32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

Chennai Files முதல் பக்கம் விமர்சனம்

Dinesh R சேலம் Published: 01/08/2025 1 நிமிட வாசிப்பு Updated: 23/09/2025 சினிமா
எழுத்து அளவு:

சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் என்பது சென்னையில் நடைபெற்ற ஒரு குற்றச்சம்பவத்தின் முதல் பக்கத்தில் இடம் பிடித்திருக்கும் தகவல் எனப் பொருள்படும்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

க்ரைம் நாவல் எழுத்தாளரின் வாழ்க்கையைப் பற்றி ஒரு பத்திரிகையில் தொடராக எழுத முடிவு செய்யப்படுகிறது. அதற்கு உதவுவதற்காக எழுத்தாளரின் மகனான பிரபாகரன் சென்னைக்கு வருகிறார். சூளைமேட்டு காவல் நிலைய ஆய்வாளரான ராமையாவிற்கு வழக்குகளில் உதவுகிறார். சென்னையில் நடக்கும் தொடர் கொலைகளின் சூத்திரதாரியைக் கண்டுபிடிக்க உதவுகிறார் வெற்றி.

சிங்கப்பூர் ஆணழகன் பட்டத்தை வென்ற மகேஸ்வரன் தேவதாஸ், இப்படத்தை இயக்கி வில்லனாக நடித்துள்ளார். சிறப்பாக நடித்திருக்கலாம் என்ற குறை எழுந்தாலும், வில்லனுக்கான கம்பீரமான உடற்தோற்றத்தால் சமாளித்துவிடுகிறார். பிரபாகரன் பாத்திரத்தில் நடித்த வெற்றி நாயகனாக இருந்தாலும், ஆய்வாளர் வேடத்தில் நடித்துள்ள தம்பி ராமையா படத்தை நகர்த்திச் செல்பவராக உள்ளார். அவரது வழக்கமான பாணியில் படத்தின் கலகலப்பிற்கு ஆங்காங்கே உதவினாலும், குணசித்திர நடிப்பில் ஸ்கோர் செய்துவிடுகிறார். வெற்றி தன் படக்கணக்கில் ஒன்றை அதிகமாக்கியுள்ளார்.

வெற்றி சொல்லும் கதையை எழுதும் பத்திரிகையாளர் ஸ்வாதியாக ஷில்பா மஞ்சுநாத் சிறப்பாக நடித்துள்ளார். ஆனால் அதற்குத் தீனி போடுமளவு திரைக்கதையோ, கதாபாத்திர உருவாக்கமோ அமையவில்லை. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் அனீஸ் அஷ்ரஃப் இப்படத்தை இயக்கியுள்ளார். மிஷ்கினின் ‘பிசாசு’ திரைப்படத்தைக் கன்னடத்தில் ‘ராட்சசி’ என்ற பெயரில் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் சுமாரான திரைக்கதையால், அவரது முதல் தமிழ்ப்படமான ‘முதல்பக்கம்’, கடைசிப் பக்கம் வரை விறுவிறுப்பாகப் பார்வையாளர்களை கொண்டு செல்லத் தடுமாறியுள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.