Shadow

பிக் பாஸ் 3 – நாள் 20

பளபளவென கமல் என்ட்ரி கொடுத்தார். வீட்டில் இருப்பவர்கள் நடந்து கொள்வதைப் பற்றி ஒரு முன்னுரை கொடுத்துவிட்டு, வெள்ளி நிகழ்வைப் பார்க்கலாமென அழைத்துக் கொண்டு போனார்.

காலை 8 மணி

‘சொடக்கு மேல சொடுக்கு போடுது’ எனும் பாடலுடன் விடிந்தது அன்றைய நாள்.

முதல் டாஸ்க்:

வனிதா கிண்டர் கார்டன் ஸ்கூல் டீச்சராக, மற்ற ஹவுஸ்மேட்ஸ்க்குப் பாடம் நடத்தவேண்டும். அலோ பிக்பாஸ், கிரியேட்டிவ் டீம்ல இருக்கிறவர்களுக்குத் தண்டத்துக்குச் சம்பளம் கொடுக்கறீங்க. கன்டென்ட் இல்லேன்னா சோஷியல் மீடியால கேளுங்க. சூப்பரான கண்டெண்ட் கிடைக்கும்.

சரவணன், மது, சாண்டி சமைத்துக் கொண்டிருக்கும் போது, உள்ளே வனிதாவும், ரேஷ்மாவும், ‘மதுவுக்கு சமையலே தெரியலே’ எனப் பேசிக் கொண்ட்டு இருந்தனர். ‘தமிழ்ப் பொண்ணு அது இதுனு பேசிட்டு, எனக்கு எல்லாம் தெரியும்ன்னு சொல்லிட்டு, இப்ப எனக்குத் தெரியாதுனு சொல்றா’ என வனிதா சொல்ல, ரேஷ்மா தன் பங்குக்குக் கொஞ்சம் ஏத்தி விட்டார்.

மது சாம்பார் வைக்க, அங்க வந்த வனிதா, ‘மதியம் நைட்டுக்கு என்ன செய்வீங்க?’ எனக் கேட்ட உடனே, ‘இதையே தண்ணி ஊத்தி கொடுத்திருவோம்’ என சரவணன் சொன்னார். அது சீரியஸா, இல்ல காமெடியா என்று தெரியவில்லை.

வெளியே கவின், லியாகிட்ட கடலை சாகுபடி பண்ணிட்டு இருந்தான்.

மீண்டும் கிச்சன்: சாண்டியும் தர்ஷனும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, சரவணனும் மதுவுக்கு சமையல் தெரியாது எனச் சொல்லிக் கொண்டிருந்தார். ‘அந்தப் பொண்ணை நம்பி நான் இந்த பொறுப்பேத்துக்கல. என் மேல நம்பிக்கை இருக்கு. என் பக்கத்துல நில்லும்மா, அது போதும்னு தான் சொன்னேன்’ என விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

சாக்‌ஷியும் ஷெரினும், கவின் – லியாவுக்கு நடுவில் இருக்கற நெருக்கத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தனர்.

அன்றைய நாள் வேகமாகப் போனது. இரவு சாப்பிடும் போது சாக்‌ஷி சமையலைக் குறை சொல்லிக் கொண்டு இருந்தார்.

சாக்‌ஷி: காலையில நல்லா இருந்தது. இப்ப இப்படி இருக்கே?

வனிதா: சூடா சாப்பிடும் போது நல்லா இருக்கற மாதிரி தான் தோணும். நாளைக்குப் பார்க்கலாம் வெயிட் பண்ணு.

