Shadow

கேலரி

மெகா157 – பிரம்மாண்ட ஃபேன்டஸி திரைப்படம்

மெகா157 – பிரம்மாண்ட ஃபேன்டஸி திரைப்படம்

Movie Posters, அயல் சினிமா, கேலரி, சினிமா, திரைச் செய்தி
தெலுங்குத் திரையுலகின் எவர்க்ரீன் கிளாசிக்களில் ஒன்றான ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ போன்ற மற்றொரு ஃபேன்டஸி என்டர்டெய்னரில் சிரஞ்சீவியைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீண்ட நாட்களுக்குப் பிறகு, மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு ஃபேண்டஸி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தைத் தனது ‘பிம்பிசாரா’ திரைப்படம் மூலம் பார்வையாளர்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்ற இயக்குநர் வசிஷ்டா இயக்குகிறார். UV கிரியேஷன்ஸின் வெற்றிகரமான பேனரின் கீழ் வி. வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பளபதி மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோர் மிகப் பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கும் #Mega157 திரைப்படம், சிரஞ்சீவியின் கேரியரில் மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகும் படமாக இருக்கும். மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் மெகா மாஸ் யுனிவ...
டபுள் மாஸாக ‘டபுள் இஸ்மார்ட்’

டபுள் மாஸாக ‘டபுள் இஸ்மார்ட்’

Movie Posters, அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் இணையும் பான் இந்தியா திரைப்படம் "டபுள் இஸ்மார்ட்". மார்ச் 8, 2024 அன்று மகா சிவராத்திரி நாளில் திரையரங்குகளில் வெளியாகிறது. மாபெரும் வசூல் சாதனை படைத்த ‘இஸ்மார்ட் ஷங்கர்’ திரைப்படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில், உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் கமர்ஷியல் கிங் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மீண்டும் இணைகின்றனர். விசு ரெட்டி தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றவுள்ளார். உஸ்தாத் ராம் பொதினேனி பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக (மே 15) படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர் இஸ்மார்ட் ஷங்கரின் தொடர்ச்சியாக அடுத்த பாகமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு "டபுள் இஸ்மார்ட்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய பாகம் முதல் பாகத்தைக் காட்டிலும், இரட்டிப்பு மாஸ் மற்றும் இரட்டிப்பு பொழுதுபோ...
ஜாஸ்பர் – தமிழில் ஒரு ஹிட்மேன்

ஜாஸ்பர் – தமிழில் ஒரு ஹிட்மேன்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் திரைப்படங்களின் எண்ணிக்கைகள் அதிகம். ஆனால், ஹிட்மேன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஆக்ஷன் நிறைந்த த்ரில்லர் படங்களின் எண்ணிக்கைகள் மிகவும் குறைவு. அதை பூர்த்தி செய்யும் விதமாக விஸ்வரூபி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்து, அறிமுக இயக்குநர் யுவராஜ்.D இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவுள்ளது ஜாஸ்பர் திரைப்படம். முழுக்க முழுக்க ஆக்ஷன், சண்டைக்காட்சிகள் நிறைந்த படமாக மட்டுமில்லாமல் ஐஸ்வர்யா தத்தா மற்றும் விவேக்கின் மென்மையான காதல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பிரபல இசைக்கலைஞர் ட்ரம்ஸ் சிவமணியின் மகன் குமரன் சிவமணி இசையமைத்துள்ளார், பாடகர்கள் பிரதீப் குமாரும், சைந்தவியும் தங்கள் இனிமையான குரலில் பாட, அற்புதமான பாடல் காட்சிகளும் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படத்தில் விவேக் ராஜகோபால், ஐஸ்வர்யா தத்தா, சி.எம். பாலா, ராஜ் கலேஷ், லாவண்யா, பிரசாந்த் முரளி, கோட்டையம் ...
கலியுகம் – போஸ்ட் அபோகலிப்டிக் த்ரில்லர்

கலியுகம் – போஸ்ட் அபோகலிப்டிக் த்ரில்லர்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
ஷ்ரத்தா ஸ்ரீநாதும் கிஷோரும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'கலியுகம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரைம் சினிமாஸ் எனும் நிறுவனத்தின் உரிமையாளரான கே.எஸ்.ராமகிருஷ்ணா, ஆர்.கே. இன்டர்நேஷனல் இன்கார்ப்பரேட் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கலியுகம்'. இதனை இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கியிருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் 'விக்ரம் வேதா', 'நேர்கொண்ட பார்வை', 'விட்னஸ்' ஆகிய திரைப்படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் கிஷோர் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். கே. ராம்சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு டான் வின்சென்ட் இசை மற்றும் ஒலி வடிவமைப்பு பணியை ஏற்றிருக்கிறார். சக்தி வெங்கட்ராஜ் கலை இயக்கத்தைக் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை நிம்ஸ் மேற்கொண்டிருக்...
மாளவிகா மோகனனின் ‘கிறிஸ்டி’

