Shadow

டெடி: ஆர்யா – சாயிஷா

Arya-Sayeesha-in-Tedi

ஆர்யா, சாயிஷா திருமணத்திற்குப் பின் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் ‘டெடி’. நடிக்க வந்திருப்பதால் படத்தின் பலம் கூடியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் K.E ஞானவேல்ராஜா தயாரிக்கும் ‘டெடி’ படத்தில் ஹீரோ ஆர்யா. ஹீரோயின் சாயிஷா.

ஆர்யாவின் அர்ப்பணிப்பு மிகுந்த நடிப்பிற்கு பெருந்தீனி கொடுக்கும் வகையில் புதிய வகை ஆக்ஷன் திரில்லர் கதையோடு தயாராகி இருக்கிறார் இயக்குநர் சக்தி சவுந்தரராஜன். இவர் ஏற்கெனவே நாணயம், மிருதன், நாய்கள் ஜாக்கிரதை, டிக் டிக் டிக் ஆகிய படங்கள் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர். இந்த ‘டெடி’ படமும் அவரது டெடிகேஷனில் அசுரப்பாய்ச்சல் பாய இருக்கிறது.

இயக்குநரின் ஆளுமைக்கு ஏற்ற தொழில்நுட்ப அணி இருந்தால் தான் அந்தக் கூட்டணி பெரிய வெற்றியடையும். அந்த வகையில் மிகச்சிறப்பான கூட்டணி இது. கேமரா மேனாக ராஜா ரங்கூஸ்கி, பர்மா, ஜாக்சன் துரை ஆகிய படங்களில் பணிபுரிந்த யுவா. இசை அமைப்பாளராக டி. இமான். திமிரு பிடித்தவன், காளி படங்களில் சிறப்பான சண்டைக்காட்சிகளை அமைத்த சக்தி சரவணன் களமிறங்க, ஷார்ப்பான படத்தொகுப்பில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தைச் செறிவாக்கிய சிவநந்தீஸ்வரன் பணியாற்ற இருக்கிறார்.

சென்னையில் பூஜையுடன் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெற இருக்கிறது. படத்தில் கூடுதல் எனர்ஜியாக ஆர்யா சாயிஷாவோடு சதீஷ், கருணாகரன் இருக்கிறார்கள்.