

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும், ஜீ5 ஒரிஜினல் வெப் சீரிஸ் “பேப்பர் ராக்கெட்”. 2022 ஜூலை 29 உலகமெங்கும் வெளியாகிறது.
மனதை இலகுவாக்கும் உணர்வுபூர்வமான தொடராக இந்தத் தொடர் உருவாகியுள்ளது. கடையிறுதி நோயால் (Terminal disease) பாதிக்கப்பட்ட நால்வர்கள் இணைந்து மேற்கோள்ளும் பயணத்தை அடிப்படையாகக் கொண்ட தொடர் இது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் இத்தொடரை தயாரித்துள்ளார். இத்தொடரின் ட்ரைலர் வெளியீட்டு படக்குழுவினர், பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
இயக்குநர் கிருத்திகா உதயநிதி, “பேப்பர் ராக்கெட் என் இதயத்திற்கு நெருக்கமான தொடர். இது எனக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளித்துள்ளது. படக்குழுவில் இணைந்த சினிமாவின் பெரிய நட்சத்திரங்களுடன், இந்த பேப்பர் ராக்கெட் ஒரு அற்புதமான இடத்தை வந்தடைந்துள்ளது. பெரும்பாலும், த்ரில்லர் வகை அடிப்படையிலான தொடர்கள் தான் ஓடிடி இயங்குதளங்களின் விருப்பமான தேர்வாக இருக்கும். ஜீ5 இந்தத் தொடரில் ஆர்வம் காட்டியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதைச் செய்ததற்காக ஜீ5 குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. இதுவரை நான் பணியாற்றிய தயாரிப்பாளர்களில், சிறந்த தயாரிப்பாளர் பெண்டெலா சாகர் தான். நடிகர்கள் தங்களது சிறப்பான நடிப்பால் இந்தத் தொடரை உயர்த்தியுள்ளனர். தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் சிறந்த பங்களிப்புகளால் அதை அழகுபடுத்தியுள்ளனர். குறிப்பாக, பேப்பர் ராக்கெட்டில் ஒலி வடிவமைப்பு முக்கிய பங்கு வகித்துள்ளது. தபஸ் நாயக்கின் அற்புதமான பணிக்காக அவருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். பேப்பர் ராக்கெட் பார்வையாளர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்” என்றார்.
நடிகர் உதயநிதி ஸ்டாலின், “படப்பிடிப்பு நடக்கும் போது, கிருத்திகாவின் தனிப்பட்ட வாழ்கையில் பல சிக்கல்கள் இருந்தாலும், அதைத் தாண்டி இந்தத் தொடரை முடித்துள்ளார். கிருத்திகா இந்தக் கதையுடன் மிகவும் ஒன்றிணைந்துவிட்டார், அதனால் தியேட்டரில் வெளியாகும் படங்களுடன் எதிரித்துப் போராடும் மனநிலையில் இருக்கிறார். ஓடிடி மற்றும் திரையரங்கு வெளியீடுகள் வேறுபட்டவை என்பதை அவர் அறிந்திருந்தாலும், தியேட்டர் பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்க்க விரும்புகிறார்” என்றார்.
நடிகர் சிலம்பரசன் TR, “முதலில் இங்கு நன்றி கூற வேண்டும், அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது உதவிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அங்கிளுக்கும், உதயநிதி அண்ணாவுக்கும் நன்றி. உதயநிதியை அணுகுவது வெகு இயல்பாக ஈஸியாக இருக்கிறது. அவர் உதவியதோடு நிற்காமல் தொடர்ந்து விசாரிப்பது பெரிய விசயம். அதற்கு நன்றி. கிருத்திகா மேடமும் நானும் முன்பே ஒரு படம் செய்வதாக இருந்தோம். எனக்குப் பெண் இயக்குநர் ஆண் இயக்குநர் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. ஆனால் இவர் ஹாபியாக செய்கிறாரோ என்ற சந்தேகம் இருந்தது ஆனால் அவரது உழைப்பு பிரமிப்பு தருகிறது. இருப்பினும், அவருடைய அலாதியான ஆர்வத்தையும், தீவிர உழைப்பையும் கண்டு நான் மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைகிறேன், அது இந்த வெளியீட்டில் தெளிவாகத் தெரிகிறது” என்றார்.
