Shadow

புத்தகம்

அங்கீகரிக்கப்பட்ட பால்ய கனவு

அங்கீகரிக்கப்பட்ட பால்ய கனவு

கட்டுரை, புத்தகம்
'ஆமை காட்டிய அற்புத உலகம்' எனும் நல்லதொரு சிறுவர் நூலை எழுதியுள்ளார் எஸ்.பாலபாரதி. கதைக்குள் நுழையும் முன்பே ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அது, 7 வயதான சமர்சேந்தனின் நூல் பற்றிய மதிப்புரை ஆகும். சிறுவர் நூலொன்றை ஒரு சிறுவன் எப்படி உள்வாங்கிக் கொண்டான் என்று அறிந்து கொள்ள முடிந்தது. அதுவும் அச்சிறுவன் பொறாமைப்பட வைக்குமளவு மிகச் சிறந்த வாசகன். கடையில் வாங்கிய புத்தகத்தை, வீட்டுக்குப் போகும் வழியிலேயே படித்து முடிக்குமளவு அதி தீவிர புத்தகக் காதலன். அவனது மதிப்புரையில் இருந்த ஓர் அட்டகாசமான கேள்வி மிகவும் யோசிக்க வைத்தது. “சுறா மட்டும் ஃப்ரெண்ட்லியா இல்லாமல் ஏன் வயலன்ஸா இருக்குது?” ‘கதையில் ஏன் வில்லன் வேண்டும்?’ என்பதாக அந்தக் கேள்வியைப் புரிந்து கொண்டேன். வில்லன்களைச் சிருஷ்டிப்பது பெரியவர்கள் தானோ? சிறுவர்கள் உலகில் அனைவருமே நண்பர்கள் தான் போலும். ஆக, எழுத்தாளரினுடைய ஜம்பம், பிரயத்தனம்...
கிருஷ்ணன் நம்பியின் மரண விசாரமும், நீலக்கடலும்

கிருஷ்ணன் நம்பியின் மரண விசாரமும், நீலக்கடலும்

கட்டுரை, புத்தகம்
கிருஷ்ணன் நம்பி எழுதி பிரசுரமான முதல் சிறுகதை “சுதந்திர தினம்” என்கிற பதிவுகள் உள்ளன. இக்கதை 1951இல் வெளிவந்திருப்பதாக ‘கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்’ நூல் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆனால் இவர் எழுத ஆரம்பித்த முதல் சிறுகதை இதுவல்ல. ‘நீலக்கடல்’ எனும் நீண்ட சிறுகதை தான் நம்பி எழுத ஆரம்பித்த முதல் சிறுகதை. வருடம் 1949. அப்போது நாங்கள் நாகர்கோவிலில் வசித்து வந்தோம். எனக்கு அச்சமயம் வயது ஒன்பது. ஒருநாள் இரவு எங்கள் பாட்டி (அப்பாவின் அம்மா) வசித்து வந்த அழகியபாண்டிபுரம் எனும் கிராமத்திலிருந்து ஒரு நபர் வந்து எங்கள் பாட்டியின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், அப்பாவை உடனேயே அழைத்து வரவேண்டும் என்கிற என் சித்தப்பாவின் வேண்டுகோளையும் தெரிவித்தார். அப்பா பதறியடித்துக் கொண்டு புறப்பட்டார். அக்காலத்தில் பேருந்து வசதிகள் மிகவும் குறைவு. அதோடு இரவு 9:30 மணிக்கு மேல் பேருந்து கிடையாது. தவறவிட்டால் மறுநாள்த...
தமிழின் இன்றைய நிலை – கவிஞர் மனுஷ்யபுத்திரன்

தமிழின் இன்றைய நிலை – கவிஞர் மனுஷ்யபுத்திரன்

சினிமா, புத்தகம்
தமிழ்த்திரை உலகின் முன்னணி கதை வசனகர்த்தாக்களில் ஒருவரான கண்மணி ராஜாமுகமது எழுதிய, "பால்யகால சொர்கவெளி (கவிதைத் தொகுப்பு)”, "நீங்கள் அறைவதற்கு அவனிடம் மூன்றாவது கன்னம் இல்லை (சிறுகதைத் தொகுப்பு)” நூல்கள் வெளியீட்டு விழா, நேற்று மாலை சென்னை மைலாப்பூர் கவிக்கோ அரங்கில் நடைபெற்றது. கவிஞர் மனுஷ்யபுத்திரன் நூல்களை வெளியிட ராஜ் டிவி ரவீந்திரன் பெற்றுக் கொண்டார். கவிஞர் இசாக், விழா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, M.M.அப்துல்லா வரவேற்றுப் பேசினார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசுகையில், "பேச்சு வழக்கில் தமிழ்ச் சொற்களின் பயன்பாடு சுருங்கி, நாம் ஏறத்தாழ அவற்றை இழந்து வருகிறோம். இப்போதெல்லம் நல்லவற்றைக் குறித்து சொல்லும் போது 'செம' என்றும் சரியில்ல என்பதற்கு 'மொக்கை' என்றும் சாதரணமாக அனைவரும் சொல்லப் பழகிவிட்டனர். நம் பண்பாடு, கலாச்சாரத்தின் இனிய சொற்களை இழந்து வருவது, தமிழ்ச் சமூகத்தின் முக்கிய பிரச்ச...
நவீன இதிகாசம் – சாரு நிவேதிதா

நவீன இதிகாசம் – சாரு நிவேதிதா

கட்டுரை, புத்தகம்
பா.வெங்கடேசனின் இரண்டாவது நாவலான ‘பாகீரதியின் மதியம்’ காலச்சுவடு பதிப்பகம் வாயிலாக வெளிவந்துள்ளது. இந்நூலின் வெளியீட்டு விழாவில் பேசிய சாரு நிவேதிதா, நாவலை உச்சி முகர்ந்துவிட்டார். “முதலில் காலச்சுவடைப் பாராட்டணும். பிழைகளே இல்லை. சமீபத்தில் நான் படித்த புத்தகங்கள் அனைத்திலும் நிறைய பிழைகள். என் புத்தகத்துக்கு நான் தான் ஃப்ரூஃப் ரீடிங் செய்வேன். ஆனாலும் பிரிண்ட்டிங் போயிட்டு வர்றப்ப பிழைகள் வந்துடும். அதை மீண்டும் சரி பார்க்கணும். என் புத்தகத்தில் 10 பிழைகள் வந்துடுச்சு. என்னிடம் 5 லட்சம் இருந்தா எல்லாப் புத்தகத்தை வாங்கி அழிச்சிடுவேன். 'பாகீரதியின் மதியம்' புத்தக உருவாக்கத்தில் பங்குபெற்ற காலச்சுவடு ஆட்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.   நான் நன்றாக எழுதியிருப்பவர்களைப் பார்த்து, இவர்கள் என் வாரிசு எனச் சொல்லி விடுவேன். அது ஓர் அன்பு. அன்பால் அப்படி நாலஞ்சு பேரைச் சொல்லியிருக்கேன். ஆனா பா...
நம் நாயகம் – ஒரு முன்மாதிரி புத்தகம்

நம் நாயகம் – ஒரு முன்மாதிரி புத்தகம்

புத்தகம்
அறுபத்து மூன்று வயது வரை வாழ்ந்த நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை 63 அத்தியாயங்களாகத் தொகுத்து, சிறுவர்களுக்கான "நம் நாயகம்" எனும் நூலை எழுதியுள்ளார் ஜெஸிலா பானு. தனது புத்தகத்தைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், ‘இந்தப் புத்தகத்தைப் படிச்சா ஒரு மனிதன் வாழ்க்கையில் எப்படி வாழணும்னு தெளிவு கிடைக்கும்’ என்கிறார். இப்படியொரு மதம் சார்ந்த நீதி போதனைப் புத்தகம் எப்படி முன்மாதிரி ஆகும்? பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பமும், யுக்தியும், எளிமையான மொழி நடையுமே அதற்குக் காரணம். புத்தகத்தில் என்ன தொழில்நுட்பத்தை உபயோகிக்க முடியுமெனப் புத்தகத்தைக் கையிலெடுத்துப் புரட்டிராதவர்கள் நினைக்கக்கூடும். அதைப் பற்றி, இப்புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய பத்திரிகையாளர் திரு. மாலன், “புத்தக வடிவமைப்பு என்பது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த விஷயம். புத்தகத்தை டைப்செட் பண்ணி, பக்கம் பக்கமா அச்சடிச்...
சந்திரஹாசம்  – ஓர் அலசல்

சந்திரஹாசம் – ஓர் அலசல்

கட்டுரை, புத்தகம்
அதென்ன சந்திரஹாசம்? சட்டென ஈர்க்காத இந்தத் தலைப்பை ஏன் விகடன் கிராஃபிக்ஸ் தேர்ந்தெடுத்தனர்? சந்திரஹாசம் என்பது பாண்டியர்களுடைய வீர வாளின் பெயர் (இது சந்திரஹாசம் இணையத்தள முன்னுரையில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருந்தது). புத்தகத்தின் ஆரம்பப் பக்கங்களே ஏமாற்றத்தைத் தருகின்றன. 'இது தான் குளியலறை. இங்கே குளிப்பார்கள்' என குளியலறை காட்டி யாராவது சொன்னால் உங்களுக்கு எப்படியிருக்கும்? அப்படித்தான் சித்திரங்களுக்கு விளக்கவுரை போட்டு ஓவியர், வாசகர் என இருவரையும் அவமானப்படுத்துக்கிறார்கள். அதை விட கொடுமை, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்க்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வீங்கிய எழுத்துரு. உதாரணத்திற்கு, குதிரையின் குளம்புகளை மறைத்து "சல்.. சல்.." எனப் பெரிய எழுத்துகளில் போடப்பட்டிருப்பதைக் காணுங்கள். க்ர்ர்.. இந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, அப்படியே காலம் நழுவி பால்யத்துக்குள் நம்மைத் தள்ளி ...
வரலாற்றுப் பயணத்தின் தொடக்கம்

