TeaserDinesh R
செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.
Teaser
ஹார்வார்ட் தமிழ் இருக்கை – கவிஞர் தாமரையின் பங்களிப்பும் வேண்டுகோளும்
உலகப்புகழ் பெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று அமைய இருக்கிறது. தமிழ் தொடர்பான உருப்படியான வேலை என்றால் அது இதுதான். தமிழ் இருக்கை என்றால் என்ன? எதற்காக அது அமைக்கப்பட வேண்டும்? உலகெங்கும் சுமார் 10 கோடித் தமிழர்கள் உள்ளோம். உலகின் பெரிய இருபது மொழிகளில் தமிழும் அடக்கம். உலகின் ஆறு செம்மொழிகளில் தமிழும் ஒன்று. எனினும் உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. பன்னாட்டு ஆய்வாளர்களைக் கவர முடியாமையும், அதனால் உலகத்தரம் வாய்ந்த […]

ஹார்வார்ட் தமிழ் இருக்கை – தள்ளிப்போகாதே, தள்ளிப்போடாதே!
ஹார்வார்ட் தமிழ் இருக்கையை வாழ்த்தி கவிஞர் தாமரை எனக்கு ஒரு கடிதம் எழுதியதுடன் ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு ஒரு லட்சம் ரூபா நிதியுதவியும் அளித்திருக்கிறார். அவர் எழுதிய மடல் இதுதான். அன்புள்ள அ.முத்துலிங்கம் ஐயா அவர்களுக்கு, வணக்கம். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் ‘தமிழ் இருக்கை’ பற்றி நான் ஏற்கெனவே அறிந்திருந்த போதிலும், உங்களுடனான தொலைபேசி உரையாடலில் கூடுதலாகத் தெரிந்து கொண்டேன். தாங்கள் இதற்காக அமைக்கப் பட்டிருக்கும் குழுவில் ஒருவர் என்பதறிந்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன். முதன்முதலாக இது […]

ஹரிதாஸ் (1944)
(முக்கிய நடிகர்கள்: எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர்.ராஜகுமாரி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், என்.சி.வசந்த கோகிலம், புளிமூட்டை ராமசாமி) ‘ஹரிதாஸ்’ திரைப்படத்திற்கு தமிழ்த் திரையுலகில் ஒரு தனிப் பெருமையும், நீங்காத புகழும் உண்டு. இப்படத்தின் கதை ‘பக்த விஜயம்’ என்கிற நூலை ஆதாரமாகக் கொண்டது. 16-10-1944 இல் வெளிவந்த இத்திரைப்படம் சென்னை பிராட்வே தியேட்டரில் அந்த வருட தீபாவளி உட்பட 3 தீபாவளிகளைக் கொண்டாடி, 110 வாரங்கள் ஓடி ஒரு மாபெரும் சரித்திரம் படைத்தது. ராயல் டாக்கி டிஸ்ட்ரிபுயூட்டர்ஸ் தயாரிப்பான ‘ஹரிதாஸ்’ […]

அவியல் விமர்சனம்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் டாக்கீஸ், நான்கு குறும்படங்களை ஒன்றாக்கி 132 நிமிட அவியலாக்கியுள்ளனர். நான்கும் ஒவ்வொரு விதம். மோஹித் மெஹ்ராவின் ‘ஸ்ருதி பேதம்’, புறத்திணைப் பிரிவுகளான பெருந்திணையையும் (பொருந்தாக் காதல்) கைக்கிளையையும் (ஒரு தலை காதல்) கலந்து கட்டிய கதை. தன்னை விட ஒரு வயதே மூத்தவரான சித்தி மீது நாயகனுக்கு காதல் வந்து விடுகிறது. இது போன்ற பேசுப்பொருள்களை நாடகப் பாணியில் திரையில் உலவ விடுவதில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் சமர்த்தர். ஆனால், […]

சவாரி – படத்தொகுப்பாளர் கிஷோரின் கடைசிப்படம்
“இது அவருடைய கடைசிப்படம். ஈரம் படத்திற்குப் பிறகு வொர்க் சேட்டிஸ்ஃபிகேஷன் தந்த படம் எனப் பாராட்டினார் கிஷோர் சார்” என்றார் சவாரி படத்தின் இயக்குநர் குகன் சென்னியப்பன். ‘நாளைய இயக்குநர்’களில் இருந்து வந்தவர் குகன் சென்னியப்பன். நாளைய இயக்குநர்கள் எதிர் குழுவிலிருந்த கார்த்திக் யோகியுடன் இணைந்து, சவாரி கதையை உருவாக்கியுள்ளார். ‘செழியன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஒத்துக்கிட்டா இந்தப்படத்தைத் தயாரிக்கிறேன்’ என கண்டிஷன் போட்டுள்ளார் தயாரிப்பாளர். ‘ஸ்க்ரிப்ட் கொடுத்துட்டுப்போங்க. நான் தேர்வு செய்துதான் ஒத்துப்பேன். பிடிச்சிருந்ததுன்னா […]

