Shadow

Tag: The Buddhi Clinic

Aim For SEVA | ஆட்டிச நிலையாளர்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ சேவை

Aim For SEVA | ஆட்டிச நிலையாளர்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ சேவை

மருத்துவம்
சர்வதேச ஆட்டிசம் விழிப்புணர்வு மாதத்தைக் குறிக்கும் 6 ஏப்ரல் 2024 அன்று, மாண்புமிகு தமிழக ஆளுநர் ஸ்ரீ ஆர்.என்.ரவி அவர்கள், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள Aim for Seva - சுவாமி தயானந்த க்ருபா இல்லத்தின் (கிருபா) வளாகத்திற்குச் சென்று குடியிருப்புகள், மருத்துவ நிலையம், பயிற்சிக் கூடம் உள்ளிட்ட பல புதிய வசதிகளைத் திறந்து வைத்தார். அவருடன், நிர்வாக அறங்காவலரான திருமதி ஷீலா பாலாஜி, ஸ்வாமி சாக்ஷாத்க்ருதானந்த சரஸ்வதி மற்றும் திரு. ரவீ மல்ஹோத்ரா (அறங்காவலர்கள்- Aim for Seva), புத்தி கிளினிக் நிறுவனரும் மருத்துவருமான எண்ணபாடம் எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் உடனிருந்தனர். மாண்புமிகு ஆளுநர் தனது உரையில், நீண்ட கால பராமரிப்பின் அவசியத்தை எடுத்துரைத்து, அத்தகைய குழந்தையின் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் மனதில் எழுப்பும் கேள்வி, "எனக்குப் பிறகு என்ன?" என்பதைச் சுட்டிக் காட்டினார். இந்தச் சூழலில், இந்த வசதியை முன்...
உலகத்தர சிகிச்சையைச் சாத்தியமாக்கும் மேம்படுத்தப்பட்ட “புத்தி கிளினிக்”

உலகத்தர சிகிச்சையைச் சாத்தியமாக்கும் மேம்படுத்தப்பட்ட “புத்தி கிளினிக்”

மருத்துவம்
நரம்பியல், மன வளம் மற்றும் முதியோர் நலம் பேணுதல் முதலானவற்றிற்கு உகந்த சிகிச்சை அளிக்க உன்னதமான ஓர் இடம் - புத்தி கிளினிக்! சென்னை தேனாம்பேட்டையில், உலக தரத்தில் இயங்கும் இந்த சிகிச்சை மையம் தனது செயல்பாடுகளை மேலும் சிறப்பாக விரிவாக்கம் செய்ய புதியதொரு பரிமாணத்துடன் புதியதொரு கட்டட வளாகத்தில் தனது சேவைப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. நான்கு மண்டலங்களாக இவ்வமைப்பு வரையறுக்கப்பட்டுள்ளது. 1. The Alchemist Zone மருத்துவ அமைப்புகள், வரவேற்பறை, பரிசோதனை அறை, ஆராய்ச்சி அமைப்புகள், பரிசோதனை கூடம் மருந்தகம் முதலியன. 2. The Mindfulness Zone நரம்பியல் மற்றும் மூளை சம்பத்தப்பட்ட சிகிச்சை முறைகள், அவற்றை செயல்பட வைக்கும் செயல்முறைகள், யோகா பயிற்சிகள், மன, குண இயல்புகளின் செயல்பாடுகளின் பிரதிபலிப்பின் அடிப்படையில் சிகிச்சை முறை முதலியன. 3. The Rehab Zone வலி மற்றும் இடம் பெயர்தல் ஆகியவற்றிற்கான சி...
புத்தி க்ளினிக் – 10 ஆம் ஆண்டு விழா

புத்தி க்ளினிக் – 10 ஆம் ஆண்டு விழா

மருத்துவம்
நவம்பர் 30, புத்தி க்ளினிக்கின் 10 ஆண்டு விழாவைச் சிறப்பிக்க, சிறப்புப் பேச்சாளர்கள் திரு. அனுராக் சர்மா, லோக்சபா M.P. மற்றும் இயக்குநர் - Baidhyanath குழுமம்; ப்ரொஃபசர் பர்மீந்தர் சச்தேவ், நியூரோ சைக்காட்ரி இன்ஸ்டிட்யூட், சிட்னி, ஆஸ்திரேலியா; வேணு ஸ்ரீநிவாசன், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். உலக அரங்கில், இறப்போர் எண்ணிக்கையில் இறப்பிற்கான காரணங்களில், மாரடைப்பிற்கு அடுத்தபடியாக 9 மில்லியனில் அணிவகுத்து நிற்பது நியூரோலாஜிகல் உபாதைகளே! நியூரோலாஜிகல் மற்றும் மனவளம் சம்மந்தப்பட்ட நோய்களுடனும், அதன் குறைபாட்டுடனும் வாழவேண்டிய ஓர் அவல நிலை பெருகி வருகிறது. அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கும் இது பொருந்தும். புத்தி க்ளினிக், மூளை மற்றும் மனவளம் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும், சீர்நிலையை மீண்டும் கொண்டு வருவதிலும் இந்ந...
தி புத்தி – மூளையின் மூப்பு

தி புத்தி – மூளையின் மூப்பு

மருத்துவம்
பால்டிமோர் நேஷ்னல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஏஜிங்-இல் ஆராய்ச்சி நிபுணராக உள்ள மருத்துவர் மாதவ் தம்பிசெட்டியும், சென்னையின் தி புத்தி க்ளினிக்கின் நிறுவனருமான மருத்துவர் எண்ணப்பாடம் S. கிருஷ்ணமூர்த்தி, மூளை மற்றும் மனதின் மூப்பு பற்றிய சுவாரசியமான மிக நீண்ட உரையாடலை முன்னெடுத்தனர். அவற்றிலிருந்து சில. 65 வயதிற்கு மேல், புறணி (Cortex), மூளையின் க்ரே மேட்டர், கார்டிசால் (Cortisol) ஆகியவை 5 எம்.எல். அளவுக்குத் தேய்கிறது. அதனால் அறிவாற்றல் (Cognitive ability), புலன் உணர்ச்சி (Sensory perception), சமநிலை உணர்ச்சி (Emotinal balance) ஆகியவைப் பாதிப்படைகின்றன. 2010 ஆம் ஆண்டு, இந்தியாவில், மூளைத்தேய்வால் (Dementia) பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.7 மில்லியனாக இருந்தது.  2030 இல் அது இரட்டிப்பாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தி புத்தி க்ளினிக், தன் ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ...