32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

A படம் – விவசாயப் புரட்சியும், கார்ப்பரேட் சூழ்ச்சிகளும்

Dinesh R சேலம் Published: 21/02/2026 2 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில், ராஜகணபதி தயாரிப்பில், கேஸ்ட்லெஸ் சிவா.கோ இயக்கத்தில், ஜோஸ் பிராங்கிளின் இசையில், சதீஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள திரைப்படம் “ஏ படம்” ஆகும். இப்படம் விவசாயப் புரட்சியையும், விவசாய மக்களை கார்ப்பரேட் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது என்ற மையக்கருத்தையும் மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது இப்படம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இப்படத்தில், கதையின் நாயகனாக ராஜகணபதியும், கதாநாயகியாக மேகா ஸ்ரீயும் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சந்திர போஸ், இயக்குநர் கேஸ்ட்லெஸ் சிவா.கோ, மஸ்காரா அஸ்மிதா, சுஷ்மிதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஏலகிரி மற்றும் ஏற்காடு பகுதியில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இப்படத்தைப் பற்றித் தயாரிப்பாளர் V. ராஜகணபதி, “நாங்கள் திரைப்படத்தை அழகாக எடுத்தோம். ஆனால் தணிக்கைச் சான்றிதழ் வாங்கும்போது தான் மிகவும் சிரமத்திற்கு உள்ளானோம். சுமார் 45க்கும் மேற்பட்ட காட்சியில் வெட்டுக் கொடுத்தார்கள். இதனால் நாங்கள் சுமார் 18 மாதங்கள் கோர்ட் வாசலில் அலைந்து மிகச் சிரமப்பட்டு தணிக்கைச் சான்றிதழ் பெற்றோம். ஒரு வழியாக இப்போது படம் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தில் நான் அம்பேத்கர் வேடத்தில் நடித்துள்ளேன். இந்தச் சமுதாயத்தில் நிலவும் அவலங்களை அம்பேத்கர் பேசுவது போல் பேசி நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இதன் ஃபர்ஸ்ட் லுக்கை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டது எங்களது மகிழ்ச்சியை அதிகரித்துள்ளது. எங்களுடைய நல்ல படத்தை, அனைவரும் திரையில் பார்த்து எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.