‘பீனிக்ஸ்’ ஈவென்ட் : அப்பா விஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மகன் சூர்யா
விஜய்சேதுபதி நடித்த நானும் ரவுடி தான், சிந்துபாத் உள்ளிட்ட படங்களிலேயே அவருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா.
தற்போது சூர்யா ஹீரோவாக அறிமுகமாகி விட்டார்.
சூர்யா நடிக்கும் ‘பீனிக்ஸ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் படம் பீனிக்ஸ் வீழான். ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கும் இந்த படத்தில் சூர்யாவுடன், வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, சாம் சி.எஸ் இசை அமைத்திருக்கிறார்.
அதிரடியான ஆக்ஷன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.
இந்த டீஸரில் பாக்ஸர் ஆன சூர்யா சிறை செல்கிறார். அங்கு அடியாட்களை அனுப்பி சிறையில் இருக்கும் சூர்யாவை கொலை செய்ய முயற்சி நடக்கிறது.. அவர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சூர்யா செய்யும் ஆக்சன் தான் இந்த ‘பீனிக்ஸ்’ படம்..
இந்த டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த டீசர் விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி பேசும்போது..
“சினிமாவில் நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் சொல்லிவிட்டேன்.. ஆனாலும் பிடிவாதமாக சினிமா தான் வேண்டும் என சூர்யா சொல்லிவிட்டான்.. எனவே அவனது விருப்பத்திற்கு அனுமதி கொடுத்துவிட்டேன்.
அவனைப் பெற்ற இந்த 19 வருடத்தில் இந்த தந்தையர் தினம் தான் மிக ஸ்பெஷல் என்று பேசினார் விஜய் சேதுபதி.
இதனையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்தார் நடிகர் சூர்யா. அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியில்.. அப்பா பெயரை பயன்படுத்த மாட்டேன் என்று பேசிய நீங்கள் தற்போது ‘பீனிக்ஸ்’ படத்தின் புரொமோசன் பணிக்காக அப்பாவை அழைத்தது ஏன் என்று கேள்வி எழுப்பினர்..
தந்தையர் தினத்தன்று அப்பாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பினேன். அதனால் அப்பாவை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தேன். அப்பா மட்டும் வரவில்லை, என்னோட அம்மா சகோதரி என அனைவரும் வந்துள்ளனர்” என்றார்.