32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மெகா157 – பிரம்மாண்ட ஃபேன்டஸி திரைப்படம்

Dinesh R சேலம் Published: 22/08/2023 2 நிமிட வாசிப்பு Movie Posters
எழுத்து அளவு:

தெலுங்குத் திரையுலகின் எவர்க்ரீன் கிளாசிக்களில் ஒன்றான ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ போன்ற மற்றொரு ஃபேன்டஸி என்டர்டெய்னரில் சிரஞ்சீவியைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீண்ட நாட்களுக்குப் பிறகு, மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு ஃபேண்டஸி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தைத் தனது ‘பிம்பிசாரா’ திரைப்படம் மூலம் பார்வையாளர்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்ற இயக்குநர் வசிஷ்டா இயக்குகிறார். UV கிரியேஷன்ஸின் வெற்றிகரமான பேனரின் கீழ் வி. வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பளபதி மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோர் மிகப் பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கும் #Mega157 திரைப்படம், சிரஞ்சீவியின் கேரியரில் மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகும் படமாக இருக்கும்.

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் மெகா மாஸ் யுனிவர்ஸை வசிஷ்டா பார்வையாளர்களுக்குக் காட்டப் போகிறார். வசீகரிக்கும் அறிவிப்பு சுவரொட்டியில் பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் போன்ற பஞ்சபூதங்கள் (இயற்கையின் ஐந்து கூறுகள்) நட்சத்திர வடிவத்தில், திரிசூலத்துடன் கூடிய ஒரு பொருளில் சூழப்பட்டுள்ளது. ஓர் அற்புதமான ஃபேன்டசி படத்திற்கான எதிர்பார்ப்பை போஸ்டரின் மூலம் ஏற்படுத்தியுள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

திரைப்படம் என்பது அன்றாட யதார்த்தத்திலிருந்து நம்மை இலகுவாக்கி கொள்வதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். ஒரு பிரம்மாண்ட ஃபேன்டசி திரைப்படத்தில் சிரஞ்சீவி போன்ற ஒரு நட்சத்திரம் நடித்தால், அது சுவாரசியத்தைக் கூட்டுவதோடு, பார்வையாளர்களை எளிதில் கவர்ந்திழுக்கக் கூடியதாகவும் இருக்கும். வசிஷ்டா தனது முதல் படத்திலேயே தனது திறமையை நிரூபித்தவர். மேலும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸ் இப்படத்தை தயாரிப்பதால், #Mega157 ஒரு மகத்தான படைப்பாக இருக்கும்.

தொழில்நுட்பக் குழு:

>> எழுத்து & இயக்கம் – வசிஷ்டா
>> தயாரிப்பாளர்கள் – வம்சி, பிரமோத், விக்ரம்
>> தயாரிப்பு நிறுவனம் – UV கிரியேஷன்ஸ்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.