32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

அயல் சினிமா

435 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 28 / 29
செய்திகள் வரிசை (பக்கம் 28)
தி வாக் விமர்சனம் அயல் சினிமா

தி வாக் விமர்சனம்

சில அடி உயரத்தில், இரண்டு கம்பங்களுக்கு இடையே கட்டப்பட்டிருக்கும் கயிற்றின் மேல் நடப்பதை என்னவென்று சொல்வீர்கள்? பொதுவாக, கழைக்கூத்து அல்லது சர்க்கஸ் வித்தை என்போம். இல்லவே இல்லை.. ‘அது ஒரு கலை’ என்கிறார் பிலிப். அந்தக் கலைஞன், தன் 24வது வயதில் செய்த மயிர்க்கூச்செறியும் சாகசம்தான் ‘தி வாக்’ திரைப்படத்தின் கதை. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள மிக அற்புதமான படம். இயக்குநர் ராபர்ட் ஜெமெக்கிஸ் மிரட்டியுள்ளார். பிலிப்பாக நடித்துள்ள ஜோசஃப் கோர்டான்-லெவிட்டின் அறிமுகமே அமர்க்களம். அமெரிக்காவின் […]

09/10/2015 Dinesh R
எவரெஸ்ட் 3டி விமர்சனம் அயல் சினிமா

எவரெஸ்ட் 3டி விமர்சனம்

(Everest 3D) 1996-இல், எவரெஸ்ட் சிகரத்தில் நிகழ்ந்த உறைய வைக்கும் ஒரு விபத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள மிரட்டலான படம். ‘அட்வென்ட்சர் கன்சல்டன்ட்ஸ் (Adventure Consultants)’ என தான் தொடங்கிய நியூசிலாந்து ட்ரெக்கிங் நிறுவனத்தின் சார்பாக, எவரெஸ்ட் சிகரமேற ராப் ஹால் எட்டுப் பேரை அழைத்துச் செல்கிறார். அந்தக் குழு எதிர்கொண்ட இயற்கைச் சீற்றத்தை முப்பரிமாணத்தில் காட்டி முதுகு தண்டைச் சில்லிட வைத்துள்ளார் இயக்குநர் பல்டசர் கொர்மக்குர். குழுவை வழிநடத்தும் தலைவர் ராப் ஹாலாக ஜேஸன் க்ளார்க் […]

17/09/2015 Dinesh R
மினியன்ஸ் விமர்சனம் அயல் சினிமா

மினியன்ஸ் விமர்சனம்

(Minions) வெறுக்கத்தக்க மனிதரான க்ரூவிடம் பணி புரியும் மினியன்ஸ்களை டெஸ்பிக்கபிள் மீ 1 & டெஸிபிக்கபிள் மீ 2 ஆகிய படங்களிலேயே பார்த்து விட்டோம். ஆனால் அவைகள் யார் என்ன ஏது போன்ற விவரங்கள் அப்படங்களில் சொல்லப்படவில்லை. அவர்களின் வரலாறைத்தான் மினியன்ஸ் படத்தில் சொல்லியுள்ளனர். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மிக மூத்த சின்னஞ்சிறு உயிரினங்கள்தான் நம் அழகு மஞ்சள் நாயகர்களான மில்லியன்ஸ். அவர்களின் ஒரே லட்சியம் ஒரு வில்லனைத் தங்களுக்குத் தலைவனாகப் பெற வேண்டுமென்பதே.! […]

24/07/2015 Dinesh R
டெஸ்பிக்கபிள் மீ 2 அயல் சினிமா

டெஸ்பிக்கபிள் மீ 2

(Despicable Me 2) வெறுக்கத்தக்க மனிதரான க்ரூ, மூன்று பெண் குழந்தைகளின் பாசக்கார தந்தையாக மாறி விடுகிறார். அதுவும் சிறு வயதில் தன் தாயிடமிருந்து கிடைக்கப் பெற்ற அலட்சியமும் அசிரத்தையும், அவர் மனதிலூன்றி க்ரூவை நல்ல தகப்பனாக மாற்றி விட்டிருந்தது. அது மட்டுமின்றி, உலகின் தலை சிறந்த வில்லனாக வேண்டுமென்ற லட்சியத்தை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு, ஜாம் & ஜெல்லி செய்து விற்பவராக தொழிலையும் மாற்றி விடுகிறார். யாரோ ஒரு பிரகஸ்பதி, ஓர் ஆய்வுக்கூடத்தையே திருடி விடுகிறான். […]

