Shadow

Tag: யுவராஜ்

“இலக்கை விட பயணமே முக்கியம்” – கவின் | Hi :) movie

“இலக்கை விட பயணமே முக்கியம்” – கவின் | Hi :) movie

சினிமா, திரைச் செய்தி
நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ஹாய் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்குக் கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினரைச் சந்தித்து தங்களது நன்றியைத் தெரிவித்தனர். இந்நிகழ்வில் பேசிய இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின், “இயக்குநர் விஷ்ணுவுடனும், நடிகர் கவினுடனும் இணைந்து பணியாற்றுவது எனக்கு இது நான்காவது படம். கவின் எனக்கு பள்ளிக் கால நண்பர். பள்ளி நாட்களில், ‘நீ நடிகராக வருவாய், நான் இசையமைப்பாளராக வருவேன்’ என்று நாங்கள் பேசிய நாட்களில் இருந்து இன்று இந்த தருணம் வரை வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களது கனவு இன்று நனவாகியிருப்பதைப் போல் உணர்கிறேன். இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றிருப்பது எனக்கு ...
“I am Game – ஒரு தமிழ்ப்படம் என்ற உணர்வைத் தரும்” – துல்கர் சல்மான

“I am Game – ஒரு தமிழ்ப்படம் என்ற உணர்வைத் தரும்” – துல்கர் சல்மான

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
"I am Game - ஒரு தமிழ்ப்படம் என்ற உணர்வைத் தரும்" - துல்கர் சல்மானதுல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “I Am Game” திரைப்படத்தின் பிரம்மாண்டமான முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.இந்நிகழ்வில் பேசிய கதிர், “‘I Am Game’ படம் நிறைய சர்ப்ரைஸ் அம்சங்களைக் கொண்ட ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். ட்ரெய்லரில் நீங்கள் பார்த்ததைத் தாண்டிப் படத்தில் இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு ஒரு அனுபவமாக அமையும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஒளிப்பதிவும் முக்கிய அம்சமாக இருக்கும்.இந்தப் படத்தில் கிரிக்கெட் கேப்டனாக நடித்துள்ளேன். ஆனால் இதற்கு முன்பு நான் கிரிக்கெட் விளையாடிய அனுபவமே மிகக் குறைவு. பள்ளிக் கால...
Once More review | ஒன்ஸ் மோர் விமர்சனம்

Once More review | ஒன்ஸ் மோர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
முதல் காதல் கைக்கூடாத விரக்தியிலும் கோபத்திலும் உள்ள ஒருவனது வாழ்க்கையில் ஒரு பெண் நுழைகிறாள். அவனுக்கு இரண்டாவது காதல் மலரும்போது, முதல் காதல், 'மீண்டும் ஒரு வாய்ப்பு வேண்டும்' எனக் கோரி நிற்பதுதான் படத்தின் ஒருவரிக்கதை. மிகவும் இறுக்கமாகவும், பிரபஞ்சத்தின் மீது கடுங்கோபத்துடனும் இருக்கும் ரகுவரனை, மிக அதிகமாகக் காதலிக்கிறார் அவரது கல்லூரி ஜூனியரான அஞ்சலி. கல்யாணமே வேண்டாம் என்றிருக்கும் ரகுவரன், அஞ்சலியை ஏற்றுக் கொள்வதில் மிகுந்த மனத்தடையுடன் தவிக்கிறார். ஆனால் அஞ்சலியின் உறுதி ரகுவரனின் இறுக்கத்தைத் தளர்த்தி விடுகிறது. ரகுவரனுக்கும் அஞ்சலிக்கும் நிச்சயம் ஆனதும், ரகுவரனை இறுக்கமாக்கிய இந்திரா எனும் அவனது கடவுளிண்ட தேசத்துக் கடந்தகாலம் மீண்டும் கரை தட்டுகிறது. இசையும் நடனமும் கனவுகளும் இளமையாயும் வேகமாக வளர்ந்த அந்த இந்திரக் காதல், அப்போது ஏனென்ற காரணமே தெரியாமல் ரகுவரனுக்கு இல்லாமல் போக...
Hi :) விமர்சனம்

