Shadow

சினிமா

காமெடி கவ்வும் – நலன் குமாரசாமி

காமெடி கவ்வும் – நலன் குமாரசாமி

சினிமா, திரைத் துளி
சூது கவ்வும் படத்தின் கதைக்கு எதிர் திசையில் இப்படத்தின் கதையை அமைத்து அப்படத்தின் சாயல் இப்படத்தில் இல்லாதவாறு குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். 'காதலும் கடந்து போகும்' ஒரு காதல் கலந்த காமெடி படம். முழுக்க காதல் கலந்த நகைச்சுவைப் படம் என்பது தமிழ் சினிமாவில் மிகவும் அரிது. ஒன்று நகைச்சுவை அதிகமாக இருக்கும் இல்லையென்றால் காதல் கலந்த காட்சிகள் அதிகமாக இருக்கும். இப்படத்தில் இறுதிக் காட்சிகளுக்கு முன்பு வரை காட்சிகளோடு இழையோடும் நகைச்சுவை இருந்து கொண்டே இருக்கும். 'சத்யா' படத்தில் நடித்த சுந்தர் இப்படத்தில் கவுன்சிலராக நடித்துள்ளார். அவரிடம் பணியாற்றும் அடியாளாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். 'ப்ரேமம்' படத்தில் நடித்து முடித்திருந்த நிலையில் அப்படத்தினில் ஒரு நாயகியாக நடித்திருந்த மடோனா செபஸ்டியன் இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். வ...
விந்தன்

விந்தன்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. விந்தனின் இயற்பெயர் கோவிந்தன். இவர் 1916இல் செங்கல்பட்டு மாவட்டம், நாவலூர் என்கிற சிறிய ஊரில் பிறந்தார். வறுமையான குடும்பச் சூழ்நிலை. நடுநிலைப் பள்ளியைக் கூடத் தாண்டாத பருவத்தில், பிழைப்புக்காகத் தனது தந்தையுடன் சிறியச் சிறிய வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சில காலம் சென்ற பின், இரவுப் பள்ளியிலும், தொடர்ந்து ஓவியக் கல்லூரியிலும் சேர்ந்து ஓவியமும் கற்கத் தலைப்பட்டார். ஆனால் வறுமை அவரைத் துரத்தியது. பாதியிலேயே விட்டுவிடும்படியாகவும் ஆகிவிட்டது. ஓர் அச்சகத்தில் அச்சுக் கோர்க்கும் தொழிலாளியாகச் சேர்ந்தார். தொழிலை இங்கு நன்றாகக் கற்றுக் கொண்டவருக்கு சில காலத்திற்குப் பிறகு ஆனந்த விகடன் அச்சகத்தில்அச்சுக் கோர்க்கும் வேலை கிடைத்தது. விகடனில் வேலை செய்து வந்த காலத்தில், அவர்களுக்குத் தெரியாமல் சில கதைகளை எழுதி, அவைகள் 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் வெளிவந்திருக்கிறத...
நடிகை அருந்ததியின் அர்த்தநாரி

நடிகை அருந்ததியின் அர்த்தநாரி

சினிமா, திரைத் துளி
அருந்ததி அதிரடியாக அசத்தும் புதிய படம் அர்த்தநாரி. இந்தப் படத்தை இயக்கியுள்ளவர் சுந்தர இளங்கோவன். இயக்குநர் பாலாவிடம் அசோசியேட் இயக்குநராகப் பணியாற்றியவர் இவர். அர்த்தநாரி படத்தைப் பற்றி உற்சாகமாகப் பேசும் அருந்ததி, "அர்த்தநாரி படம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த ஒரு முழுமையான ஆக்க்ஷன் படம். அந்த உண்மைச் சம்பவங்கள் எனக்குப் பர்சனலாகவே மிகவும் உத்வேகம் அளித்தன” என்கிறார். அவர் ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘தொட்டால் தொடரும்’ முதலிய படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. “இதில் நான் சவால்கள் நிறைந்த ஒரு அண்டர் கவர் போலிஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது வழக்கமான அண்டர் கவர் அதிகாரி கேரக்டர் அல்ல. மிகக் கஷ்டமான ஒன்று. இந்தக் கேரக்டருக்காக நான் நிறையவே ஹோம் வொர்க் செய்து என்னை முழுமையாகத் தயார் செய்து கொண்டேன். துப்பாக்கியைப் எப்படி பிடிப்பது? ட்ரிக்கரை எப்படி...
அரண்மனை 2 விமர்சனம்