20/07/2015 Dinesh R
டெஸ்பிக்கபிள் மீ 1 அயல் சினிமா

டெஸ்பிக்கபிள் மீ 1

(Despicable Me 1) ‘டெஸ்பிக்கபிள் மீ’ என்றால் ‘வெறுக்கத்தக்க நான்’ எனப் பொருள் கொள்ளலாம். இந்தப் படத்தின் நாயகனான “க்ரூ” தன்னை அப்படித்தான் அழைத்துக் கொள்வார்; மற்றவர்களும் அப்படியே தன்னை நினைக்கவேண்டும் என விரும்புபவர். அவரின் வீட்டு சோஃபாவையே பெரிய முதலை வடிவத்தில் வைத்திருக்கும் கொடிய ரசனைக்காரர். க்ரூவின் அறிமுகத்தின்போதே அவரது குணத்தை அழகாக காட்டியிருப்பார்கள். அழும் சிறுவன் ஒருவனுக்கு பலூன் ஊதி அவனைச் சமாதானப்படுத்திவிட்டு, அவன் மகிழ்ச்சியுடன் பலூனின் மென்மையில் மனம் லயிக்கும்போது, அந்த பலூனை […]

15/07/2015 Dinesh R
சான் ஆன்ட்ரியாஸ் விமர்சனம் அயல் சினிமா

சான் ஆன்ட்ரியாஸ் விமர்சனம்

San Andreas சான் ஆன்ட்ரியாஸ் படம் நில நடுக்கத்தை மையமாகக் கொண்ட படம். இப்படம் மே 29ஆம் தேதி வெளியானது. படத்தின் பிரமோஷன் மற்றும் மார்க்கெட்டிங்கில் தீவிரமாக படக்குழுவினர் ஈடுபட்டிருந்த சமயத்தில், ஏப்ரல் 15 அன்று நேபாளத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. படத்தின் பிரமோஷன்களை அப்படியே நிறுத்தி, என்னச் செய்யலாமென யோசிக்கத் தொடங்கினர். படத்தைத் தயாரித்த “வார்னர் பிரதர்ஸ்”, ஒரு பெரிய தொகையை நிவாரண நிதியாக அளித்தாலும், ‘வேறென்னச் செய்ய முடியும்?’ என யோசித்து, நில நடுக்கம் […]

03/06/2015 Dinesh R
மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோட் விமர்சனம் அயல் சினிமா

மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோட் விமர்சனம்

MAD MAX: FURY ROAD உலகம் முழுவதும் பாலைவனமாக மாறிவிட்டால் மனிதர்கள் என்னாவார்கள்? ஃப்யூரி ரோடின் கதைக்களமும், காலக்கட்டமும் அதான். இம்மார்ட்டன் ஜோ எனும் சர்வதிகாரியின் ஐந்து மனைவிகளைக் கடத்தி விடுகிறார் கமாண்டர் (imperator) ஃப்யூரியோஸா. தனது ஐந்து மனைவிகளைக் காப்பாற்ற மொத்த படைப்பிரிவையும் பாலைவனத்தில் இறக்குகிறார் ஜோ. சந்தர்ப்ப நெருக்கடியால், மேக்ஸ் ஃப்யூரியோஸாக்கு உதவ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஜோ, ஃப்யூரியோஸாவைப் பிடித்தாரா இல்லையா என்பதுதான் கதை. ஃப்யூரியோஸாவாக சார்லைஸ் தெரான். நம்மூர் இயக்குநர் பாலா […]

16/05/2015 Dinesh R
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 விமர்சனம் அயல் சினிமா

