32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 197)
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் விமர்சனம் அயல் சினிமா

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் விமர்சனம்

காலமும் மரணமும் மனித இனத்தின் மீதான அவமானம் எனக் கருதுகிறான் கெசிலீயஸ். அந்த அவமானத்தைக் களைய வேறொரு பரிமாணத்தில் இருக்கும் டொர்மாமுவைப் பூமிக்கு அழைக்கிறான். அண்டத்தைக் கைப்பற்றும் இச்சையுடைய டொர்மாமுவிடமிருந்து பூமியை டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் கதை. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்பவர் ஓர் அமெரிக்க நியூரோ சர்ஜன். மேற்கின் மேட்டிமையில் திளைத்துக் கொண்டிருக்கும் ஒரு திமிர் பிடித்த திறமைசாலி விஞ்ஞானி இவர். விதிகளை மீறுவது பற்றி எந்தத் தயக்கமும் இல்லாமல், காரியத்தை […]

22/11/2016 Dinesh R
கடவுள் இருக்கான் குமாரு விமர்சனம் திரை விமர்சனம்

கடவுள் இருக்கான் குமாரு விமர்சனம்

காலங்காலமாய் முடிவே இல்லாமல் நிகழும் விவாதத்திற்கு விடை கண்டுள்ளார் இயக்குநர் ராஜேஷ். கடவுள் இருக்கிறாரா இல்லையா என ஆத்திகர்களும் நாத்திகர்களும் தங்களுக்குள் சண்டை போடாத நாளே இல்லை. ஆனால் ராஜேஷ், எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் மிகச் சுலபமாய் இந்தப்பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறார். த்ரிஷா அல்லது நயன்தாரா, இருவரில் ஒருவரோடு குமாருக்கு திருமணம் நிச்சயமாகி விட்டால் கடவுள் உள்ளார் எனப் பொருள். இத்தகைய உயரிய தத்துவ விசாரணையை உடையதுதான் படத்தின் கதை. த்ரிஷா, நயன்தாரா என்ற பெயர்களைச் […]

20/11/2016 Dinesh R
சர்வ அலட்சியமும் சர்வாதிகாரமும் அரசியல்

சர்வ அலட்சியமும் சர்வாதிகாரமும்

நாட்டுக்காக மக்களா? மக்களுக்காக நாடா? என்ற கேள்விக்கு, ‘தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்ற பாரதியின் வரிகளைப் பதிலாகக் கொள்ளலாம். மோடி அரசோ, அடுத்த வேளை சாப்பாட்டைப் பற்றிய பயத்தையும் பதற்றத்தையும், தனி மனிதன் பலருக்கும் உருவாக்கி வைத்துள்ளது. ‘வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity)’ என்பது இந்தியாவிலுள்ள பல்வேறு மொழி, மதம், சடங்கு, உணவு வேறுபாட்டினைக் குறிக்கும் பதம் மட்டுமன்று, மக்களின் பொருளாதார அடுக்கினையும் சேர்த்தே குறிக்கிறது. அதிகாரத்தோடு நெருங்கிப் பழகும் மிகப் […]

18/11/2016 Dinesh R
கண்ல காச காட்டப்பா – படக்குழுவினர் சினிமா

கண்ல காச காட்டப்பா – படக்குழுவினர்

நடிகர்கள்: >> அரவிந்த் ஆகாஷ் >> எம்.எஸ்.பாஸ்கர் >> விச்சு விஸ்வநாத் >> யோகி பாபு >> அஸ்வதி >> சாந்தினி >> கல்யாண் பணிக்குழு: >> தயாரிப்பு – சுகர், கல்யாண், அரவிந்த், மேஜர் கெளதம் >> திரைக்கதை இயக்கம் – ‘மேஜர்’ கெளதம் >> ஒளிப்பதிவு – அரவிந்த் >> படத்தொகுப்பு – செல்வம் >> இசை – திவாகர் சுப்ரமணியம் >> கதை – S.G.சேகர் (SGS) >> வசனம் – ராதாகிருஷ்ணன் […]

17/11/2016 Dinesh R
மேஜர் கெளதமின் டைமிங் தலைப்பு சினிமா

மேஜர் கெளதமின் டைமிங் தலைப்பு

ப்ரேக் டான்ஸராக இருந்து நடிகராக மாறிய ‘மேஜர்’ கெளதம் தற்போது இயக்குநர் அவதாரம் பூண்டுள்ளார். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இந்நேரத்தில் ‘மேஜர்’ கெளதமும் அவரது குழுவும் மட்டும் மகிழ்ச்சியாக உள்ளனர். காலத்தின் அவசியம் உணர்ந்த வைக்கப்பட்டது போல், “கண்ல காச காட்டப்பா” என அவர்களின் படத் தலைப்பு அமைந்துவிட்டதே அதற்குக் காரணம். தலைப்பு மட்டுமன்று, படத்தின் கருவும் கறுப்புப் பணத்தை மையப்படுத்தியே! படத்தைப் பார்த்து விட்ட இயக்குநர் வெங்கட் பிரபு, […]

