32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 198)
காட்சிப்பிழையும், குருட்டுத் தீர்மானங்களும் கட்டுரை

காட்சிப்பிழையும், குருட்டுத் தீர்மானங்களும்

தொடர்ந்து ஃபோன் ஒலித்துக் கொண்டே இருந்தது. சிக்னலைத் தாண்டியதும் இடதுபுறம் வண்டியை ஓரங்கட்டிப் பேசினேன். என்னெதிரே ஹெல்மெட் போடாதவர்களை மறித்துக் கொண்டிருந்தார் ட்ராஃபிக் கான்ஸ்டபிள். நான் வண்டியைச் சீராக நகர்த்தியதுமே என்னையும் மறித்தார். ஆவணங்களைச் சரி பார்த்து விட்டு, “உங்களை ஏன் தெரியுமா நிறுத்தினேன்? சிக்னல் விழும் முன்பே, ஃப்ரீ லெஃப்ட் போல் திரும்பிட்டீங்க!” என்றார். நான் கொஞ்சம் திகைத்து, “சார் நான் லெஃப்ட்ல இருந்து வரலை. நேரா வந்தேன். ஃபோன் பேச ஓரமா நிறுத்திட்டு வர்றேன்” […]

05/11/2016 Dinesh R
ப்ரிட்ஜெட் ஜோன்ஸ்’ஸ் பேபி விமர்சனம் அயல் சினிமா

ப்ரிட்ஜெட் ஜோன்ஸ்’ஸ் பேபி விமர்சனம்

நம்மால் கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்கவே முடியாத ஒரு கதையை, மிக நேர்த்தியான நகைச்சுவைப் படமாக உருமாற்றியுள்ளார் இயக்குநர் ஷரோன் மக்வயர் (Sharon Maguire). ப்ரிட்ஜெட் ஜோன்ஸ் சீரிஸில் இது மூன்றாவது படம். முந்தைய பாகங்களைப் பார்க்கவிடினும் கூடப் பாதகமில்லை. இந்தப் படம் நிச்சயம் உங்களைக் கலகலப்பாக்கிவிடும். படத்தின் கதை அப்படி. 43 வயதாகும் ப்ரிட்ஜெட் ஜோன்ஸ் கர்ப்பமாகிறார். பிறக்கப் போகும் குழந்தைக்குத் தந்தை முன்னாள் காதலன் மார்க் டார்சியா அல்லது இசை விழாவில் சந்தித்த அந்நியனான […]

30/10/2016 Dinesh R
காஷ்மோரா விமர்சனம் சினிமா

காஷ்மோரா விமர்சனம்

காஷ்மோரா என்றால் எல்லாப் பூதங்களையும் அடக்க வல்ல பூதவித்தையின் பெயர் என படத்தில் ஒரு வசனம் வருகிறது. அந்த வித்தை பிறவிலேயே கை கூடுவதால் நாயகனுக்கு அந்தப் பெயர் அவரது தந்தையால் சூட்டப்படுகிறது (காஷ்மோரா என்பது எவராலும் வெல்ல முடியாத ஒரு துர்தேவதை; அதை எழுப்பி ஏவி விட்டால் எதிரியை 21 நாளில் கொன்று விடும்; பில்லி, சூனியத்தை விட ஆபத்தான ஏவல் வித்தை காஷ்மோரா என்கிறார் ‘துளசி தளம்’ எனும் நாவலில் தெலுங்கு எழுத்தாளர் எண்டமூரி […]

29/10/2016 Dinesh R
கொடி விமர்சனம் சினிமா

கொடி விமர்சனம்

தனுஷ் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிப்பதோடு அரசியல்வாதியாகவும் நடிக்கிறார். அதை விடக் குறிப்பிடத்தக்க விஷயம், தனுஷ்க்குச் சமமான முக்கியத்துவத்தோடு த்ரிஷா பாத்திரமும் அமைக்கப்பட்டுள்ளதே! நாயகன் இரு வேடங்களில் நடிக்கும் படத்தில், நாயகியொருவருக்கு மிக அழுத்தமான கதாப்பாத்திரம் அளிக்கப்பட்டது சொல்லொன்னா மகிழ்ச்சியை அளிக்கிறது. அரசியலால் மக்களுக்கு நல்லது செய்யமுடியுமென நம்பும் கருணாஸ், தனது இரு மகன்களில் ஒருவரான கொடியின் முன் தீக்குளித்து விடுகிறார். அதன் பின், கட்சியே கதியெனக் கிடக்கும் கொடிக்கு, எதிர்க்கட்சியைச் சேர்ந்த ருத்ரா மீது […]