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 விமர்சனம்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 6 ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் தொடர் தொடங்கி 15 வருடங்கள் ஆகிறது. இந்தத் தொடரின் ஆறு படங்களில் ஒன்றில் மட்டும் நடித்திராத முக்கிய கதாநாயகனான பால் வாக்கர், ஏழாவது பாகத்தின் படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாக 2013இல் விபத்தில் இறந்துவிட்டார். இந்தத் தொடர் வரிசை படங்களுக்கு அது பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது. அதில் இருந்து படக்குழு எப்படி மீண்டது என்பதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. அது மட்டுமில்லாமல், இந்தத் தொடரின் நான்கு […]

09/04/2015 Dinesh R
கிங்ஸ்மேன்: தி சீக்ரெட் சர்வீஸ் அயல் சினிமா

கிங்ஸ்மேன்: தி சீக்ரெட் சர்வீஸ்

(Kingsman: The Secret Service) கிங்ஸ்மேன் என்பது ஒரு தையற்கடை. எனினும், இது ஜேம்ஸ் பாண்ட் பாணி படமென்று தலைப்பைக் கொண்டே யூகிக்கலாம்.  மனிதாபிமானத்தை வைரஸாகவும், புவி வெப்பமயமாதலை காய்ச்சலாகவும் உருவகிக்கும் கோடீஸ்வரரான ரிச்மாண்ட் வேலண்டைன்.. வைரஸ் உலகை அழிக்கும் முன் தீர்வு காணத் துடிக்கிறார். அதாவது மக்களுக்குள் வன்முறை உணர்ச்சியைக் கிளிர்ந்தெழச் செய்து, ஒருவரை ஒருவர் தாக்கி அழிந்து போகவைப்பது. இதை கிங்ஸ்மேன் குழுவினர் எப்படித் தடுக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. முதல் ஃப்ரேமில் இருந்தே படம் நம்மை […]

27/02/2015 Dinesh R
தி தியரி ஆஃப் எவரிதிங் அயல் சினிமா

தி தியரி ஆஃப் எவரிதிங்

The THEORY of EVERYTHING ஸ்டீஃபன் ஹாக்கிங் – நம் காலத்தின் மாபெரும் விஞ்ஞானி (கோட்பாட்டு இயற்பியலாளர்). அவரது மனைவி ஜேன் ஹாக்கிங்ஸ், ஸ்டீஃபன் ஹாக்கிங்குடன் வாழ்ந்த வாழ்க்கையை நினைவுகூரும் விதமாக எழுதிய Travelling to Infinity: My Life with Stephen என்ற நூலினை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை எடுத்துள்ளனர். பத்தொன்பது வயது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவரான ஸ்டீஃபனுக்கு சக மாணவியான ஜேன் மீது காதல் வருகிறது. இருபத்தியொரு வயதில் ஸ்டீஃபன் ஹாக்கிங், நரம்பியல் இயக்க […]

15/01/2015 Dinesh R
எக்சோடஸ்: காட்ஸ் அண்ட் கிங்ஸ் அயல் சினிமா

எக்சோடஸ்: காட்ஸ் அண்ட் கிங்ஸ்

Exodus: Gods and Kings எக்சோடஸ் என்றால் கிரேக்க மொழியில் பெருந்திரளான மக்களின் வெளியேற்றம் அல்லது பயணம் என பொருள்படும். இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் எடுக்கப்பட்ட மிகப் பிரம்மாண்டமான படம். பலமுறை படமாக்கப்பட்ட மோசஸின் கதையை, கிளாடியேட்டர் படத்தின் இயக்குநர் ரிட்லி ஸ்கோட் இயக்குகிறார் என்பதுதான் அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் காரணம். வருடம் 1500 கி.மு. எகிப்தின் மெம்ஃபிஸ் எனும் நகரத்திலுள்ள அரண்மனையில் இளவரசனாக வளரும் மோசஸ், […]

