32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

‘அறிவே பலம்’ – பலசாலி

Dinesh R சேலம் Published: 19/10/2016 2 நிமிட வாசிப்பு Updated: 12/11/2017 சினிமா
எழுத்து அளவு:

Balasaali Sandy

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பார்கள். அதாவது புத்திசாலித்தனம் தான் உண்மையான ஆயுதம் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது. ஒருவனுடைய பலத்தை நிர்ணயிப்பது அவனுடைய நேரமும், சமயோசித அறிவும் தான். இதை சுந்தர்.சி படப் பாணியில் முழுக்க முழுக்கக் காமெடியாக சொல்லும் படம் தான் பலசாலி.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பலமே இல்லாத ஒரு ஆள் எப்படித் தன்னை விட பலசாலிகளைத் தனது புத்திசாலித்தனத்தால் வீழ்த்துகிறான் என்பதை வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையோடு சொல்லும் கதைதான் ‘பலசாலி’. சூது கவ்வும் பாணியிலான ‘ப்ளாக் ஹ்யூமர்’ படமாக உருவாகிறது ‘பலசாலி’.

பொதுவாக இதுமாதிரியான படங்களில் கோழையான ஹீரோவைப் பின்பகுதியில் வீரனாக்குவது போல் கதை இருக்கும். ஆனால், பலசாலி படத்தின் ஆரம்பம் முதல் கடைசி காட்சி வரையுமே ஹீரோ ஒரு சாதாரண ஆளாகத் தான் இருப்பார். ஆனால் அவன் எதிர்த்து வெல்வது எல்லாமே அவனை விட பலசாலியான ஆட்கள் தான். சண்டைக்காட்சிகள் கூட வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும் சண்டைகளாகத் தான் இருக்கும்.

கதைக்குத் தேவைப்பட்டது, நாகேஷ் மாதிரியான ஒருவர். நகைச்சுவையின் எல்லையான நாகேஷ் தமிழ் சினிமாவின் பாக்கிங்களில் ஒன்று. இயக்குநர் ஆறு மாதங்களுக்கு மேல் தேடித் சோர்ந்துவிட்டார். கடைசியாக வந்து கிடைத்தவர் தான் ‘நடன மன்னன்’ சாண்டி. நடமாடினாலும், அதிலொரு நகைச்சுவைச் சாயல் இருக்கும் சாண்டியின் அணுகுமுறையில். அந்த அணுகுமுறையே, இந்தப் படத்தில் பலசாலியாக அதாவது ஹீரோவாக சாண்டி நடிக்கக் காரணம் . அவருக்கு ஜோடியாக சண்டிக்குதிரை படத்தில் கதாநாயகியாக நடித்த மானஸா நடிக்கிறார்.

நடிகர் ஆனந்த ராஜ் ஹீரோவுக்கு இணையான ஒரு கேரக்டரில் நடிக்கிறார். சாம்ஸ், லொள்ளுசபா சுவாமிநாதன், மனோபாலா, லொள்ளுசபா மனோகர், தினா, நிரோஷா, ஆதித்யா டிவி லோகேஷ், நிஷாந்த் என தமிழ் சினிமாவில் வளர்ந்த, வளரும் காமெடியன்கள் பலசாலிக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள். ஒளிப்பதிவை இ.என்.ஜே.ஹரீஷும், இசையை ‘பர்மா’ படத்திற்கு இசையமைத்த சுதர்சனும், படத்தொகுப்பை வில்சியும் செய்துள்ளனர்.

முழுக்க முழுக்கச் சென்னையில் உருவாகும் பலசாலி படம், குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் வகையில் நல்ல பொழுதுபோக்கு படமாக உருவாக்கி வருகிறார் இயக்குநர் சிவகார்த்திக். இவர் ஏற்கெனவே ‘ரீங்காரம்’, ‘கடலை போட பொண்ணு வேணும்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர். இரண்டு படங்களுமே ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. வைஷாலி பிக்சர்ஸ் சார்பாகக் கோவையைச் சேர்ந்த வெங்கட் தயாரிக்கிறார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.