Shadow

ரெமோ: 2 க்ளைமேக்ஸ் – 3 மைக் – 4 டப்பிங்

Yogi Babu in REMO

24 ஏ.எம்.ஸ்டூடியோஸ், ரெமோ படத்தின் விநியோகஸ்தர்களைக் கெளரவிக்கும் வகையில் நன்றி விழாவைக் கொண்டாடினர். அவ்விழாவில் அனைவருக்கும் நன்றி சொன்ன சிவகார்த்திகேயன், “இந்தப் படம் ஆஹோ ஓஹோ எனச் சொல்ல முடியவிட்டாலும், இந்தக் குழு நிச்சயம் தமிழ் சினிமா பெருமைப்படுமளவு ஒரு தரமான நல்ல படத்தை எடுக்கும். அதன் தொடக்கம் தான் இந்தப் படம்” என்றார். படக்குழுவினரும் தங்களுக்கு நேர்ந்த சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

“பொதுவாக டப்பிங்கில் ஒரு மைக் தான் இருக்கும். இங்க மைக்கிற்கு மேல் ஒரு ட்யூப் இருந்தது. பத்தாதற்கு என் ஷர்ட்டில் ஒரு காலர் மைக் வச்சாங்க. ‘அவ்ளோ தானா! நாலாவது மைக்கும் இருக்கா?’ என நினைச்சேன். ‘மூனு மைக் தான்’ என்றார் ரெசூல் பூக்குட்டி. ‘என் மைண்ட்-வாய்ஸையும் சேர்த்து அந்த மைக் கேப்ச்சர் பண்ணிடுச்சு. அப்ப விளையாட்டாய்த் தெரிஞ்சாலும், தியேட்டரில் பார்க்கும் பொழுதுதான் அதோட எஃபெக்ட் தெரிஞ்சது. ரொம்ப துல்லியமா புது அனுபவமா இருக்கு. இது போல் சின்னச் சின்ன விஷயத்திலும் ரொம்ப மெனக்கெட்டு செஞ்சிருக்கார்” என சவுண்ட் இன்ஜினியர் ரெசூல் பூக்குட்டியைச் சிலாகித்தார் சதீஷ்.

“எனக்கு ரெமோ நர்ஸின் குரல் அவ்வளவு திருப்தியாக இல்லை. அப்போ ஏ.ஆர்.ரஹ்மான் தான், லேடி வாய்ஸாக அதை கிராக் செய்ய ஐடியா கொடுத்தார். நான் சிவகார்த்திகேயனை டப்பிங்கிற்கு மீண்டும் அழைத்தேன். மொத்தம் 4 முறை டப்பிங் செய்தார். ஃப்ரான்ஸ் நிறுவனம் தந்த சாஃப்ட்வேரைக் கொண்டு லேடி வாய்ஸாக மாத்தினோம். நிஜமாகவே பெண் பேசுவது போலவே உள்ளது சிவகார்த்திகேயனின் குரலெனச் சொல்றாங்க” என்றார் சவுண்ட் இன்ஜினியரான ரெசூல் பூக்குட்டி.

“நான் நடிச்ச எந்தப் படத்திலும், ரெண்டு க்ளைமேக்ஸ் ஷூட் பண்ணியதில்லை. ஆனா, ரெமோ படத்தில் யோகி பாபு அண்ணனுக்கு ரெண்டு க்ளைமேக்ஸ் எடுத்திருந்தாங்க. நான் ஒரு துணிக் கடையில் இருப்பேன். அப்போ அங்க அவர் வந்து, ‘எப்ப நம்ம மேரேஜ்க்கு டிரஸ் எடுக்கப் போறீங்க?’ எனக் கேட்பார். ‘நான் ஒன்னு உங்ககிட்ட காட்டணும்’ எனச் சொல்வேன். அவர், ‘நானும் பார்க்கணும்’ என்பார். ட்ரையல் ரூமுக்குப் போவோம். ஆஆ.. என அலறல் சத்தம் மட்டும் வரும். ட்ரையல் ரூம் விட்டு வெளியில் வரும் யோகி பாபு அண்ணனிடம் சேல்ஸ் மேன், ‘ஏதாச்சும் பார்க்கிறீங்களா சார்?’ எனக் கேட்பார். ‘பார்த்துட்டன்டா. இதுக்கு மேல தாங்காது. போதும்டா சாமீ’ என அவர் சொல்றாப்ல ஒரு சீன் எடுத்திருந்தோம். ஆனா, இயக்குநர் பாக்கி, அவரது காதல் ஒரு தொடர் கதையா இருக்கட்டும்னு இந்த சீன் எடுத்துட்டு படத்தில் வேற சீன் வச்சுட்டார்” எனச் சிரித்துக் கொண்டே சொன்னார் சிவகார்த்திகேயன்.