அரண்மனை 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகனின் பெயரைக் கூட மாற்றாமல் முரளி என்றே வைத்து, மிக மிகச் சின்னஞ்சிறு மாற்றங்களுடன் அரண்மனையையே அரண்மனை-2 ஆக்கி விட்டுள்ளார் சுந்தர்.சி. முரளியின் வீட்டில் அமானுஷ்யனான சம்பவங்கள் நிகழ்கின்றன. தனது மாமன் மகன் ரவியின் உதவியுடன் அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதுதான் படத்தின் கதை. முந்தைய அரண்மனையை விட, இப்படம் சகல விதத்திலும் சிறப்பாய் உள்ளது. ஆனால், அதே திரைக்கதை என்பதால் பார்த்த படத்தையே பார்க்கும் அசுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. பழி வாங்க நினைக்கும் மாயா ஏன் இறக்கிறாள் என்ற கிளைக் கதை அச்சமூட்டுகிறது. அக்காட்சிகளில் ராதா ரவியின் நடிப்பும் அனுபவமும் அற்புதமாய் வெளிபட்டுள்ளது. கெளரவக் கொலைகளை முற்றிலுமாக இம்மண்ணிலிருந்து ஒழிக்க மாயா போல் நான்கு பேய்கள் நிஜமாகவே உலாவினால் உண்மையிலேயே நன்றாகத்தான் இருக்கும். ஹன்சிகா முகத்தில் இன்னும் கோபம் காட்டியிருக்கலாம். சித்தார்த் ஆச்சரியப்படுத்த...
ஆர்ய மாலா (1941)

ஆர்ய மாலா (1941)

சினிமா, தொடர்
(முக்கிய நடிகர்கள்: பி.யு.சின்னப்பா, என்.எஸ்.கிருஷ்ணன்; டி.எஸ்.பாலையா; எம்.எஸ்.சரோஜினி; டி.ஏ.மதுரம்; எம்.ஆர்.சந்தானலட்சுமி)1940-களில் தொடர்ந்து படங்களை உருவாக்கி வந்த மிகச்சிறந்த சினிமா தயாரிப்பு நிறுவனங்களான சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ், ஜெமினி, ஏவி.எம்., ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனங்களுக்கு நிகராகப் பேசப்பட்ட மற்றொரு சினிமா படத்தயாரிப்பு நிறுவனம் கோயம்புத்தூரிலிருந்து இயங்கி வந்த பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனம். ஆரம்பத்தில் இதன் உரிமையாளர்கள் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு என்பவரும் சேலம் நாராயண அய்யங்கார் என்பவரும் ஆவர். இந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளாக சிவகவி (1943), ஜகதலப்பிரதாபன் (1944), கன்னிகா (1947), ஏழைபடும்பாடு (1950), மலைக்கள்ளன் (1954) மற்றும் மரகதம் (1959) போன்ற படங்களுக்கெல்லாம் முன்னோடியாக இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘ஆர்ய மாலா’. இது ஒரு மாபெரும் வ...
நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க விமர்சனம்

நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நான்கு பேர் நான்கு விதமாகப் பேசுவார்களே என்ற தயக்கத்தாலேயே சிலர் எக்காரியத்தையும் முயற்சி செய்ய மாட்டார்கள். ஆனால், இயக்குநர் L.மாதவனுக்கு அப்படி எந்தத் தயக்கமும் இல்லை என்பது மட்டும் திண்ணம். மிகத் தைரியமாகஒரு 'குறி'ப்பிட்ட அவஸ்தையைப் படமாக்கியுள்ளார். . அழுக்கனுக்கு அஞ்சு பணம் செலவு என்பார்கள். அப்படித்தான் செலவினத்தைக் குறைக்க நினைக்கும் சரவணனும், அதனாலேயே ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறான். அதிலிருந்து மீண்டு அவன் விரும்பிய பெண்ணை மணந்து கொள்கிறானா இல்லையா என்பது தான் படத்தின் கதை. படத்தின் திரைக்கதை, நம்மை 25 ஆண்டுகளுக்கு முன் கொண்டு சென்று விடுகிறது என்றால் அது மிகையில்லை. உலகத்தின் வேகத்தோடு ஓடாமல், அதை எதிர்த்து பழைமை வழுவக் கூடாதென எதிர் நீச்சல் போட மிகச் சிலராலேயே இயலும். எழுதித் தயாரித்து இயக்கியுள்ள L.மாதவன் அத்தகையவரே! பழைய பாணி படமென்பதால், நாயகன் இந்திரஜித்துக்கும் நாயக...
இறுதிச்சுற்று விமர்சனம்

