சினிமாகுக்கூ விமர்சனம்
எளிய மனிதர்களின் வாழ்க்கை பற்றிய படம் தமிழில் அரிதினும் அரிதாகவே வருகிறது. அப்படியொரு அரிதான படம் குக்கூ. பார்வையற்ற இருவருக்குள் மலரும் கலர்ஃபுல்லான காதல்தான் படத்தின் கரு. ‘அட்டகத்தி’ தினேஷ் தமிழாகக் கலக்கியுள்ளார். மூன்று மாதம் பார்வையற்றவர்களுடன் உடனிருந்து அவர்களது உடல்மொழியை அவதானித்து அப்படியே திரையில் பிரதிபலித்துள்ளார். இத்தகைய படத்தில் நடிப்பதைவிட வேறென்ன பேறு ஒரு நடிகருக்குக் கிடைத்துவிட முடியும்? சுதந்திரக்கொடியாக மாளவிகா. நமக்கு வேண்டப்பட்ட ஒரு நபர் போல், அவரை மிக நெருக்கமாக உணரச் செய்கிறது […]