Hi :) விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 'யாரடி நீ மோகினி' படப்பாணியில் ஒரு படம் தர முயற்சி செய்துள்ளது தயாரிப்பாளர் மற்றும் நடிகை நயன்தாராவின் குழு. ரஜினி ரசிகனாகவும், கமல் ரசிகையாகவும் நிறைய முரண்களோடு இருக்கும் கவினும் நயன்தாராவும் ஒன்று சேர்வது தான் கதையின் ஒருவரிக்கதை. காதல் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதை வாழ்வின் லட்சியமாகக் கொண்டுள்ள கவின் ஊரைவிட்டு ஓடி வந்துவிடுகிறார். இன்னொரு புறம் தன் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடிவருகிறார் நயன். இருவரும் சென்னையில் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பைக் காலம் அல்ல, பழைய ஃபார்மட்டிலான திரைக்கதை வழங்குகிறது. அதன்பின் இந்த ஜோடி எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பது படத்தின் மீதிக்கதை. கதையின் நாயகியாக நயன்தாரா, பார்வையாளர்களுக்கு மிகவும் பரீச்சயமான அவரது வழக்கமான நடிப்பையே மீண்டும் அள்ளித் தெளித்துள்ளார். ஒருசில எமோஷ்னல் ஏரியாக்...
டாக்ஸிக் விமர்சனம் | Toxic review

டாக்ஸிக் விமர்சனம் | Toxic review

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கிட்டத்தட்ட 400 கோடிக்கும் மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட படம். இந்தியாவே எதிர்பார்ப்போடு இருந்த ஒரு படம். இது, பான்-இந்தியப் படம் இல்லை; பான்-உலகப்படம் என்றளவுக்கு எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறியிருந்தது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தும், கோவா அந்த சுதந்திர எல்லைக்குள் 1947 ஆம் ஆண்டு வரவில்லை. அங்கு வெளிநாட்டவர் கோலோச்சுகிறார்கள். கடத்தல் தொழில் கொடிகட்டிப்பறக்கிறது. கோவாவைக் கட்டியாளும் ஒரு பெரிய டான் சால்வடாரின் அடியாட்கள் போல் வலம் வருகிறார்கள் ராயாவும், அவரின் அக்கா கங்காவும்! ராயாவிற்கும், டானின் மகள் ரெபேக்காவிற்கும் இடையில் நெருக்கம் ஏற்படுகிறது. ஆனால் ராயாவை வெறுக்கிறார் ரெபேக்காவின் தாய் எலிஸபெத். எலிஸபெத்தின் தம்பியான டோனி ராயாவைக் கொல்ல முயல, டோனியைக் காப்பாற்ற முடியாமல் தனது கைகளாலேயே கொல்கிறார் அவரது சகோதரி எலிஸபெத். சர்க்கஸில் சந்திக்கும் நாடியா மீது காதல் கொள்கிறார் ர...
“விஸ்வநாத் & சன்ஸ்: ஹாட்ரிக் வெற்றி” – ஜி.வி | The ONE Suriya

“விஸ்வநாத் & சன்ஸ்: ஹாட்ரிக் வெற்றி” – ஜி.வி | The ONE Suriya

சினிமா, திரைச் செய்தி
சித்தாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தி ஒன் 'சூர்யா' நடிப்பில் தயாராகி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம், பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று ரசிகர்களின் பேராதரவுடன் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்தப் படக்குழுவினர், நன்றி நவில்தல் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் விநியோகஸ்தர் ஹரிதா லிங்கசாமி, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், நடிகைகள் ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ, மமீதா பைஜூ, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் வெங்கி அட்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், ''சூர்யாவை 2003 ஆம் ஆண்டில் 'கஜினி' படத்திற்காக நேர்காணல் செய்தேன். நேர்காணலுக்காக ஒப்புக்கொண்ட நேரத்தை விட ஐந்து நிமிடம் தாமதமாக வந்தா...
Bang Bang டீசர்

Bang Bang டீசர்

Teaser, காணொளிகள், சினிமா, திரைத் துளி
KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் பிரபு தேவா, வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்திருப்பதால், படம் தொடக்கத்திலேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், டீசர் அந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. டீசரில் எரிமலை வெடித்து லாவா பாயும் வித்தியாசமான நிலப்பரப்பில் வித்தியாசமான தோற்றத்தில் பிரபு தேவாவும் வடிவேலுவும் தோன்றுகின்றனர். அவர்களை ஜாம்பிகளாக மாறிய மனிதர்கள் துரத்த, அவர்களிடமிருந்து தப்பிக்கும் ஆக்ஷன் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. ஜாம்பிகள், எரிமலை, ஆபத்தான சூழல் என ஒரு பக்கம் பதற்றத்தை உருவாக்கினாலும், வடிவேலுவின் உடல்மொழியும் நகைச்சுவையும் அந்த டென்ஷனை உடைத்து சிரிப்பை வரவழைக்கிறது. பிரபு தேவா மற்றும் வடிவேலு இருவரும் இணைந்து நடித்த காலகட்டத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற கூ...
விஸ்வநாத் & சன்ஸ் விமர்சனம் | Vishwanath & Sons review