06/12/2014 Dinesh R
நைட் க்ராலர் (Nightcrawler) விமர்சனம் அயல் சினிமா

நைட் க்ராலர் (Nightcrawler) விமர்சனம்

நைட் க்ராலர் என்பது பிரபலமான மார்வல் காமிக்ஸ் பாத்திரம். ஆனால் இப்படத்தின் தலைப்போ, இரவு வேளையில் வேலை செய்யும் சுவாரசியமான மனிதன் ஒருவனைச் சுட்டிக் காட்ட வைக்கப்பட்டுள்ளது. தமிழில் பிரபலமாகி வரும் ‘சூது கவ்வும்’ பாணி திரைப்படமிது! லூ என்கிற லூயிஸ், தொழில்முறை திருடன் அல்லன். அவனுக்கு ஒரு வேலை தேவைப்படுகிறது. சாலையில் நடக்கும் ஒரு விபத்தில், எதேச்சையாகப் பார்க்கும் ஒன்றைத் தனக்கான தொழிலாக வரித்துக் கொள்கிறான். அதற்கு மூலதனமாக ஒரு சைக்கிளைத் திருடுகிறான். எதையும் விரைந்து […]

08/11/2014 Dinesh R
லூசி விமர்சனம் அயல் சினிமா

லூசி விமர்சனம்

LUCY அறைக்குள் சென்ற வள்ளலார் ஜோதியில் கலைந்து மறைந்தார்; கபீர்தாஸின் உடல் மலர்களாக மாறியது போன்ற சங்கதிகள் நமக்குப் புதிதன்று. அதையே ஹாலிவுட் பாணி விஞ்ஞான முலாம் பூசி லக் பெஸான், லூசி என்ற படத்தை இயக்கியுள்ளார். அரிதாக வரும் சூப்பர் ஹீரோயின் படங்களில் லூசியும் ஒன்று. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இயக்குநர் லக் பெஸான், பெண் கதாபாத்திரங்களை ஆழமானதாகவும் அழுத்தமானதாகவும் தனது திரைப்படத்தில் சித்தரிப்பவர். இவரது இயக்கத்தில் வந்த நிகிதா (Nikita) என்ற படத்தைத் தழுவிதான் […]

12/09/2014 Dinesh R
எக்ஸ்பேண்டபிள்ஸ் 3 விமர்சனம் அயல் சினிமா

எக்ஸ்பேண்டபிள்ஸ் 3 விமர்சனம்

நட்சத்திரப் பட்டாளங்களை ஒன்றிணைத்து படமெடுப்பது என்பது சாதாரண விஷயமன்று! வெற்றிகரமாக மூன்றாவது முறையாக இச்சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார் சில்வஸ்டர் ஸ்டலோன். நான்காம் முறையும் செய்வார் என்று நம்புவோமாக! அந்நாளைய வ்ரெஸ்ட்லிங் சூப்பர் ஸ்டார் ஹல்க் ஹோகன், கவர்ச்சிகர ஜேம்ஸ் பாண்ட்டான பியர்ஸ் பிராஸ்னன் போன்றோரும் அடுத்த பார்ட்டில் இணைவதாகத் தெரிகிறது. படத்தின் தொடக்கமே மிக அதிரடியாகத் தொடங்குகிறது. ஒரு ட்ரெயினையே சிறைச்சாலையாகக் கொண்டு, டாக்டர் டெத் எனும் கைதியை சிறைச்சாலைக்குக் கொண்டு போகின்றனர். ஹெலிகாப்டரில் வரும் சில்வஸ்டர் […]

16/08/2014 Dinesh R
இன் டு தி ஸ்டோர்ம் (Into the Storm) விமர்சனம் அயல் சினிமா

இன் டு தி ஸ்டோர்ம் (Into the Storm) விமர்சனம்

எங்கே நாம் இயற்கையின் வல்லமையை மறந்துவிடுமோ என இயற்கை தனது சக்தியை அடிக்கடி நினைவுப்படுத்தும். 2004 சுனாமியையோ, 2008 தானே புயலையோ நன் நினைவில் இருந்து என்றும் நீங்காது. அப்படி இயற்கையின் வல்லமையை கண் முன் கொண்டு வந்திருக்கும் 3-டி படம்தான் ‘இன் டு தி ஸ்டோர்ம்’. இயற்கைச் சீற்றத்தில் மாட்டிக் கொள்ளும் தனது குடும்ப உறுப்பினரை நாயகன் காப்பாற்றும் வழக்கமான ஹாலிவுட் கதைதான். ஆனால், நாமும் படத்தின் கதாபாத்திரங்களோடு புயலில் சிக்கிக் கொள்ளும் உணர்வினை படம் […]

08/08/2014 Dinesh R