தொடரில் நடித்துள்ள நடிகர் காளிதாஸ் ஜெயராம், “பேப்பர் ராக்கெட் டிரெய்லரை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு என்றி. அவர் பாராட்டிய ஒவ்வொரு வார்த்தையும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தத் தொடரில் மிகவும் ரசித்து நடித்தேன்” என்றார்.
இசையமைப்பாளர் சைமன், “நான் திரில்லர் படங்களுக்கு தான் வழக்கமாக இசையமைப்பேன், இது வாழ்கையைப் பற்றிய படம் என்பதால், எனக்குப் புது அனுபவமாக இருந்தது. தொடர் நன்றாக வந்துள்ளது” என்றார்.
நடிகர் காளி வெங்கட், “இந்தத் தொடரில் ஒரு எபிசோட் தான் நான் நடித்திருக்கிறேன். ஆனால் அதுவே கவித்துவம் நிறைந்த எபிசோடாக இருந்தது. வட்டார வழக்கு, பயணம் என இந்தத் தொடரில் நடித்தது ஒரு புது அனுபவமாக இருந்தது” என்றார்.
நடிகை பூர்ணிமா பாக்யராஜ், “வெப் தொடரில் நடிக்க வேண்டும் என்பதும், ஒரு பெண் இயக்குனர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதும் எனது ஆசை. அது இந்தத் தொடரில் நிகழ்ந்தது. கிருத்திகா மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்” என்றார்.
நடிகர் சின்னி ஜெயந்த், “எனது 38 வருட திரைப்பயணத்தில் நான் நடித்த முதல் தொடர் இது தான். முதலில் என்னிடம் நீச்சல் தெரியுமா என்று தான் கேட்டார்கள். நான் தெரியாது என்றேன். பரவாயில்லை வாருங்கள் என நடுக்கடலுக்குக் கூட்டிப் போனார்கள். நான் நடித்த பல காட்சிகள் கடலில் தான் எடுக்கப்பட்டது. காளிதாஸுடன் இந்தத் தொடரில் நடித்தது எனக்கு சந்தோசம். அவரது அப்பா ஜெயராம் உடன் நடித்திருக்கிறேன் இப்போது காளிதாஸ் உடனும் நடிப்பது மகிழ்ச்சி. இந்தத் தொடர் பார்வையாளர்களுக்குத் தனித்துவமான மற்றும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும்” என்றார்.
ஜூலை 29 முதல் ZEE5 இல் திரையிடப்படும் பேப்பர் ராக்கெட் தொடரில் காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், K.ரேணுகா, கருணாகரன், நிர்மல் பாலாழி, கௌரி G.கிஷன், டாக்டர் தீரஜ், நாகிநீடு, V. சின்னி ஜெயந்த், காளி வெங்கட், உள்ளிட்டோருடன் பூர்ணிமா பாக்யராஜ், G.M.குமார், அபிஷேக், பிரியதர்ஷினி மற்றும் பல பெரிய நட்சத்திரப் பட்டாளம் இணைந்து பணியாற்றியுள்ளனர்
இந்தத் தொடரில் தரண் குமார், சைமன் K கிங் மற்றும் வேத்சங்கர் என மூன்று இசையமைப்பளர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
தொழில்நுட்பக் குழு:
தயாரிப்பு நிறுவனம் – ரைஸ் ஈஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் – ஸ்ரீநிதி சாகர்
கதை, திரைக்கதை, இயக்கம் – கிருத்திகா உதயநிதி
இசை – சைமன் K கிங், வேத் ஷங்கர், தரண் குமார்
படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர்
ஒளிப்பதிவு – ரிச்சார்ட் M நாதன் & கேவ்மிக் யு ஆரி


