32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஆட்டிசம் 2019

Dinesh R சேலம் Published: 04/04/2019 1 நிமிட வாசிப்பு Updated: 23/06/2019 Others
எழுத்து அளவு:

ஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும் நியூரோக்ரிஷும் இணைந்து, AVTISM: Think Different என்ற கருத்தரங்கை நிடத்தினார்கள்.

ராதிகா செளந்தரராஜன், நித்யா மோகன், உஷா ராமாகிருஷ்ணன், விவேக் மிஸ்ரா, ரேமா ரகு ஆகிய மருத்துவர்களுக்கு இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது. அதில் குறிப்பாக, ‘Neuromodulation for challenging behaviours” என்ற தலைப்பில், TMS சிகிச்சை முறை பற்றி மருத்துவர் விவேக் மிஸ்ரா விளக்கியது ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோருக்கு நம்பிக்கை ஏற்படுத்தவல்லது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

TMS – Transcranial Magnetic Stimulation

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தலையில் கருவி பொறுத்தி, மூளையின் புரணியில் (Cortex) மின்காந்தப் புலத்தால் தூண்டுவதுதான் இச்சிகிச்சை முறையாகும். இதனால் குழந்தைகளின் anxiety அளவு குறைவதோடு, அவர்களின் intrapersonal skills-ஸும் அதிகரிக்கிறது. அமெரிக்காவில், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இச்சிகிச்சை அளிக்கப்படுகிறது. விவேக் மிஸ்ரா, தன் அனுபவத்தில் இச்சிகிச்சையின் மூலம் விளைந்த பலன்களை எடுத்தியம்பினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய மருத்துவர் S.கிருஷ்ணமூர்த்தி, ஆட்டிசம் வராமலிருக்க என்ன செய்யவேண்டுமென்ற வழிகளைக் குறித்து விளக்கியதின் காணொளி:

 

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.