மாளவிகா மோகனனின் ‘கிறிஸ்டி’

Movie Posters, அயல் சினிமா, கேலரி
'பேட்ட', 'மாஸ்டர்' படப் புகழ் நடிகை மாளவிகா மோகனனும், மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் மேத்யூ தாமஸும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கிறிஸ்டி' எனப் பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான பிரித்விராஜ், ஜெயசூர்யா, டோவினோ தாமஸ், நிவின் பாலி, சன்னி வெய்ன், உன்னி முகுந்தன், ஜாய் மாத்யூ, நடிகை மஞ்சு வாரியர், பஷில் ஜோசப், அந்தோணி பேப் ஆகியோர் தங்களது அதிகாரபூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஆல்வின் ஹென்றி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'கிறிஸ்டி'. இப்படத்தின் திரைக்கதையைப் பிரபல எழுத்தாளர் பென்யமின் மற்றும் ஜி.ஆர்.இந்துகோபன் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ஆனந்த் சி. சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா...
‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ வெப் சீரிஸ் சிறப்புத் திரையிடல்

‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ வெப் சீரிஸ் சிறப்புத் திரையிடல்

Event Photos, OTT, கேலரி
ப்ரைம் வீடியோவும், வால்வாட்சர் ஃப்லிம்ஸும் இணைந்து, 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' சீரிஸின் சிறப்புத் திரையிடலைத் திரைப்பிரபலங்களுக்காக ஒருங்கிணைத்தது. தொடர் ப்ரைம் வீடியோவில் வெளியாக இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் இந்த சிறப்புத் திரையிடல் சென்னையில் அரங்கேறியது. தொடரில் நடித்த நடிகர்களும் படைப்பாளிகளும், திரையிடலுக்கு வந்தவர்களை வாஞ்சையுடன் வரவேற்றனர். 'வதந்தி' வெப் சீரிஸின் தயாரிப்பாளர்கள் புஷ்கர், காயத்ரி, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா, விவேக் பிரசன்னா, குமரன் தங்கராஜன் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் இணைந்து அனைவரையும் வரவேற்றனர். 'சுழல்' வெப் சீரிஸ் இயக்குநர்கள் பிரம்மா ஜி, அனுசரண் முருகையன் மற்றும் நடிகர் கதிர் சிறப்புத் திரையிடலுக்கு வந்திருந்தனர். நடிகை ஆல்யா மானஸாவும், தமிழ் காமெடி நடிகர் புகழும் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்தனர். இவர்களுடன் 'மான்ஸ்டர்' இய...
ஹரோம் ஹரா – இங்க பேச்சே இல்ல செயல்தான்

ஹரோம் ஹரா – இங்க பேச்சே இல்ல செயல்தான்

Movie Posters, Teaser, காணொளிகள், கேலரி, சினிமா, திரைத் துளி
'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு நடிக்கும் புதிய படத்திற்கு 'ஹரோம் ஹரா' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தத் தலைப்பிற்கான பிரத்தியேக காணொளியைப் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். 'செஹரி' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ஞானசாகர் துவாரகா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஹரோம் ஹரா'. இதில் 'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்திற்கு சைத்தன் பரத்வாஜ் இசையமைக்கிறார். 1989 காலகட்டத்திய பீரியட் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ சுப்ரமணியேஸ்வரா சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இதனை ஜி. ரமேஷ்குமார் வழங்குகிறார். இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும் போது, 'அக்டோபர் 31ஆம் தேதி அன...
சிபிராஜின் ‘வட்டம்’ – சக்கரமாய்ச் சுழலும் வாழ்க்கை

சிபிராஜின் ‘வட்டம்’ – சக்கரமாய்ச் சுழலும் வாழ்க்கை

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் அடுத்ததாக, நடிகர் சிபிராஜ் நடிக்கும் “வட்டம்” படத்தினைப் பிரத்தியேகமாக நேரடித் திரைப்படமாக வெளியிடுகிறது சமீபத்தில் நயன்தாராவின் O2 & கமல்ஹாசனின் விக்ரமுக்குக் கிடைத்த அபரிதமான வரவேற்பைத் தொடர்ந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த வெளியீடாக சிபிராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் 'வட்டம்' படத்தினை நேரடித் திரைப்படமாக வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர். பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர். ‘வட்டம்’ ஒரு த்ரில்லர் திரைப்படம். மனோ, ராமானுஜம், கௌதம் மற்றும் பாரு ஆகிய கதாபாத்திரங்கள் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்சனைகளும், பரபரப்பான சம்பவங்களும் தான் கதை. இந்தத் தொடர் சம்பவங்கள், அவர்களின் வாழ்க்கையையும், வாழ்க்கையைப் பற்றிய பார்வையையும் மொத்தமாக மாற்...
கேசினோ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

