Shadow

உலகத்தர சிகிச்சையைச் சாத்தியமாக்கும் மேம்படுத்தப்பட்ட “புத்தி கிளினிக்”

நரம்பியல், மன வளம் மற்றும் முதியோர் நலம் பேணுதல் முதலானவற்றிற்கு உகந்த சிகிச்சை அளிக்க உன்னதமான ஓர் இடம் – புத்தி கிளினிக்!

சென்னை தேனாம்பேட்டையில், உலக தரத்தில் இயங்கும் இந்த சிகிச்சை மையம் தனது செயல்பாடுகளை மேலும் சிறப்பாக விரிவாக்கம் செய்ய புதியதொரு பரிமாணத்துடன் புதியதொரு கட்டட வளாகத்தில் தனது சேவைப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.

நான்கு மண்டலங்களாக இவ்வமைப்பு வரையறுக்கப்பட்டுள்ளது.

1. The Alchemist Zone
மருத்துவ அமைப்புகள், வரவேற்பறை, பரிசோதனை அறை, ஆராய்ச்சி அமைப்புகள், பரிசோதனை கூடம் மருந்தகம் முதலியன.

2. The Mindfulness Zone
நரம்பியல் மற்றும் மூளை சம்பத்தப்பட்ட சிகிச்சை முறைகள், அவற்றை செயல்பட வைக்கும் செயல்முறைகள், யோகா பயிற்சிகள், மன, குண இயல்புகளின் செயல்பாடுகளின் பிரதிபலிப்பின் அடிப்படையில் சிகிச்சை முறை முதலியன.

3. The Rehab Zone
வலி மற்றும் இடம் பெயர்தல் ஆகியவற்றிற்கான சிகிச்சை முறைகளை செயல்படுத்த தனிஅறைகள் , உடல் பயிற்சி கூடம் முதலியன.

4. The Holistic Care Zone
Ayurveda, Naturopathy ,Acupuncture, Acupressure, Reflexology போன்ற சிகிச்சை முறைகளின் செயலாக்கம் முதலியன.

மேல்குறிப்பிட்ட நான்கு பிரிவுகள் தவிர்த்து இன்னொரு மண்டலமும் உள்ளது.

The Resource Zone

நூலகம், உணவகம் மற்றும் பயிற்சி அறை/ பயிற்சி வகுப்புகள் முதலியன.

புத்தி கிளினிக்கின் நிறுவனரும் மருத்துவருமான S. கிருஷ்ணமூர்த்தி, “உலக தரத்தில் புத்தி கிளினிக் சிறந்ததோர் அமைப்பாக செயல்பட்டு சேவை செய்து வருகிறது. சிகிச்சைக்காக வருவோரின் உடல் நிலை மற்றும் மனோ நிலை ஆகியவற்றின் அடிப்படையில் எங்களது செயல்பாடுகள் அமையும். தனித்தனி சிகிச்சைப் பிரிவுகளுக்கு தனித்தனி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். எனினும் ஒருங்கிணைந்த முறையில் தான் அனைத்து செயல்பாடுகளும் அமைந்திடும் .

அனைத்து சிகிச்சை முறைகளும் அதற்கேற்ற வசதிகளும் ஒருங்கே அமையப்பெற்ற புத்தி கிளினிக், புராதன பழமை வாய்ந்த சிகிச்சை முறைகளையும் நவீன செயல்முறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதில்தான் புத்தி கிளினிக்கின் சிறப்பம்சம் அடங்கியுள்ளது” என்றார்.

அப்போலோ மருத்துவமனையின் எம்.டி. செல்வி சுனீதா ரெட்டி, தொற்று நோய்களால் ஏற்படும் அழுத்தம் குறித்தும், முதியவர்களின் தள்ளாமை, அவர்களது மனோநலம் மற்றும் நரம்பியல் குறைபாடு பற்றியும் பேசினார். நோயின் மூலக்காரணத்தை மிகச் சரியாகக் கண்டறிவது அவசியம் என்றவர், புத்தி கிளினிக்கின் ஒருங்கிணைந்த மருத்துவத்தின் செயற்பாடுகளைச் சிலாகித்தார். முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாகும் பட்சத்தில், அவர்களது ஆரோக்கியமும் எதிர்காலமும் மருத்துவ உலகின் கையிலுள்ளது என்பதை அழுத்தமாகப் பதித்தார். இதைச் சாத்தியப்படுத்தும் வழிமுறைகளைக் கண்டறிந்து, வீட்டிலும், மருத்துவமனையிலும் பராமரிப்பை ஒருங்கிணைத்து, டிஜிட்டல் பராமரிப்பிற்கு முன்னுதாரணத்தை உருவாக்கவேண்டும் என்றார். இத்தகைய முயற்சியில், புத்தி கிளினிக்கும், அப்போலோ மருத்துவமனைகளும் எப்பொழுதும் முதல் அடி வைக்கும் என்றார்.

எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான சுதா சேஷய்யன், “புத்தி கிளினிக்கின் பல்துறை மருத்துவ அணுகுமுறை, குறிப்பாக மனநலம் சார்ந்தும், நரம்பியல் குறைபாடு சார்ந்தும், தொற்று நோய்கள் சார்ந்தும் அவர்களது செயற்பாடுகள் சிறப்பாக உள்ளன. புத்தி கிளினிக்கின் அனுபவபூர்வமான ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும் பாராட்டுக்குரியது. ஆட்டிசம், எப்பிலெப்ஸி (வலிப்பு நோய்), டெமென்ஷியா (மனச்சோர்வால் ஏற்படும் மறதிநோய்), நீள் ஆயுள் ஆகியவன மீது ஒருங்கிணைந்த மருத்துவத்தின் செயற்பூர்வமான ஆய்வுகளைச் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவர்கள் மட்டுமல்லாது தெரபிஸ்ட்கள், சைக்காலஜிஸ்ட்கள், ஆயுஷ் (AYUSH) பிரிவின் நிபுணர்கள் ஆகியோர்களின் ஒருங்கிணைந்த அணுகுமுறை சார்ந்து நிறைய புத்தகங்களையும், கருத்தரங்குகளையும் கொண்டு வருகின்றனர். ஒரு தேர்ந்த மருத்துவ அணுகுமுறையை, இந்தியர்களுக்காக இந்தியர்களாலேயே உருவாக்கப்படுவதில், தமிழகத்தைச் சேர்ந்த புத்தி கிளினிக் முன்னோடியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்” என்றார்.

வேலய்யன், முருகப்பா குழுமத்தின் ஓய்வுபெற்ற தலைவர், ராஜு வெங்கட்ராமன், மெட்ஆல் ஹெல்த்கேரின் முன்னாள் தலைவர், திருமதி சரளா மற்றும் திரு. V. கிருஷ்ணன் (கொடையாளர்கள்), மருத்துவர் ரமா ரகு, ரகு வெங்கட்நாராயண் & காயத்ரி கிருஷ்ணமூர்த்தி (இணை நிறுவனர்கள் + இயக்குநர்கள்) ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.