சினிமா

சிவகவி (1943)
(முக்கிய நடிகர்கள் : எம்.கே.தியாகராஜ பாகவதர்; எஸ்.ஜெயலட்சுமி; என்.எஸ்.கிருஷ்ணன்; டி.ஏ.மதுரம்; டி.ஆர்.ராஜகுமாரி; டி.பாலசுப்ரமணியம்; செருகளத்தூர் சாமா)பொய்யாமொழிப் புலவரைத் தான் ‘சிவகவி’ என்பார்கள். நாற்பத்து மூன்றில் வெளிவந்த ‘சிவகவி’ படத்தை, 1948 இல் ஒரு சிவராத்திரி இரவில், சிவராத்திரி கொண்டாடிய சில சிறுவர்களுடன் என்னையும் சேர்த்து படம் பார்ப்பதற்கு தியேட்டர் ஒன்றிற்கு அழைத்துச் சென்றார் எங்கள் தெருவில் வசித்த பெரியவர் ஒருவர். வெகு சுவாரஸ்யமாகப் படம் பார்த்த நினைவு.
பாடல்கள் பற்றிய விசேஷ அறிவோ, புரிதலோ ஏற்படாத காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் குழுவினரின் நகைச்சுவைக் காட்சிகளையே பெரிதும் விரும்பி, ரசித்துப் பார்க்க முடிந்தது.
என்றாலும், மிகவும் இனிமையான பாடல்கள் தான் இப்படத்தில் சிறப்பாகச் சொல்லப்பட வேண்டிய அம்சம். சிறுவயதில் மனதில் பதியும் பல சம்பவங்கள் எளிதில் நம்மை விட்டுப் போய்விடுவதில...

போக்கிரி ராஜா விமர்சனம்
'குழந்தைகளை மனதில் வைத்துக் கொண்டு எடுக்கப்பட்டதொரு ஜாலியான முயற்சி இந்தப் படம்' என்கிறார் படத்தைப் பற்றி இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா. தாதாவான கூலிங் கிளாஸ் குணாவிற்கும், கொட்டாவி விட்டுக் கொண்டே இருக்கும் சஞ்சீவிக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டம்தான் போக்கிரி ராஜா படத்தின் கதை.
யாமிருக்க பயமே படத்திற்குப் பிறகே பார்வையாளர்கள் மத்தியில் யோகிபாபு ஒரு சோலோ காமெடியனாக மனதில் பதிந்துவிட்டார். வடிவேலுவிற்குப் பிறகு, திரையில் பார்த்ததுமே மக்கள் சிரிக்கத் தொடங்குவது, யோகிபாபுவைப் பார்த்துத்தான். "எனக்கே விபூதி அடிக்கிறாயா?" என்று காக்கா முட்டையில் அவர் பேசும் வசனம் மிகவும் பிரபலமானது. இந்தப் படத்திலும் யோகிபாபு மனோபாலாவைப் பார்த்து, "பாம்பு மாத்திர, என்னாத்துக்கு நீ ஏமாத்துற?" என்ற அவர் கலாய்க்கும் போது திரையரங்கில் சிரிப்பொலி எழுகிறது. ஜீவாவையும், ஹன்சிகாவையும் சிபிராஜிடம் கோர்த்து விடும் க...

பிச்சைக்காரன் விமர்சனம்
கோமாவில் இருக்கும் தனது தாய் மீள வேண்டுமென்பதற்காக, ஒரு மண்டலத்திற்கு தன் அடையாளத்தையும் கெளரவத்தையும் விட்டு பிச்சையெடுப்பதாக வேண்டுதல் வைக்கிறான் பணக்காரனான அருள். அந்த வேண்டுதல் நிறைவேறியதா இல்லையா என்பதுதான்பிச்சைக்காரனின் கதை.
கஞ்சத்தனத்திற்குத் தனது நடிப்பால் புது இலக்கணம் வகுத்துள்ளார் முத்துராமன். பணத்தைக் கண்டதும் சொக்கித் தூங்குவதும், விரலென்ன உயிரே போனாலும் பைசா தர முடியாதென வாயில் அவராக துணியை அடைத்துக் கொள்வதும் செம காமெடி. முத்துராமனைப் போன்றே, எல்லாப் பாத்திர வடிவமைப்பிலும் இயக்குநர் சசி கவனமாக இருந்து படத்திற்குச் சுவாரசியத்தைக் கூட்டியுள்ளாரென்றே சொல்லவேண்டும். உதாரணம், முத்துராமனின் கார் ஓட்டுநராக வருபவரைச் சொல்லலாம்.
விஜய் ஆண்டனியின் அம்மாவாக தீபா ராமானுஜம் நடித்துள்ளார். உத்தம வில்லனில் பூஜா குமாரின் அம்மாவாகவும், பசங்க -2 இல் பிரின்சிபலாகவும், ரஜினிமுருகனில் சிவகார்த...