29/10/2016 Dinesh R
திரைக்கு வராத கதை விமர்சனம் சினிமா

திரைக்கு வராத கதை விமர்சனம்

நாயகன் இல்லாப் படங்கள் கூட அரிதினும் அரிதாய் வரும். முழுக்க முழுக்க பெண் நடிகர்கள் மட்டுமே நடித்துள்ள படமிது. திரையில் எந்தவொரு ஆணின் நிழலும் தப்பித் தவறியும் வந்துவிடக் கூடாதென மிகக் கவனமாக இருந்துள்ளார் மலையாள இயக்குநரான துளசிதாஸ். இதுவரை திரையில் வந்தேயிராத கதையினுடைய குறும்படம் ஒன்றினை எடுக்க நினைக்கும் திரைப்படக் கல்லூரி மாணவியான இனியாவிற்குள் ஓர் ஆவி புகுந்து கொள்கிறது. யாரந்த ஆவி என்பதும், அதன் மரணப்பசிக்குக் காரணம் ஏன் என்பதும், அதன் பசி அடங்கியதா […]

28/10/2016 Dinesh R
என் முதல் தீபாவளி – நடிகர் ஷாம் சினிமா

என் முதல் தீபாவளி – நடிகர் ஷாம்

திருமணமான புதுமணத் தம்பதிகளைப் போல திரையுலகக் கதாநாயகர்களும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார்கள். அந்தத் தீபாவளிக்கு அவர்கள் நடித்த படம் வந்தால் அவர்களுக்கு அது தலை தீபாவளியைப் போன்ற மகிழ்ச்சி தரும். அந்த வகையில் எந்த ஆண்டும் இல்லாத உற்சாகமாக இந்த ஆண்டு தீபாவளியை எதிர்கொள்கிறார் நடிகர் ஷாம். அவரது உற்சாக எதிர்பார்ப்புக்குக் காரணம், அவர் நடித்த, ‘ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்’ என்ற கன்னடப் படம் தீபாவளி அன்று வெளியாகிறது. இப்படத்தில் கதாநாயகனாக அங்கே முன்னணிக் கதாநாயகனான யஷ் நடித்துள்ளார். […]

26/10/2016 Dinesh R
சினிமாவிற்கு வந்த முன்னோடி தொழிலதிபர் சினிமா

சினிமாவிற்கு வந்த முன்னோடி தொழிலதிபர்

சினிமா மீது கொண்ட காதலால், யாரிடமும் உதவியாளராக இல்லாமலேயே இயக்குநர் ஆகியிருக்கிறார் தென்காசியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். அவரது பெயர் எஸ்.பி.டி.ஏ.குமார். ‘முன்னோடி’ என்று தலைப்பிடப்பட்ட அப்படத்திற்கு, கதையும் திரைக்கதையும் வசனமும் அவரே! யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாத குமார், மணிரத்னம் போன்ற ஆளுமைகளைத் தன் முன்னோடியாக எண்ணி சினிமாவுக்கு வந்திருக்கிறாராம். அவருடன் இணைந்து சோஹம் அகர்வால் படத்தைத் தயாரித்துள்ளார். ஒருவன் யாரை முன்னோடியாகப் பின்பற்றுகிறானோ, அதைப் பொறுத்தே அவனது வாழ்வு உயர்வாகவோ தாழ்வாகவோ அமையும். ‘வாழ்க்கையில் […]