சமையலைப் பொறுத்தவரைக்கும் எவ்வளவு தான் ருசியாகச் சமைக்கறவங்களும் 10 பேர், 15 பேருக்குச் சமைக்க சொன்னா ஜகா வாங்கிடுவர். எப்பவும் இரண்டு மூன்று பேருக்குச் சமைத்துக் கொண்டிருந்தவங்களைக் கூப்பிட்டு, திடீர் என 15 பேருக்குச் சமைக்கச் சொன்னால் வர பயம் தான் மதுவுக்கும் இருக்கும் என நினைக்கிறேன். அதுவுமில்லாமல் வனிதா, ரேஷ்மாலாம் நல்லா சமைக்கும் போது, எங்க நாம சொதப்பிடுவோமோ என்ற எண்ணமும் காரணமாக இருக்கலாம். ஆனால் மதுவுக்குச் சமைக்கவே தெரியாது எனரு தான் அங்கு சித்தரிக்கப்படுகிறது. இருக்கு, வீட்டுல இதை வச்சு ஒரு பஞ்சாயத்து இருக்கு.

வனிதா, ஷெரின், ரேஷ்மா டீம் சாக்‌ஷிக்கு வேப்பிலை அடித்துக் கொண்டிருந்தனர். கவின் மேட்டர் தான்.

நைட் மீராவுக்கும் லியாவுக்கும் ஏதோ வாய்க்கா தகராறு.

அதற்கு மீராவிடம் தர்சன் ஏதோ விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

மறுநாள் காலை: மீரா, தர்ஷன், சாக்‌ஷி சேர்ந்து மீட்டிங். மீரா தர்சனுக்குக் கொக்கி போட, ‘ஐ ஹேவ் எ கேர்ள் ப்ரெண்ட்’ எனச் சொல்லி தர்ஷன் புல்ஸ்டாப் வைத்துவிட்டார். அபி, மீரா, சாக்‌ஷி எல்லாரும் ஓவியா ரூட்டுல போக முயற்சி செய்கின்றனர்.

கமல் அத்தியாயம்:

எடுத்தவுடனே டாப் கியர் போட்டுக் கிளம்பினார் ஆண்டவர். சாண்டியின் என்டர்டெயின்மென்ட் போர்ஷனுக்கு மனதாரப் பாராட்டினார். கூடவே கலாய்ப்பதைப் பர்சனலாக எடுத்துக் கொள்ளும் மோகனை சைடில் ஒரு குத்து.

சாண்டி, கவின், முகின் டீம், கமலுக்காக, ‘அண்ணாத்தே ஆடுறார்’ பாடலை ரீ-மிக்ஸ் செய்து ஃபர்பாமன்ஸ் கொடுத்தார்கள். இதை இவர்கள் ப்ராக்டிஸ் செய்து கொண்டிருந்ததை கட் செய்யாமல் விட்ட எடிட்டிங் டீமிற்கு ஒரு குட்டு. அட்டகாசமா இருந்தது. சாண்டி டீம், வீட்டில் நடக்கின்ற எந்தப் பிரச்சினைக்கும் போகாமல், அடுத்து என்னவென பிளான் பண்ணி செய்து கொண்டுள்ளனர்.

நேற்றைய எபிசோட்டின் ஸ்பெஷலே, ஒவ்வொரு விஷயம் பேசும் போதும், இல்ல ஒருத்தர் கிட்ட பேசும் போது, அதுல இருந்து லீட் எடுத்து அடுத்த விஷயத்துக்குக் கொண்டு போன கமலோட திற்மை தான்.

பிரச்சினை வந்தால் மீன் மாதிரி நழுவி போய் விடுவதைப் பற்றி லொஸ்லியாவிடம் கேட்டார். ‘தர்ஷன் – வனிதா சண்டை போடும் போது தர்ஷன் பேசினது சரியெனப் பட்டுது. அதுக்கு மேல நான் என்ன பேசன்னு அமைதியா இருந்துட்டேன். ஆனா அவர் சாரி கேட்டது தேவையில்லை’ என லியா ஸ்டேட்மென்ட் கொடுத்தார்.