சவாரி – ஸ்டில்ஸ்
[Show slideshow] 1 2 ►

காதலும் கடந்து போகும் விமர்சனம்
நெட்வொர்க்கிங்கில் வேலை தேடும் யாழினியும், அடியாளாக இருக்கும் கதிரும் எதிரெதிர் வீட்டில் வசிக்கின்றனர். அவர்களுக்குள் ஏற்படும் அறிமுகமும், நட்புமுமே படத்தின் கதை. வசனங்களில் நகைச்சுவை இருந்தாலும், படம் ஆங்காங்கே, குறிப்பாக முடியும் வேளையில் மனதை வருடிச் செல்கிறது. ‘உனக்கொரு வாழ்க்கை உண்டு’ எனச் சொல்லி, ஒருவனுக்கு மூளைச்சலவை செய்யப்படும் பொழுது, மெல்ல பதற்றம் எட்டிப் பார்க்கிறது. எல்லா மூளைச்சலவைக்கும் பின்னும் ஓர் அழகான கனவு தூண்டிலாக்கப்படும். உலகைச் சூழ்ந்துள்ள பெரும் அபாயங்களின் சிறு விதை இப்படித்தான் முளைக்கிறது. […]

சவாரி – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்
[Show slideshow]

ரெமோவுடன் இணையும் ராஜா
இன்னும் ரஜினிமுருகன் வெற்றியில் திளைத்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு, தனது அடுத்த படத்திலும் அந்த இமேஜைத் தக்க வைக்க அவ்வெற்றி கூடுதல் பொறுப்பை உருவாக்கியுள்ளது. அதற்கு ஏற்றாற்போல் ‘ரெமோ’ என தனது அடுத்த படத்தின் தலைப்பை ஈர்ப்பாக வைத்து விட்டு, படப்பிடிப்பிலும் தன்னை முழு மூச்சாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். “இந்த வருட, பருவ மழையின் தொடக்கத்தின் பொழுதே படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். குறிப்பிட்ட நேரத்தில், படத்தை முடிக்கும் முனைப்புடன் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், தனது இளம் குழு ஆர்வமுடனும் […]

பிச்சைக்காரன் – சகுனமும்! திரைப்படத் தலைப்பும்?
பிச்சைக்காரன் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரைப் பாராட்டிய இயக்குநர் மோகன் ராஜா, “இந்தப் படத்தின் வெற்றி, தலைப்பு விஷயத்தில் தமிழ் சினிமாவுக்கு இருக்கும் மூட நம்பிக்கைகளை உடைத்துள்ளது. ‘தனி ஒருவன்’ என்ற தலைப்பு வச்சதுக்கு, “என்ன சார் தனி ஒருவன்னு வச்சிருக்கீங்க? படம் அவ்ளோதான்”எனச் சொன்னாங்க. தனியா ஒருவன்னா வச்சேன்; தனி ஒருவன்னுதான வச்சேன்! அதுக்கே பிச்சைக்காரன்னு தலைப்பு வச்சாப்ல என்னைப் பார்த்தாங்க. அப்ப பிச்சைக்காரன் வச்சதுக்கு அவங்களை எப்படிப் பார்த்திருப்பாங்க? ‘மாதவனுக்கு இதான் […]

ராடான் குறும்பட பரிசு வழங்கும் விழா படங்கள்
[Show slideshow] 1 2 ►

பிச்சைக்காரன் – வெற்றிச் சந்திப்புப் படங்கள்
[Show slideshow]

கரையேறிய ஓடம் – ராடான் குறும்பட விழா
ராடான் நிறுவனம் நடத்திய சர்வதேச குறும்பட விழாவின் முதற்பதிப்பின் இறுதிச் சுற்று இன்று மதியம் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. உலக அளவில் அமெரிக்காவில் இருந்து கலந்து கொண்ட ‘ஓடம்’ படம், சிறு குழந்தைகள் தங்கள் பெற்றோரை விட்டுப் பிரிந்து அகதிகளாகச் செல்வதை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் முதற்பரிசை வென்றது. வாய்ப்புள்ளவர்கள் தவறாது காண வேண்டிய படம். உங்கள் மனதை உலுக்கிவிடும். அஞ்சலி இயக்கிய திகில் கதையைக் கொண்ட படமான ‘நிழல்’ இரண்டாம் பரிசையும் பெற்றது. இவற்றிற்குப் […]

சங்கு சுப்ரமணியம்
மாயலோகத்தில்.. “சுதந்திரச்சங்கு” என்றொரு பத்திரிகை அக்காலத்தில் பிரபலமாக வெளிவந்து கொண்டிருந்தது. இந்தியர் அடிமைப்பட்டுக் கிடந்த காலம். சுதந்திரப் போராட்டங்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராகத் தீவிரமாக நடத்தப்பட்டு வந்தது. மக்களின் சுதந்திர வேட்கையை, அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் தூண்டிவிட்ட பெருமை பல பத்திரிகைகளையே சாரும். இவைகள் தாம் இங்கு சுதந்திரப் போராட்டத்தை முன் எடுத்துச் சென்றன. அம்மாதிரியான பத்திரிகைகள் அக்கால ரூபாயின் மதிப்பிற்கேற்ப ஓரணா, இரண்டணா என்று விலை வைக்கப்பட்டு விற்கப்பட்டு வந்த கால கட்டத்தில், காலணாவுக்கு ஒரு […]
