32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மெட்ராஸ் மேட்னி | ஃபர்ஸ்ட் லுக்

Dinesh R சேலம் Published: 14/05/2025 1 நிமிட வாசிப்பு Updated: 17/05/2025 Movie Posters
எழுத்து அளவு:

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகி இருக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநரும் நடிகருமான வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுப் படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ எனும் திரைப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக், சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் ஜி.கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு கே.சி. பாலசாரங்கன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை சதீஷ்குமார் சமுஸ்கி மேற்கொள்ள, கலை இயக்க பொறுப்புகளை ஜாக்கி ஏற்றிருக்கிறார். இந்தத் திரைப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மொமெண்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் எக்ஸிகியூடிவ் புரொடக்ஷன் பணிகளை மேற்கொண்டது. இந்தத் திரைப்படத்தை முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

இப்படத்தின் தலைப்புக்கான காணொளி நடிகர் சத்யராஜின் குரலிலும், தோற்றத்திலும் வெளியிடப்பட்டு, ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இத்திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.