அதுக்கப்புறம் பாத்திமா பேட்டியில் சொன்ன மைனம்மா கதையை லியா முழுசா சொல்லி முடித்தார். அது தனியாகப் பார்த்துக் கொள்ளலாம். இந்த இடத்துல ஒரு லீட்..

அடுத்து லியா ஏன் ஜெயிலுக்குப் போக ஆசைபட்டாங்க எனக் கேள்வி வந்தது. ‘அந்த டாஸ்க்கில் நான் எதுவும் செய்யலை, அதனால நான் ஜெயிலுக்குப் போக நினைச்சஎன் எனச் சொன்னார். அப்படியே, ‘நீங்க என்ன நினைக்கிறீங்க?’ என மைக்கை வனிதாவிடம் கொடுத்தாரு.

‘ஆக்சுவலி நான் என்ன நினைச்சேன்னா’ என்ற டயலாக் தான் ஒவ்வொரு தடவையும் பேசினார் வனிதா. ‘அவ்வளவு சீக்கிரம் உன்னை நல்லவளாக விட மாட்டோம்’ எனச் சொன்ன வார்த்தையைக் கமல் சொல்லிக் காட்டியது செம்ம.

அடுத்த வலை சாக்‌ஷிக்கு. கொலை டாஸ்க் நடக்கும் போது, ‘அபிதான் இதுக்கு காரணம்’ என ஓவராகக் கொதித்த சாக்‌ஷி, வனிதா தான் கொலையாளி எனத் தெரிஞ்த பின் எந்த ரியாக்ஷனும் காட்டாதது ஏன்? ‘உங்க கோபம் கொலை மேலா? இல்லை அபி மேலா?’ என நேரடியாகக் கேள்வி கேட்டார். அதுக்கு வழவழான்னு ஒரு பதிலைச் சொன்னார் சாக்‌ஷி. மறுபடியும் லீட்.

கேப்டன் பதவியை அபிக்கு விட்டுக் கொடுத்ததை பத்தி தர்ஷனிடம் கேட்டார். தர்ஷன் சொன்ன பதில் ரொம்ப கன்வின்சிங்கா இருந்தது. அபிக்கு கேப்டன் பதவி போகக்கூடாது என வனிதா பேசியதை நான் கேட்டு தான் இந்த முடிவு எடுத்ததை சபையில் போட்டு உடைத்தார் தர்சன். மீண்டும் ஒரு லீட்.

வனிதா அபியை அன்ஸ்டேபிள்னு சொன்னதைப் பற்றி வனிதாவிடம் ஆரம்பித்தார். எப்பவும் போல வனிதா நீட்டி முழுக்கி அட்டென்ஷன் சீக்கிங் செய்யவேண்டுமென அபி சில விஷயங்கள் செய்றதாகக் குற்றம் சொன்னார்.

‘அட்டென்ஷன் சீக்கிங், மற்றவர்கள் மேல் ஃபோகஸ் ஆகக்கூடாதுங்கிற எண்ணம் மத்தவங்களை விட உங்களுக்குத்தான் அதிகம் இருக்குன்னு எனக்குத் தோணுது’ என கமல் நேரடியாக சிக்ஸ் அடித்தார். மீண்டும் ஒரு லீட்.

ஃபிஷ் மார்க்கெட் என அபி சொன்னதைப் பற்றிப் பேச்சு வந்தது. அதற்கு தன் பாணியில் விளக்கம் சொன்னார் கமல். ‘உன் குரல் மட்டுமே ஓங்கி ஒலிப்பது தவறு. நாம் பேசும் அளவுக்கு கேட்கவும் வேண்டும்’ எனச் சொன்னது கமல் டச்.

மறுபடியும் அபியிடம் அந்தப் பேச்சைத் தொடங்கிய போது, வனிதாவுக்குத் தான் ஸ்கெச்சு எனத் தோன்றியது. ஆனால் ஸ்கெட்ச் மதுவுக்குத் திதும்பிவிட்டது. மது பேசின விஷயத்தைத் தவறென உறுதியாகச் சொன்ன கமல், ‘விக்டிம்ஸைப் பொறுப்பாளியாக்காதீங்க’ எனக் கருத்து சொன்னார்.