ஆண் பாதி பெண் பாதி
கிருத்திகா பிலிம் கிரியேஷன் சார்பில் ஏ.எஸ்.முத்தமிழ் என்பவர் கதை எழுதித் தயாரிக்கும் படம் அர்த்தநாரி. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பாரி வேந்தர் பாடல்களை வெளியிட, மைக்ரோசாஃப்ட் நிறுவன முன்னாள் தலைவர் ரங்க பாஷ்யம் மற்றும் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பழம்பெரும் தயாரிப்பாளர் கோவை தம்பி ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள் . படத்தின் டிரைலர் ஒரு அண்டர்கவர் பெண் போலீஸ் அதிகாரியின் நடவடிக்கைகளைப் பற்றியதாக இருந்தது .
நாயகன் ராம்குமார் பேசும்போது, “நடிகனாவேன் என நினைக்கலை. மாடலிங்கில் இருந்தப்ப நான் பண்ண விளம்பரம் ஒன்னு சத்யம் தியேட்டர்ல வந்துச்சு. அதைப் பார்த்துட்டுத்தான் தயாரிப்பாளர் முத்தமிழ் என்னிடம் கேட்டார். ஐ.டி.யில் வேலை செய்துட்டிருந்தேன். வேலையை விட்டுட்டு என்ன பண்ணலாம்.. ஃபோட்டோகிராஃபி அது இதுன்னு குழப்பிட்டு இருந்தேன். அப்பத்தான், ‘உங்க மேல் கான்ஃபிடண்ட் இருக்கு’ன்னு சொல்லி நடிக்...

தி. ஜானகிராமன்
மாயலோகத்தில்..
நவீனத்தமிழ் இலக்கியப் பரப்பில் தி. ஜானகிராமனின் இடம் மிகவும் முக்கியமானது. அபூர்வமான சொற்கட்டுகளும், அலாதியான வடிவமும், தஞ்சைத்தமிழும் அதன் அழகுகளும் இவரின் நாவல்கள், சிறுகதைகளில் பின்னிப் பிணைந்து காணப்படும்.
தஞ்சைப் பிரதேசத்தைச் சேர்ந்த மொழியையும், வழக்குகளையும் உள்ளடக்கியதுதான் இவரது கதைகள் என்றாலும், அவைகள் பிரதேச எல்லைகளையும் தாண்டி தீவிர இலக்கியவாசகன், ஜனரஞ்சக வாசகர்கள் என அனைவரது மனதையும் கவ்வி இழுத்தது என்பது மிகையல்ல.
ஜானகிராமன் தனது இளம் வயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டார் எனத் தோன்றுகிறது. தனது பதினைந்தாவது வயதிலேயே கதைகள் எழுதியிருக்கிறார்.
தி.ஜானகிராமன் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த தேவங்குடி என்னும் ஊரில் 1921இல் பிறந்தார். ஆரம்ப காலங்களில் சங்கீதப் பயிற்சியும் மேற்கொண்டிருக்கிறார். இவருடைய பல கதைகளில் சங்கீதம் பற்றிய பல அருமையான தகவல்கள் விரவிக் கிடப்பதைக் காண, ...

“இது ஸ்பெஷல் சவாரி” – சனம் ஷெட்டி
தென்னிந்திய அழகிப் போட்டி 2016 இல் இரண்டாம் இடத்துக்கு வந்த நடிகை சனம் ஷெட்டி, தான் நடித்திருக்கும் சவாரி படம் மிக நன்றாக வந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார்.
படம் பற்றி உற்சாகத்தோடு பேசும்போது, "சவாரி படம் எனக்கு மிக ஸ்பெஷலான படம். இது முழுக்க முழுக்க ஒரு ஹாலிவுட் பாணி படம் என்று நான் சொல்வேன். மிக வித்தியாசமான ஸ்டைலில் உருவாகும் இந்தப் படம் ரசிகர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.
இயக்குநர் குகனும் ஒளிப்பதிவாளர் செழியனும் சிறப்பாகப் பணியாற்றி, குறைந்த காலகட்டத்தில் மினிமம் பட்ஜெட்டில் மிக சிறப்பான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்
படத்தில் ஹீரோ பெனிட்டோவின் காதலியாக நான் நடித்துள்ளேன். கதைப்படி கல்யாணத்தை நோக்கி முன்னேறும் அந்தக் காதலில், திருமணத் தினத்தன்று கதை வேறு கோணத்தில் விரியும். பல எதிர்பாராத சுவாரசியமான திருப்பங்கள் நிகழும்.
எங்களது ...

மங்கம்மா சபதம் (1943)
(முக்கிய நடிகர்கள்: ரஞ்சன், வசுந்தரா தேவி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், புளி மூட்டை ராமசாமி, குளத்து மணி)டைரக்டர் கே.சுப்ரமணியம் அவர்களின் மோஷன் பிக்சர்ஸ் ஸ்டுடியோ ஏலத்திற்கு வந்த போது அதை ஏலத்தில் எடுத்தவர் எஸ்.எஸ்.வாசன். தான் வாங்கிய நிறுவனத்திற்கு ‘ஜெமினி பிக்சர்ஸ் சர்க்யூட்’ எனப் பெயர் சூட்டினார். இங்கிருந்து முதலில் தயாரான படம் ‘மதன காமராஜன்’. எழுத்தாளரும் இலக்கியவாதியுமான பி.எஸ்.ராமையா கதை, வசனம். இது ஜெமினியின் சொந்தத் தயாரிப்பல்ல. அமிர்தம் டாக்கீஸ் என்கிற நிறுவனத்திற்காக ஜெமினி தயாரித்துக் கொடுத்த படம்.
ஜெமினியின் முத்திரையில் முதன் முதல் தயாரிக்கப்பட்டு வெளிவந்த படம் நந்தனார். 20.09.1942 இல் வெளியான இப்படத்தில் நந்தனாராக எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடி, நடித்திருந்தார். அபரிதமான வெற்றியை அடைந்த இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியைப் பெற்று ஒரு சிறந்த இசைச்சித்திர...