17/11/2016 Dinesh R
குழந்தைகளைப் பாதிக்கும் பாலியல் சீண்டல் – நமீதா சினிமா

குழந்தைகளைப் பாதிக்கும் பாலியல் சீண்டல் – நமீதா

சாயா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நமீதா, “இந்தப் படம் ஒரு சமூகக் கருத்தைச் சொல்லும் படம் என்று அறிந்ததில் மகிழ்ச்சி. சமுதாயத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டும், செய்ய வேண்டும் என்றால் திரைப்படம், அரசியல் என இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. அதனால்தான் நான் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறேன். இந்தப் படம் குழந்தைகள் பேரன்டிங் பற்றியும், கல்வி பற்றியும் எடுக்கப்பட்டுள்ளதெனத் தெரிகிறது. எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஆம், நான் மூன்று நாய்க்குட்டிகள் வளர்க்கிறேன். எனக்கு அவங்கதான் […]

15/11/2016 Dinesh R
ஒற்றுமை அவசியம் – நடிகர் ஸ்ரீகாந்த் சினிமா

ஒற்றுமை அவசியம் – நடிகர் ஸ்ரீகாந்த்

குழந்தைகள் தினத்தன்று ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்றது. பாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டார். ஜாக்குவார் தங்கமும், நடிகைகள் நமீதாவும் வசுந்தராவும் பெற்றுக் கொண்டனர். பாடல்களை வெளியிட்டு நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது, ”எனக்கு சினிமாவில் ஒவ்வொரு விழா நடக்கும் போதும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அதில் கலந்து கொள்ள பிரபலங்களை அழைத்து வருவது பற்றிய எண்ணமும் வரும். இதுமாதிரி விழாக்களுக்கு அழைக்கும் போது பிரபலங்கள் யாரும் வர முன்வருவதில்லை. சாக்கு போக்கு சொல்லி பொய்யான காரணம் சொல்லித் தவிர்ப்பார்கள், வரமாட்டார்கள். […]

15/11/2016 Dinesh R
இதுவரை வந்திராத கதை – சாயா படம் சினிமா

இதுவரை வந்திராத கதை – சாயா படம்

“இதுவரை தமிழ்ப்படங்களில் சொல்லப்படாத வித்தியாசமான கதை” என்பதில் மிக உறுதியாக உள்ளார் சாயா படத்தின் இயக்குநர் வி.எஸ்.பழனிவேல். ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் மின்காந்த அலைகள் இருக்கும்; அதை ஆரா என்பார்கள்; ஆராவின் ஒளியைக் கொண்டே, உடலிலுள்ள நோயினை அறிய முடியுமெனப் படத்தைப் பற்றிக் கூறும் பொழுது இயம்பினார் இயக்குநர். இந்தப் படத்தின் நாயகன், மனிதர்களைச் சுற்றி இருக்கும் ஆராவைக் காணக் கூடிய சக்தி பெற்றவர் என படத்தின் ட்ரெயிலரில் இருந்து யூகிக்க முடிகிறது. நாயகன் இறந்தவர்களுக்கே உயிர் […]

14/11/2016 Dinesh R
அற்புதமான மிருகங்களை எங்குக் காணலாம்? அயல் சினிமா

அற்புதமான மிருகங்களை எங்குக் காணலாம்?

‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அன்ட் வேர் டூ ஃபைண்ட் தெம் (FANTASTIC BEASTS AND WHERE TO FIND THEM)’ எனும் படம் ஆங்கிலத்திலும் தமிழிலும் தெலுங்கிலும் நவம்பர் 18 ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது. ஹாரி பாட்டர் புத்தகங்களை எழுதிப் பெரும்புகழை அடைந்த பெண் எழுத்தாளர் J. K. ரெளலிங்கின் கற்பனையில் இருந்து உதித்த மற்றொரு படமிது. அதை விட, திரைக்கதையாசிரியராக அவதாரமெடுத்திருக்கும் முதல் படமிது என்பது இப்படத்திற்கான கூடுதல் சிறப்பு. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் தன்னை […]

13/11/2016 Dinesh R
அச்சம் என்பது மடமையடா விமர்சனம் சினிமா

அச்சம் என்பது மடமையடா விமர்சனம்

‘கல்லூரி முடிச்சுட்டு வேலைக்குப் போகாதவனாகவும், தங்கையின் தோழியைக் காதலிப்பவனாகவுமே உங்க படத்தின் ஹீரோக்கள் இருக்காங்களே! உங்க டெம்ப்ளட் மாத்த மாட்டீங்களா?’ என்ற கேள்விக்கு, “இதான் எனக்குத் தெரியும். அது நல்லாவும் வருது. சோ, நான் இதையே பண்றேன்” எனப் பதிலளித்தார் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன். மேலும், “ஒருத்தன் நல்லா தண்ணியடிச்சுட்டு, என்ன படம்னே தெரியாம தியேட்டர்க்குப் போயிட்டு, படம் ஆரம்பிச்ச 2 ஃப்ரேம்ல, முழுப் போதையில் இது கெளதம் படம்னு கண்டுபிடிக்கணும்” என்றும் தன் விருப்பத்தை […]

12/11/2016 Dinesh R