அடுத்து தர்ஷன் ஹீரோவான மாஸ் மொமண்ட்ஸ் பற்றி பேச்சு வந்தது. வனிதா தன்னோட பார்வையைப் பற்றிச் சொல்லி முடித்துவிட்டார்.

உண்மையில் மோகன் அவுட்டான உடனே, வனிதா சாக்‌ஷியிடம் ரூல்ஸை சேஞ்ச் செய்து விளையாடலாம் எனச் சொல்லிருக்கார். இது அப்பவே தர்ஷனை ட்ரிக்கர் பண்ணிருக்கு, அவர் மறுத்தும் பேசியிருக்கிறார். தன்னால் விளையாட முடியாமல் போனதற்குப் பின், வனிதாவின் நாடகத்தைப் பார்த்து தான் தர்ஷனுக்குக் கோபம் வந்துள்ளது.

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் எனச் சொன்னது தவறென மறுபடியும் நேரடியாவே வனிதாக்குப் புத்திமதி சொன்னார். அதைப் புரிந்து கொள்ளாமல் வனிதா விளக்கம் கொடுக்க முயற்சி செய்ய, அப்படியே நிறுத்தின கமல், ‘இப்ப உங்ககிட்ட பேசறது நேத்து நடந்த கேமுக்கு இல்லை; நீங்க மத்த ஹவுஸ்மேட்ஸ் கிட்ட காண்பிக்கும் ஆட்டிட்யூட் பத்திச் சொல்றேன்’ என ஒரு யார்க்கரைப் போட்டு, வனிதாவோட சோலியை முடித்துவிட்டார்.

அதோட நிறுத்திக் கொள்ளாமல், மற்ற்ந் ஹவுஸ்மேட்ஸுக்கும் டோஸ் விழுந்தது. தர்ஷன் குரல் கொடுக்கும் போது, எனக்கென்னவென இருந்ததைச் சுட்டிக் காட்டினார். ஆனால் அந்த ஸ்கெட்சும் வனிதாவுக்கு தான். தேவையான நேரத்தில் பேசலாம், குரல் கொடுக்கலாம், தப்பில்லை என முடித்தார் கமல்.

அடுத்து எவிக்‌ஷன் பற்றிப் பேச்சு வந்தது. வழக்கமாகச் சனிக்கிழமை யாரையாவது சேவ் பண்ணுவார்கள். ஆனால் இன்னிக்கு அப்படிக் கிடையாது என பீடிகையோடு ஆரம்பித்த கமல், சாண்டி கிட்ட சொல்லி, உள்ளே இருந்தே கவரைப் பிரித்துப் படிக்கச் சொன்னார். மோகன் பெயர் வந்த உடனே, சரி இன்னிக்கே எவிக்சன் போலருக்கு என நினைத்தது உண்மை. அவரும் இது தான் சாக்கு எனக் கட்டிபிடிச்சு, முத்தம் கொடுத்து பெர்ஃபாமன்ஸ் பண்ணிட்டிருந்தார்.

கொஞ்ச நேரம் கழித்து மோகன் சேவ் எனச் சொல்லி ஷாக் கொடுத்தார். ‘அப்ப இந்த ஸ்கெட்சு நமக்கு தான் போல’ என மோகன் அசடு வழிந்து கொண்டிருந்தார்.

அழகாக லீட் எடுத்து, அட்டகாசமாக ப்ரசென்ட் பண்ணின கமலுக்கு ஷொட்டு;

ஒரு முழ நீளத்துக்கு நீட்டி முழக்கும் வனிதாவுக்கு குட்டு;

தர்ஷன் தான் ஹிட்டு.

– மகாதேவன் CM