32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4024 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 209)
அர்த்தநாரி – நாயகன் ராம்குமார் சினிமா

அர்த்தநாரி – நாயகன் ராம்குமார்

தல அஜித்தின் தீவர ரசிகரான ராம்குமார், “நான் தல அஜித்தின் உண்மையான விசுவாசி; வெறி பிடித்த ரசிகன் என்று சொல்லிக் கொண்டே போகலாம். எந்தவித பின்பலமுமின்றி தமிழ் சினிமாவில் காலூன்றி நின்ற அவரைத்தான் என்னுடைய முன்மாதிரியாக பார்க்கிறேன்!” என்று நெஞ்சம் மகிழ்கிறார். ராம்குமார் தனது ‘அர்த்தநாரி’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அடி எடுத்து வைக்கிறார். சராசரி சென்னை இளைஞர்களைப் போல இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் ராம்குமார். எனினும், நடிப்பின் மேல் இவர் […]

15/04/2016 Dinesh R
உதவி இயக்குநரான நாயகி மிஷா கோஷல் சினிமா

உதவி இயக்குநரான நாயகி மிஷா கோஷல்

நான் மகான் அல்ல, 7ஆம் அறிவு, முகமூடி மற்றும் ராஜா ராணி போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்தவர் மிஷா கோஷல். தற்போது, ‘உன்னோடு கா’ எனும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். நெடுஞ்சாலை புகழ் ஆரி, பால சரவணன், மாயா உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தில் பிரபு மற்றும் ஊர்வசி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். R.K. இயக்கி, C.சத்யா இசையமைக்கும் இந்தப் படத்தை தமிழ் சினிமா உலகின் மூத்த தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் மற்றும் அபிராமி […]

13/04/2016 Dinesh R
நம் நாயகம் – ஒரு முன்மாதிரி புத்தகம் புத்தகம்

நம் நாயகம் – ஒரு முன்மாதிரி புத்தகம்

அறுபத்து மூன்று வயது வரை வாழ்ந்த நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை 63 அத்தியாயங்களாகத் தொகுத்து, சிறுவர்களுக்கான “நம் நாயகம்” எனும் நூலை எழுதியுள்ளார் ஜெஸிலா பானு. தனது புத்தகத்தைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், ‘இந்தப் புத்தகத்தைப் படிச்சா ஒரு மனிதன் வாழ்க்கையில் எப்படி வாழணும்னு தெளிவு கிடைக்கும்’ என்கிறார். இப்படியொரு மதம் சார்ந்த நீதி போதனைப் புத்தகம் எப்படி முன்மாதிரி ஆகும்? பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பமும், யுக்தியும், எளிமையான மொழி நடையுமே அதற்குக் காரணம். புத்தகத்தில் […]

11/04/2016 Dinesh R
குற்றப்பரம்பரை – தலைப்பும் கதையும் வேறு சினிமா

குற்றப்பரம்பரை – தலைப்பும் கதையும் வேறு

இயக்குநர் பாரதிராஜாவின் கனவுப்படமான ‘குற்றப்பரம்பரை’க்கும், பாலாவின் அடுத்த படத்தின் கதைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், தான் மீண்டும் மீண்டும் சீண்டப்படுவதாக ஆவேசமாக உள்ளார் இயக்குநர் பாலா. வேல ராமமூர்த்தியின் நாவலைப் படமாக்குகிறார் பாலா என்ற செய்தி வெளியானது. பாலாவைக் கவர்ந்த அந்த நாவலின் பெயர் ‘கூட்டாஞ்சோறு’. விகடனில் தொடராக வெளிவந்தது. அந்நாவலில் இருந்து ஒரு களத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு, தானும் வேல ராமமூர்த்தியும் திரைக்கதை அமைத்துள்ளதாகக் கூறுகிறார் பாலா. சென்ற ஆண்டு, கூட்டாஞ்சோறு நாவலை […]

09/04/2016 Dinesh R
ஹலோ நான் பேய் பேசுறேன் விமர்சனம் சினிமா

ஹலோ நான் பேய் பேசுறேன் விமர்சனம்

பேய்ப் படம் என்றாலே காமெடிப் படம் என்றாகி விட்டது சூழல். இந்தக் குறைந்தபட்ச எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து விட்டாலே மக்கள் ரசிக்கத் தொடங்கி விடுகின்றனர். சாலை விபத்தில் சிக்கி இறக்கும் பெண்ணின் மொபைலைத் திருடி விடுகிறான் திருடனான நாயகன். மொபைலில் இன்கம்மிங் காலாக வரும் பேய் செய்யும் அட்டகாசம் தான் படத்தின் கதை. கதாநாயகனாக வைபவ். தனக்குக் கிடைத்த சோலோ வாய்ப்பைச் சிந்தாமல் சிதறாமல் உபயோகித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் வசன உச்சரிப்பும், உடல் […]