கேசினோ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Movie Posters, கேலரி
மாதம்பட்டி சினிமாஸ் & MJ மீடியா ஃபேக்டரி தயாரிப்பில், இயக்குநர் மார்க் ஜோயல் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார். புதுமையான வகையில், ஓர் இரவில், ஒரு கட்டிடத்திற்குள் நடக்கும் பரபரப்பு சம்பவங்களை மையப்படுத்தி, ஒரு பரபரப்பான த்ரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே புதுமையான வகையில் ஒரு காமிக்ஸ் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில், ஒரு குழுவின் துப்பாக்கி சண்டை, பணத்தைத் தேடி ஓடும் பாத்திரம் ஆகியவை காட்டப்பட்டுள்ளது.இப்படம் முழுக்க கோயம்புத்தூரில், இரவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகளில் 70 சதவீதம் ஒரு கட்டிடத்திற்குள் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. மெஹந்தி சர்க்கஸ் நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, வாணி போஜன் ...
சிரஞ்சீவியின் ‘காட் ஃபாதர்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சிரஞ்சீவியின் ‘காட் ஃபாதர்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Movie Stills, கேலரி, சினிமா, திரைத் துளி
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் 'காட் ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அதற்கான வீடியோ வெளியாகியிருக்கிறது. அத்துடன் நவராத்திரி திருவிழா கொண்டாட்டத்தின் போது 'காட் ஃபாதர்' திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொனிடேலா புரொடக்ஷன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் 'காட் ஃபாதர்'. மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தை முன்னணி இயக்குநரான மோகன் ராஜா இயக்கியிருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான வீடியோ, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் 'காட் ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி முதன் முறையாக ஸ்போர்ட்ஸ் சால்...
குமரி மாவட்டத்தின் ‘தக்ஸ் (THUGS)’ – பிருந்தா மாஸ்டர்

குமரி மாவட்டத்தின் ‘தக்ஸ் (THUGS)’ – பிருந்தா மாஸ்டர்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
நடன இயக்குநராகத் திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கும் புதிய ஆக்ஷன் திரைப்படத்திற்கு 'தக்ஸ் (THUGS)' எனப் பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனைத் தமிழ்த்திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, நிவின் பாலி, ஆர்யா, ராணா டகுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், தேசிங் பெரியசாமி, இசையமைப்பாளர் அனிரூத் ரவிச்சந்திரன், திரையுலக வணிகத்தைத் துல்லியமாக அவதானிக்கும் நிபுணர்களான பாக்ஸ் ஆபிஸ் எண்டர்டெய்மெண்ட்டைச் சேர்ந்த தரண் ஆதர்ஷ் மற்றும் ஸ்ரீதர் பிள்ளை உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் இணைந்து வெளியிட்டனர். 'தக்ஸ் (THUGS)' என படத்தின் தலைப்புக்கு ஏற்றபடி குமரி மாவட்டத்தைக் களப்பின்னணியாகக் கொண்ட யதார்த்தமான ஒரு ஆக்சன் கதையை இயக்குகிறார் பிருந்தா மாஸ்டர். கதைக்கு ஏற்ற வகையில் நடிகர்களையும் அவரே நேரடியாக தேர்வு செய்தி...
மேயாத மான் இயக்குநரின் ‘குலு குலு’

மேயாத மான் இயக்குநரின் ‘குலு குலு’

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குலு குலு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படம் ஜுன் மாதம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'குலு குலு'. இந்தப் படத்தில் சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் அதுல்யா சந்திராவும், நமீதா கிருஷ்ணமூர்த்தியும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, 'லொள்ளு சபா' மாறன், 'லொள்ளு சபா' சேசு, டி எஸ் ஆர், பிபின், கவி, ஹரிஷ், யுவராஜ், மாரிதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் கவனித்திருக்கிறார். இத்திரைப்படத்தை சர்...
மைக்கேல் – சந்தீப் கிஷனின் ஆக்ஷன் அவதாரம்

மைக்கேல் – சந்தீப் கிஷனின் ஆக்ஷன் அவதாரம்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன், பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் 'மைக்கேல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழில் வெளியிடுகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'மைக்கேல்'. இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் முதன் முறையாக பான் இந்திய நடிகராக அறிமுகமாகிறார். இவருடன் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சிறப்பு அதிரடி வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபல இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார். சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடிகை திவ்யன்ஷா கௌசிக் நடிக்கிறார். இவர்களுட...
டிரைவர் ஜமுனா – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

டிரைவர் ஜமுனா – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Movie Posters, கேலரி, சினிமா
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'டிரைவர் ஜமுனா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. வத்திக்குச்சி படத்தை இயக்கிய இயக்குநர் பா. கின்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்' நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' படப் புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தைக் கவனிக்க, படத்தொகுப்பை ஆர். ராமர் மேற்கொண்டிருக்கிறார். சாலைப் பயணத்தை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்திற்கு ஒலியின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதால், படத்தின் ஒலி வடிவமைப்பை, முன்னணி ஒலி வடிவமை...