25/10/2016 Dinesh R
கொடி இசை – ஒரு பார்வை இசை விமர்சனம்

கொடி இசை – ஒரு பார்வை

பொலிட்டிக்கல் த்ரில்லரான கொடியில் தனுஷ், த்ரிஷா மற்றும் ப்ரேமம் புகழ் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். எதிர் நீச்சல், காக்கி சட்டை படங்களை இயக்கிய R.S துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். தனுஷ், அனிருத் உடனான கூட்டணியை முறித்துவிட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்துள்ளதை அடுத்து இப்படத்தின் இசை மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. படத்தில் மொத்தம் 5 பாடல்கள். எழுதியவர்கள் விவேக்கும், அருண்ராஜா காமராஜூம் ஆவர். 1. பாடல் – ஏய் சுழலி பாடியவர்கள்: விஜய்நரைன் […]

25/10/2016 Dinesh R
தி அக்கெளன்டன்ட் விமர்சனம் அயல் சினிமா

தி அக்கெளன்டன்ட் விமர்சனம்

மிக நிறைவானதொரு ஆக்‌ஷன் த்ரில்லர். க்றிஸ்டியன் வொல்ஃப் ஓர் ஆட்டிச சிறுவன். படம் முக்கியத்துவம் பெறுவது இந்தப் புள்ளியில்தான். அது மேலும் விசேஷமாவது, அதில் வரும் வித விதமான மனிதர்களால். “க்றிஸ்டியனை எங்களிடம் விட்டுப் போங்க. இந்தக் கோடையில் மட்டுமாவது.. பணம் எதுவும் வேண்டாம். இலவசமாக.. நாங்க அவனைப் பொறுப்பா கவனிச்சிக்கிறோம்” என்கிறார் ஹார்பர் நியூரோசயின்ஸ் நிறுவனத்தின் தலைவர். “இவர்கள் போன்றவர்களுக்கு, திடீர் சத்தமும் வெளிச்சமும் பாதுகாப்பற்ற உணர்வைத் தருவதால் கத்துறாங்க. ஸ்பெஷல் கிட்ஸைப் பார்த்துக் கொள்வது ஒரு […]

23/10/2016 Dinesh R
கவலை வேண்டாம் இசை – ஒரு பார்வை இசை விமர்சனம்

கவலை வேண்டாம் இசை – ஒரு பார்வை

நடிகர் ஜீவா காஜல் அகர்வாலுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் இது . ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டீகே-வின் இயக்கத்தில் வரும் இரண்டாவது படமென்பதால் எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது. வளர்ந்து வரும் இசையமைப்பாளரான லியோன் ஜேம்ஸ் இசையில் படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளன. பாடல்களை எழுதியவர் கோ சேஷா. 1. பாடல் –  காதல் இருந்தால் போதும் பாடியவர்கள்: அர்மான் மாலிக், ஷாஷா திருப்பதி அர்மான் மாலிக்கின் குரலில் ஒரு எனர்ஜெட்டிக் மெலடி. இப்பாடல் […]

23/10/2016 Dinesh R
காகித கப்பல் விமர்சனம் சினிமா

காகித கப்பல் விமர்சனம்

‘காகித கப்பல்’ எனும் தலைப்பு வாழ்க்கையின் நிலையாமையைக் குறிக்கிறது. குப்பை பொறுக்குபவராக வாழ்க்கையைத் தொடங்கி கோடீஸ்வரராகி விடும் சிவபாலன் என்கின்ற அப்புக்குட்டியின் வாழ்க்கையில் நேரும் எதிர்பாராத சம்பவங்கள் தான் படத்தின் கதை. தலைப்பைக் கொண்டே முழுக் கதையையும் யூகித்து விடலாம். அழகர்சாமியின் குதிரை படத்திற்குப் பிறகு, ஹீரோவாக நடித்துள்ளார் அப்புக்குட்டி. அப்புக்குட்டி படிக்காதவர் என்றாலும் நல்ல உழைப்பாளி. ‘பாப்பாம்மாள் வேஸ்ட் பேப்பர் மார்ட்’ மூலம் நன்றாகச் சம்பாதிக்கிறார். அந்தக் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். சுங்க இலாகா விசாரணையின் […]

21/10/2016 Dinesh R