விஸ்வநாத் & சன்ஸ் விமர்சனம் | Vishwanath & Sons review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
விஸ்வநாத் எனும் தொழிலதிபர், சான் பிரான்சிஸ்கோ சென்று வாடகைத்தாய் மூலமாகக் குழந்தை பெற்றுக் கொள்கிறார். திடீரென அக்குழந்தைக்கு மிக அரிதான நோய் ஒன்று வர, அதற்குத் தீர்வாகத் தாயின் எலும்பு மஜ்ஜை வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. விஸ்வநாத், வாடகைத்தாயான மதனகாமேஸ்வரி ஜோதிலிங்கம் எனும் மேடி J-வைக் கண்டுபிடித்து இந்தியா அழைத்து வருகிறார். மேடியின் வரவால், விஸ்வநாத் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதே படத்தின் கதை. கச்சிதமான கதாபாத்திரத் தேர்வுகள் படத்தின் பெரும்பலம். சூர்யா, ராதிகா சரத்குமார், மமிதா பைஜு, ரவீனா டாண்டன், பவானிஸ்ரீ ஆகியோர் தங்கள் ஏற்றப் பாத்திரத்திற்கு மிக நிறைவான பங்களிப்பை அளித்துள்ளனர். அந்த மாளிகையின் உட்புறத்தோற்றமான ஹால் மட்டும் ஓர் அந்நிய உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் நடிகர்கள் அதைத் தங்களது நடிப்பால் மறக்கடித்து விடுகின்றனர். இயல்பாகவே ஓர் அப்பாவித்தனம் அப்பி...
அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ திரைப்படம்

அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ திரைப்படம்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’ ஆகும். இப்படத்தை, ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18) மற்றும் பிரபல இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் ப்ரொடக்ஷன் (Cine 1 Studios Production) இணைந்து தயாரிக்கிறது. இப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘பத்தா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். ஏற்கெனவே இருவரது கூட்டணியில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மற்றும் சீதக்காதி திரைப்படங்கள் ரசிகர்களிடம் தனித்துவமான வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. வி...
கேக்கு வாக்கு – பாடல் | Don’t Trouble the Trouble | Cakeu Walku

கேக்கு வாக்கு – பாடல் | Don’t Trouble the Trouble | Cakeu Walku

Songs, அயல் சினிமா, காணொளிகள், சினிமா, திரைத் துளி
ஃபஹத் ஃபாஸில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது.ஷோயிங் பிசினஸ் பேனரின் கீழ் தனது முதல் விநியோக முயற்சியான ‘பிரேமலு’ மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா, தற்போது இந்தியாவின் பெருமைக்குரிய ‘பாகுபலி’ திரைப்படத் தொடரைத் தயாரித்த புகழ்பெற்ற அர்கா மீடியா ஒர்க்ஸ் இணைந்து இந்த பிரம்மாண்டமான படைப்பை உருவாக்கி வருகிறார். ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் (Don’t Trouble the Trouble)’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் எலெட்டி இயக்குகிறார். ஃபஹத் ஃபாஸில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ரசிகர்களிடையே எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்திய டீசரைத் தொடர்ந்து, தற்போது “கேக்கு வாக்கு (Cakeu Walku)” வீடியோ பாடலைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கால பைரவா இசையமைத்துள்ள இந்தப் பாடல், சூரி கதாபாத்திரத்தைய...
விஸ்வநாத் & சன்ஸ் – ட்ரெய்லர்

விஸ்வநாத் & சன்ஸ் – ட்ரெய்லர்

Trailer, காணொளிகள், சினிமா
சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.  இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாரிப்பாளர்கள்சூ ர்யதேவர நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், இந்த ஆண்டின் மிகச்சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக அமையவுள்ளது. நாற்பது வயதைக் கடந்தும் தனது கனவுகளைத் துரத்தும் சர்வதேசத் துப்பாக்கி சுடும் வீரரான சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தை இந்த ட்ரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. ஸ்டைல், கனிவு, நகைச்சுவை, உணர்ச்சிகள் ஆகியவற்றை சூர்யா மிகச் சிறப்பாகக் கையாண்டு, பார்வையாளர்களின் மனதை உடனடியாகக் கவரும் வகையிலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். திரையில் மமிதா பைஜு தனது தனித்துவமான வசீகரத்தை வெளிப்படுத்த, ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன் மற்றும் சிறந்த நட்சத்திர நடிகர்கள் குழு இந்த உணர்...
வதந்தி | Vadhandhi Season 2 – The Mystery of Mani review