02/04/2016 Dinesh R
டார்லிங் – II விமர்சனம் சினிமா

டார்லிங் – II விமர்சனம்

ஐந்து நண்பர்கள் ஒரு மாளிகையில் பேயிடம் சிக்கிக் கொள்வதால், ‘ஜின்’ எனப் பெயரிடப்பட்ட படம் ‘டார்லிங்-II’ ஆனது. படத்தை ஸ்டுடியோ க்ரீன் வாங்கியது தலைப்பு மாற்றதுக்கான பிரதான காரணம். இயக்குநரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமிது. ஒரு விளையாட்டுத்தனம் எப்படி விபரீதம் ஆகிறது என்பதுதான் படத்தின் கதை. ‘காற்றில் ஒரு’ என்ற பாடலுடன் தொடங்குகிறது படம். அந்தப் பாடல், படத்தைப் பற்றிய முழுப் பிம்பத்தை அளிப்பதோடு, மனப்பிழற்வுக்கு உள்ளாகும் ஒரு இளம்பெண்ணுடைய […]

02/04/2016 Dinesh R
ஜகதலப்ரதாபன் (1944) சினிமா

ஜகதலப்ரதாபன் (1944)

(முக்கிய நடிகர்கள்: பி.யு.சின்னப்பா, டி.எஸ்.பாலையா, டி.பாலசுப்ரமணியம், பி.பி.ரங்காச்சாரி, எம்.எஸ்.சரோஜினி, யு.ஆர்.ஜீவரத்தினம், டி.ஏ.ஜெயலட்சுமி, எஸ்.வரலட்சுமி, சாரதாம்பாள்) ஜகதலப்ரதாபன் என்றால் அனைத்துத் துறைகளிலும் கை தேர்ந்தவன் – மிகுந்த திறமைசாலி எனப் பொருள் கொள்ளலாம். இப்போது ‘சகலகலா வல்லவன்’ என்கிறோமே – அதைப்போல. நிஜ வாழ்க்கையிலும் அப்படி ஒரு ஜகதலப்ரதாபன் இருந்தார். அவர் தான் பி.யு.சின்னப்பா. தமிழ்த் திரையில் ஆரம்பகாலங்களில் நடிப்பு என்பது, திரையில் தோன்றிப் பாடுவதுடன், பிராமண மற்றும் மணிப்பிரவாள நடையில் ஒரு மாதிரி இழுத்து இழுத்துப் பேசுவதாகத் […]

21/03/2016 Dinesh R
புகழ் விமர்சனம் சினிமா

புகழ் விமர்சனம்

ஏரியாவில் யாருக்கு எந்தப் பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக போய்த் “தட்டி”க் கேட்பவன் புகழ். அப்பழக்கம் அவனை எங்குக் கொண்டு போய் விடுகிறது என்பதுதான் படத்தின் கதை. படம் கம்யூனிசத்தின் தேக்க நிலையை பொதுப்புத்தியின் நோக்கில் விமர்சனம் செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கான அவசியத்தை வலியுறுத்துகிறது. எனினும் அதிகாரத்தின் முன் எதுவும் செல்லுபடியாகாது என்ற அதிருப்திக்கு படம் இட்டுச் செல்கிறது. தோழராக நடித்திருக்கும் கவிஞர் பிறைசூடன், அப்பாத்திரத்திற்கு நல்ல தேர்வு. படத்தில் மூன்று கதாபாத்திரங்கள் மிக இயல்பாய் வந்து […]

20/03/2016 Dinesh R
பஸ் 657 விமர்சனம் அயல் சினிமா

பஸ் 657 விமர்சனம்

தன் மகளின் மருத்துவச் சிகிச்சைக்காக, தான் வேலை செய்த கேசினோவை ஜேசன் காக்ஸுடன் இணைந்து கொள்ளையடிக்கிறார் லூக் வான். கொள்ளையடித்து விட்டு ஓடும்போது, தப்பிப்பதற்காக பேருந்தொன்றில் ஏறுகின்றனர். ரோந்துப் பணியில் இருக்கும் க்றிஸியா எனும் காவல்துறை அதிகாரி சந்தேகத்தோடு அப்பேருந்தைத் தொடருவதால், லூக் வான் குழு வேறு வழியின்றி பேருந்தைக் கடத்துகின்றனர். மொத்த காவல்துறையும் அப்பேருந்தை பின் தொடர்கிறது. இச்சிக்கலில் இருந்து லூக் வான் எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. எந்தப் புதுமையும் இல்லாத கதை. […]

20/03/2016 Dinesh R
சவாரி விமர்சனம் சினிமா

சவாரி விமர்சனம்

தொடர் கொலைகள் செய்யும் சைக்கோவும், அவனைத் தேடும் ஏ.சி.பி. சாலமனும் ஒரே காரில் சவாரி செய்கின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. படம் எந்தப் பூச்சுகளையும் நம்பாமல் முதல் ஃப்ரேமிலேயே கதையைத் தொடக்கி விடுகிறது. அங்கிருந்தே செழியனின் ஒளிப்பதிவு உங்களைக் கட்டிப் போட்டு விடுகிறது. எதையெல்லாம் ரசிகர்களால் யூகிக்க முடியுமோ, அதற்கு இடம் தராமல் இயக்குநரே முந்திக் கொண்டு அதைச் சொல்லி விடுகிறார். இடைவேளை வரை இப்படி விறுவிறுப்பாகச் செல்லும் சவாரி, அதன் பின் சற்றே […]

19/03/2016 Dinesh R