சென்றடையும் வகையிலான கதைகளைத் தேடிவருகிறோம். அதிகளவில் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் ‘சாணிக்காயிதம்’ திரைப்படத்தின் உலகளவிலான சிறப்புக் காட்சி வெளியீட்டுக்காக ப்ரைம் வீடியோ சித்தார்த் ரவிபதி மற்றும் அருண் மாதேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன், “சாணிக்காயிதம் மனதை உலுக்கும் ஒரு அழுத்தமான படைப்பு. மனதைக் கொள்ளை கொள்ளும் வகையிலான கதை சொல்லும் பாங்கு மற்றும் அற்புதமான நடிப்பு ஆகியவற்றை கொண்டுள்ள இந்தத் திரைப்படம் அதிரடி காட்சிகளை விரும்பும் ரசிகர்களை இறுதிவரை கட்டிப்போடும். வழக்கமான கதைகளை வழக்கத்திற்கு மாறாக ரத்தமும் சதையுமாக மயிர்க்கூச்செறியும் வகையில் மாறுபட்ட வடிவங்களில் சொல்வதில் நான் மிகவும் உற்சாகம் அடைகிறேன். பழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் ஒரு பெண்ணின் கதை இது.

திரைப்படத்தின் கிரியேட்டிவ் ப்ரொட்யூசர் சித்தார்த் ரவிபதி, “சாணிக்காயிதம் இதயத்தைக் கொள்ளை கொள்ளும் அதே அளவில் இதயத்தைக் கசக்கிப் பிழியும் ஒரு கதை. நீதியைத் தேடி அலையும் ஒரு பெண்ணின் வாழ்வை கண் முன் கொண்டுவருவதில் அருண் மாதேஸ்வரன் அற்புதமாக செயல்பட்டிருக்கிறார். கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரும் இந்தக் கதைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் நடித்தியிருக்கிறார்கள்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.