வதந்தி | Vadhandhi Season 2 – The Mystery of Mani review

OTT, Web Series, சினிமா, திரை விமர்சனம்
முதல் முறையாகச் சசிகுமார் காவல்துறை அதிகாரியாகவும், ஓர் ஓடிடி தொடரில் நாயகனாகவும் நடித்துள்ளார். தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறி ஒன்றிய அரசு நிலங்களைக் கையகப்படுத்தி எட்டு வழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழாவை வைக்கிறது. அப்பொழுது அடிக்கல் நாட்டத் தோண்டும்பொழுது, மனித எலும்புக்கூடு ஒன்று கிடைக்கிறது. அந்த எலும்புக்கூடு யாருடையது என்ற விசாரிக்க துணை ஆய்வாளர் மூசா ராசா நியமிக்கப்படுகிறார். அவரது விசாரணையின் முடிவால், 'முடக்கத்தான்' மணி என்பவர்க்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது. ஆனால், மணி அந்தக் கொலைகளைச் செய்திருக்க மாட்டான் என நம்பும் மூசா ராசா மிகுந்த சிரமங்களுக்கு இடையில், அவ்வழக்கை மீண்டும் திறக்கிறார். மணியின் மீது மூசா ராசா வைத்த நம்பிக்கை பொய்த்ததா, வென்றதா என்பதே தொடரின் முடிவு. முந்தைய சீசன் போலவே கலகலப்பிற்கு உதவியுள்ளார், தேநீர் பிரியான துணை ஆய்வாளர் ராமர் கதாபாத்திரத்தில் நடித்திருக...
விஸ்வநாத் & சன்ஸ் – தமிழில் ஓர் அலா வைகுந்தபுரம்லோ

விஸ்வநாத் & சன்ஸ் – தமிழில் ஓர் அலா வைகுந்தபுரம்லோ

சினிமா, திரைச் செய்தி
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தின் கலையரங்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் முன்னிலையில் கோலாகலமாக திருவிழா போல் சிறப்பாக நடைபெற்றது. ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்குகிறது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், ''மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்த வாத்தி படத்திற்குப் பிறகு, மீண்டும் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்சி, சாய் சௌஜன்யாக்கு நன்றி. 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் மிகவும் ஸ்பெஷலானது. சூர்யாவின் 'சூரரைப் போற்று' படத்திற்குப் பிறகு நானும் அவரும் இணைந்து பணி...
“வதந்தி சீசன் 2: நிரபராதியைக் காப்பாற்றும் போலீஸ் நான்” – சசிகுமார்

“வதந்தி சீசன் 2: நிரபராதியைக் காப்பாற்றும் போலீஸ் நான்” – சசிகுமார்

சினிமா, திரைச் செய்தி
ப்ரைம் வீடியோவில் ஆகஸ்ட் ஏழாம் தேதி முதல், வால்வாட்ச்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி' எனும் இணைய தொடர் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி, ''இந்த இணைய தொடர் மிகச் சிறப்பாக உருவாகி இருக்கிறது. இதைப்பற்றி நாங்களே பெருமிதமாகப் பேசக்கூடாது. இயக்குநர் ஆண்ட்ரூ, 'ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என பணியாற்றும் ஒரு கடமை தவறாத மூசா ராசா என்ற காவல்துறை அதிகாரியைப் பற்றிய கதையைச் சொன்னவுடன் எங்களுக்குப் பிடித்தது. அதிலும் அந்தக் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கிறார் என்றவுடன் அவருக்கு ஏற்றார் போல் கதையை எழுதியது போல் இருந்தது. மேலு...
I am Game – துல்கர் சல்மானின் ஸ்டைலிஷ் மலையாளப்படம்

I am Game – துல்கர் சல்மானின் ஸ்டைலிஷ் மலையாளப்படம்

Trailer, காணொளிகள், சினிமா, திரைத் துளி
துல்கர் சல்மானின் 'ஐ ஆம் கேம் (I am Game)' திரைப்படத்தின் அதிரடி ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த மெகா பட்ஜெட் ஃபேன்டஸி த்ரில்லர், அவரது திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய திரைப்படமாக உருவாகியுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படத்தைத் துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். சஜிர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள நிலையில், வசனங்களை சஜிர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன், ஷபாஸ் ரஷீத் ஆகியோர் எழுதியுள்ளனர். கண்கவர் காட்சியமைப்புகள், பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள், அதிவேக சேஸ் சீக்வென்ஸ்கள் என இதற்கு முன் மலையாள சினிமாவில் அரிதாகக் காணப்பட்ட ஸ்டைலிஷ் ஃபேன்டஸி த்ரில்லராக இப்படம் உருவாகியுள...