இறுதிச்சுற்று விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மீனவப் பெண்ணான மதியின் திறமையைக் கண்டு கொண்டு, அவரைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து பாக்ஸிங் வெற்றியாளராக்க முயற்சி செய்கிறார் கோச் பிரபு செல்வராஜ். அம்முயற்சியில் பிரபு சந்திக்கும் சிக்கல்களும் தடைகளும் தான் படத்தின் கதை. வாவ்..  இயக்குநர் சுதா கொங்கரா அசத்தலான படத்தைக் கொடுத்துள்ளார். வேட்டை படத்துக்குப் பிறகு மீண்டும் மேடி தமிழ்ப் படம் பக்கம் திரும்பியுள்ளார். வேட்டை படத்திலிருந்ததை விட இப்படத்தில் இளைஞனாகத் தெரிகிறார் கோச் பிரபு செல்வராஜாக நடித்திருக்கும் மாதவன். ஆனால், படம் முழுவதும் 'அரைக்கிழம்' என்றே நாயகியாலும் மற்றவராலும் விளிக்கப்படுகிறார். மிகப் பொறுப்பான கதாபாத்திரத்தில் அற்புதமாகப் பொருந்துகிறார். குத்துச் சண்டை சங்கத்தில் நடக்கும் அரசியலைக் கண்டு கோபுமுறும் பொழுதும், குறிப்பாக ஊழலிலும் நயவஞ்சகத்திலும் ஊறியவர்களை எடுத்தெறிந்து அவமானப்படுத்தும் பொழுதும் கைத்தட்டல்களைப...
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்! மிகவும் புகழ் பெற்ற இப்பாடலை விடுதலைப் போரில் ஈடுபட்டவர்கள் மிகவும் உற்சாகமாகப் பாடுவார்களாம். இந்த வீரமிக்க பாடலை இயற்றி தேசியக் கவிஞர் என்ற பட்டத்தைப் பெற்றவர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள். கோவை மாவட்டம் மோகனூர் என்கிற கிராமத்தில் 1888 ஆண்டு பிறந்தார். பள்ளியில் படிக்கும்போதே ஓவியம், கவிதை போன்ற கலை வடிவங்களில் நாட்டமுடையவராக இருந்தார். ஆரம்பத்தில் கவிதையைவிட ஓவியம் வரைவதிலேயே அதிக விருப்பமுடையவராக இருந்து அதில் சற்று சம்பாதிக்கவும் செய்திருக்கிறார். கவிபாடும் திறனும் இருந்ததால் டி.கே.எஸ்.சகோதரர்கள் சிறுவர்களாக இருந்தபொழுது, அவர்கள் நடித்து வந்த நாடகங்களுக்குப் பாடல்கள் இயற்றியதாக வரலாற்றுக் குறிப்பு ஒன்று சொல்லுகிறது. காந்தியின் மீதும், காந்தீயத்தின் மீது...
எல்லாம் முருகன் செயல் – சுந்தர் சி.பாபு

எல்லாம் முருகன் செயல் – சுந்தர் சி.பாபு

சினிமா, திரைத் துளி
இயக்குநர் விஜயபாஸ்கர் சொன்ன கதை தயாரிப்பாளர் கார்த்திகேயனுக்குப் பிடித்து விடுகிறது. இரண்டு வருடங்களாக படமெதுவும் ஒத்துக் கொள்ளாத சுந்தர் சி. பாபுவிடம் கேட்காமலேயே, படத்தின் இசையமைப்பாளர் அவர் தானென இயக்குநர் பெயர் போட்டுக் கொள்கிறார். மருத்துவமனையிலிருந்த தன் அம்மாவிடம், “நீங்க வீட்டுக்கு வந்ததும் நான் மீண்டும் இசையமைக்கிறேன்” எனச் சொல்லியுள்ளார் சுந்தர் சி.பாபு. ஆனால் அவரின் அம்மா தவறியதால், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற படங்கள் எதுவும் ஒத்துக் கொள்ளாமல் இருந்துள்ளார். அச்சமயத்தில் தான், ‘அட்டி’ படத்துக்கு இசையமைக்குமாறு அணுகியுள்ளனர். தனது அம்மா தனக்கு மகளாகப் பிறந்துள்ளாரென சுந்தர் சி.பாபு மகிழ்ச்சியில் திளைத்திருந்த நேரமது. தயாரிப்பாளர் பெயரோ கார்த்திகேயன். ஆக, இது முருகனின் விருப்பமென படத்தை இசையமைக்க ஒத்துக் கொண்டுள்ளார் சுந்தர் சி.பாபு. அதற்கும் மேல், ‘அட்டி’ படத்தை அவரே வாங்கி தனத...