32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

வெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்

Dinesh R சேலம் Published: 14/07/2019 2 நிமிட வாசிப்பு Updated: 18/08/2019 சினிமா
எழுத்து அளவு:

Vennila-Kabadi-Kuzhu-2-movie-review

கட்டபொம்மன் போக்குவரத்துக் கழக ஓட்டுநரான பசுபதிக்கு, கபடி விளையாட்டு என்றால் உயிர். தந்தையின் விருப்பத்தைத் தாமதமாக உணரும் விக்ராந்த், தனது சொந்த ஊரான கணக்கன்பட்டிக்குச் சென்று ‘வெண்ணிலா கபடி குழு’வில் இணைகிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

1989இல் நடக்கும் பீரியட் படம். கதை மட்டும் அக்காலகட்டத்தில் நிகழ்வது போலல்லாமல், படமே 80களின் இறுதியில் எடுக்கப்பட்டது போல் தொடங்குகிறது. இவர் தான் நாயகி, இவர் தான் நாயகன், இவர் நாயகனின் அப்பா, இது நாயகனின் குடும்பம், அவரது பக்கத்து வீட்டுக்காரர், காமெடியன் கஞ்சா கருப்பு என அறிமுகப் படலத்திற்கென தனித் தனி காட்சிகள் வைத்துள்ளனர். கதையோடு ஒட்டாத நகைச்சுவைத் திணிப்புகள் படத்தின் ஆகப் பெரிய மைனஸ்.

2009 இல் வந்த முதற்பாகம் போல், காதல் காட்சிகள் அவ்வளவு ரசனையாகவும் க்யூட்டாகவும் இல்லை. அர்த்தனா பினு, விக்ராந்துக்கும் இடையேயான காதல் காட்சிகளில் இன்னும் அழுத்தத்தைக் கூட்டியிருக்கலாம். பசுபதி மட்டும் தனது தேர்ந்த நடிப்பால் கவருகிறார். முக்கியமாக விக்ராந்தைச் சென்னைக்குப் போகும்படி சொல்லும் அந்த மொட்டை மாடிக் காட்சியில், அவரது அனுபவம் மிளிர்கிறது.

இரண்டாம் பாதியில் தான், வெண்ணிலா கபடி குழுவினரையே காட்டுகின்றனர். அது வரையில் ஒரு கதை, அதன் பின் முதற்பாகத்தின் தொடர்ச்சியாய்ப் பயணிக்கிறது படம். ஆடுகளம் கிஷோர், பரோட்டா சூரி, அப்புகுட்டி என குழு உருவாகிறது. பின் கபாடி போட்டிக்கான பயிற்சி, முன் தயாரிப்புகள், போட்டிகள் என விறுவிறுப்பாகப் போகிறது.

முதற்பாகத்தைப் போலவே முடிக்கவேண்டும் என்று நினைத்திருப்பார் போலும். சுபமாய் முடிய வேண்டிய படத்தை வம்படியாகச் சோகக் காவியமாக்கி விடுகிறார் இயக்குநர் செல்வசேகரன்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.