32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கல்கி – கிஷோரின் குறும்படம்

Dinesh R சேலம் Published: 01/03/2018 1 நிமிட வாசிப்பு Updated: 02/03/2018 Teaser
எழுத்து அளவு:

சிறப்பாக எடுக்கப்படும் உணர்வுப்பூர்வமான குறும்படங்கள் மக்கள் மனதில் என்றுமே தனக்கென ஒரு இடம் பிடிக்கும். திலீப் குமார் இயக்கத்தில் கிஷோர், யாஸ்மின் பொன்னப்பா ஆகியோர் நடிப்பில் உருவாகிய 45 நிமிட குறும்படம் ‘கல்கி’ உலகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுவருகிறது. ஒரு இயற்பியலாளருக்கும், தனது வயதில் பாதி வயதே இருக்கும் தனது காதலிக்கும் இடையே நடக்கும் உணர்வுப்பூர்வமான குறும்படம் தான் ‘கல்கி’.

இந்தக் குறும்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் உலகமெங்கும் கிடைத்து வருகிறது. தற்பொழுது இந்தக் குறும்படத்தை டிஜிட்டல் உலகின் முன்னோடி ‘Netflix’ நிறுவனம் வாங்கியுள்ளது. இது இந்தக் குறும்படத்தின் பலத்தையும் மதிப்பையும் மேலும் பல மடங்கு கூட்டியுள்ளது. ‘கல்கி’ யின் வெற்றி அதன் இயக்குநர் திலீப் குமாருக்கு ஒரு பட வாய்ப்பைப் பெற்றுத் தந்துள்ளது. இந்தச் செய்தி மேலும் பலரைக் குறும்படங்கள் மூலம் வெற்றி பெறக் கண்டிப்பாக ஊக்கப்படுத்தும். ‘கல்கி’ குறும்படத்தை ‘பிரமோத் பிலிம்ஸ்’ சார்பில் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.