32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பைரதி ரணகல் – தமிழிலும் மலையாளத்திலும் | SunNXT

Dinesh R சேலம் Published: 02/03/2025 2 நிமிட வாசிப்பு Updated: 03/03/2025 சினிமா
எழுத்து அளவு:

கீதா பிக்சர்ஸ் சார்பில், தயாரிப்பாளர் கீதா சிவராஜ்குமார் தயாரிப்பில், இயக்குநர் நாரதன் இயக்கத்தில், கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில், வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ஆக்ஷன் அதிரடி திரைப்படமான “பைரதி ரணகல்” படம், இப்போது தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் SunNXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது.

பிரம்மாண்ட வெற்றி பெற்ற மஃப்டி படத்தின் ப்ரீக்குவலாக உருவான படம் தான் “பைரதி ரணகல்”. மஃப்டி படம் தான் தமிழில் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில் “பத்து தல” படமாக வெளியானது என்பது குறிப்பிடதக்கது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மஃப்டி படத்தில், பைரதி ரணகல் எனும் டான் கதாப்பத்திரத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவாராஜ்குமார் நடித்திருந்தார். இந்தக் கதாப்பத்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து, அந்த கதாப்பாத்திரத்தின் முன் கதையை மையமாக வைத்து உருவான படம் தான் “பைரதி ரணகல்”.

ஒரு சாதாரண வழக்கறிஞராக இருந்த பைரதி ரணகல், எப்படி நாடே திரும்பிப் பார்க்கும் டானாக மாறுகிறான் என்பது தான் இப்படத்தின் கதை. அதிரடி ஆக்ஷன் படமாக, கமர்ஷியல் அம்சங்களுடன், அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகியிருந்த இப்படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நடிகர் சிவராஜ்குமார் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், ராகுல் போஸ், ருக்மணி வசந்த், அவினாஷ், சாயா சிங், தேவராஜ், ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். நவீன் குமார் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக ஆகாஷ் ஹிரேமத் பணியாற்றியுள்ளார். கன்னட மொழியில் வெளியாகித் திரையரங்கில் வெற்றி பெற்றதனைத் தொடர்ந்து, ஓடிடி வெளியீட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.