
Baby Girl – நிவின் பாலியின் புதிய அதிரடி லுக்
மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும், அதிரடி த்ரில்லர் படமான “பேபி கேர்ள்” படத்திலிருந்து, அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும், ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் செப்டம்பர் 5 அன்று வெளியாகியுள்ளது. புதுமையான தோற்றத்தில் மிளிரும் நிவின் பாலியின் இந்த லுக், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.அழுத்தமான இன்வஸ்டிகேடிவ் த்ரில்லராக உருவாகி வரும் ‘பேபி கேர்ள்’ படத்தின் மையக் கதாப்பாத்திரமாக நிவின் பாலி உள்ளார். இந்த திரைப்படத்தை சமீபத்தில் ‘கருடன்’ என்ற ஹிட் படத்தை இயக்கிய அருண் வர்மா இயக்குகிறார். கதை, திரைக்கதை பிரபல எழுத்தாளர்கள் ஜோடி பாபி & சஞ்சய் (Traffic) எழுதியுள்ளனர். மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
இப்படத்தில் நிவின் பாலிக்கு இணையாக லிஜோமோல் ஜோஸ், சங்கீத பிரதாப் ஆகியோர் முக்க...