32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

இதயம் முரளி விமர்சனம் | Idhayam Murali review

Dinesh R சேலம் Published: 13/07/2026 2 நிமிட வாசிப்பு Updated: 14/07/2026 இது புதிது
எழுத்து அளவு:

‘இதயம்’ எனும் படம், 1991 இல் வெளியாகி அந்தக் கால இளைஞர்களின் இதயங்களை வென்றது. மறைந்த நடிகர் முரளியின் திரைவாழ்வில் ஒரு மைல்கல் அப்படம். அப்படத்தின் நாயகனின் குணாதிசயத்தைக் கதைக்கருவாகக் கொண்டு அதர்வாவை வைத்து இதயம் முரளியாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

90’ஸ் கிட்ஸ் அதர்வாவிற்கு சிறுவயது பெண்களிடம் காதலைச் சொல்வதற்கு தயக்கம். அந்த தயக்கமே அவரின் காதல்களுக்குத் தடையாக மாறுகிறது. பள்ளிவாழ்வில் பாடமெடுக்கும் மிஸ்ஸிடம் காதலைச் சொல்லத் தவறுகிறான். அதன்பின் பருவ வயதில் ட்யூஷன் ஜோடியான ப்ரீத்தி முகுந்தனிடம் காதலைச் சொல்லாமல் அந்தக் காதலையும் தவறவிடுகிறார். முத்தாய்ப்பாக இளைஞர்களின் கனவு நாயகியான கயாடு லோகரிடம் காதல் சொல்லும் வாய்ப்பு வருகிறது. அதையும் தவறவிடுகிறார். ஒரு கட்டத்தில் துணிச்சலை வர வைத்துக் காதலைச் சொல்லச் செல்கிறார் அதர்வா. ஆனால் காதலிகள் என்ன நிலையிலிருந்தார்கள் என்பது படத்தின் மீதிக்கதை.

ரொமான்ஸ் காட்சிகள் முதல் சென்டிமெண்ட் காட்சிகள் வரை தன் நடிப்பில் குறையே வைக்கவில்லை அதர்வா. கயாடு லோகரின் வருகை நேரம் குறைவாக இருந்தாலும் படம் முடியும் வரை தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறார். ப்ரீத்தி முகுந்தன் அழகோடு சேர்ந்து நடிப்பையும் அழகாகக் கொடுத்துள்ளார். நட்டியின் கதாபாத்திர வார்ப்பும், அவரது நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது. பரிதாபங்கள் சுதாகர், டிராவிட் இருவரும் சிறப்பு. இசைஞர் தமன் உள்பட இன்னபிற நடிகர்கள் எல்லோரும் ஜஸ்ட் பாஸ்!

கதையாக இன்ட்ரெஸ்டிங்கான ஐடியா பிடித்த இயக்குநர் அதைத் தெளிவான திரைக்கதையாக மாற்றத் தவறிவிட்டார். கதாநாயகனின் சில அடிப்படைக் குணங்களுக்கு லாஜிக் என்பதைச் சொல்லவில்லை. படத்தின் பெருங்குறை இது. மேலும் எளிதில் தீரக்கூடிய பிரச்சனையைப் பெரிதாகத் திரையில் காட்டுவது வேலைக்காகவில்லை.

தமனின் இசையில் இரு பாடல்கள் ஹிட் மெட்டிரியல். தமனை ஈசியாக “பொட்டு வைத்த வட்ட நிலா” என்ற இரண்டு நிமிட பாட்டு ஃபூட்டேஜில் வென்றுவிடுகிறார் இசைஞானி. ஒளிப்பதிவாளர் தான் படத்தின் நிஜ ஹீரோ. கண்ணைக் கொஞ்சும் விஷுவல்ஸ் தான் வண்ணத்திரை எங்கும்.

– வெண்பா தமிழ்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.