வரலாற்றுப் பயணத்தின் தொடக்கம்

கட்டுரை, புத்தகம்
இன்று தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். ஏனென்றால், ஆனந்த விகடன் நிறுவனத்தின் புதிய இம்ப்ரிண்ட் ஆன “விகடன் கிராஃபிக்ஸ்” இன்று அறிமுகம் ஆகிறது. அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்தப் புத்தகம் நிச்சயமாக வாசிப்பில் ஒரு புதிய பாதையை உருவாக்கும் என்று நம்பலாம். ‘காவல் கோட்டம்’ நாவலிற்காக சாகித்திய அக்காதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு சு. வெங்கடேசன் அவர்களின் கதைக்கு, வண்ணமயமாக உயிரூட்டி இருக்கிறார் கோவையைச் சேர்ந்த ஓவியரான பாலசண்முகம்.காலத்தால் அழிக்க முடியாத புகழைப் பெற்ற மாறவர்மன் குலசேகர பாண்டியன். அவனுக்கு இரண்டு மனைவிகள். முறையே இரண்டு மகன்கள். மூத்தவன் சுந்தர பாண்டியன் இருக்க, இளையவன் வீர பாண்டியனே சிறந்தவன் என்று தந்தை கருத, அதனால் மூத்த மனைவியின் மகன் செய்யும் சதித் திட்டங்கள் நாட்டையே நிலைகுலைய வைக்கிற அளவிற்குப் போகிறது. அந்த சதித் திட்டங்களை எல...
மிதக்கும் சொர்க்கம்

மிதக்கும் சொர்க்கம்

கட்டுரை, புத்தகம்
ஓர் உல்லாசக்கப்பல் பயணத்தைப் பற்றிய பயணநூல் என்பதே ஆர்வத்தைக் கிளறுவதாக இருந்தது. அதையும் அந்தப் புத்தகத்தை எழுதியவர் ஒரு பெண் விஞ்ஞானி என்பது புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டியது. மன்மதன் அம்பு படத்தில் கமல், த்ரிஷா பயணிக்கும் க்ரூஸ் வகை கப்பலைச் சேர்ந்ததுதான் இந்நாவலின் உல்லாசக்கப்பலும்! புத்தகத்தை அறிமுகம் செய்த யுவகிருஷ்ணா, தமிழில் வந்துள்ள பயணநூல்கள் பற்றிய ஒரு பார்வையை அளித்தார். 1940 களிலேயே, ஏ.கே.செட்டியார், தனியொருவராக இருந்து அச்சு இயந்திரத்தில் எழுத்துகளைக் கோர்த்து, தனது பயண அனுபவங்களை புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார். தமிழின் பயண நூல்களுக்கு அவரே முன்னாடியெனச் சொன்னார். எழுத்தாளர் சல்மாதான் கிருத்திகா எழுதுவதற்கே காரணமாக இருந்துள்ளார். அவர் புத்தகத்தைப் பற்றி குறிப்பிடும்போது, "பெண்களால் மட்டுமே சிலவற்றை எழுத முடியுமென்பதற்கு கிருத்திகாவின் இந்தப் புத்தகமும் சான்...
யாவருக்குமான காமிக்ஸ்!

யாவருக்குமான காமிக்ஸ்!

கட்டுரை, புத்தகம்
பொம்மைப் படங்கள் என கொஞ்சம் கேலியாக அழைக்கப்படும் சித்திரக் கதைகள் குழந்தைகளுக்கானது மட்டுமா? “ஆம்” என்பவரே இங்கு அதிகம். ஆனால் அப்படியில்லவே இல்லை, காமிக்ஸ் என்பது அனைத்து வயதினருக்குமானது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக “கிராபிக் நாவல்கள்” பற்றியதொரு கலந்துரையாடலை யாவரும்.காம், டிஸ்கவரி புக் பேலஸ், தமிழ் காமிக்ஸ் உலகம் ஆகிய மூவரும் இணைந்து நடத்தினர்.“ஃப்ரான்ஸில் 95% பேர் காமிக்ஸை விரும்பிப் படிக்கிறாங்க. லேண்ட் மார்க் போல, அங்க ஒரு 6 மாடிக் கட்டடம் முழுவதும் காமிக்ஸ்க்கு என தனியாக வச்சிருக்காங்க. உள்ள போனீங்கன்னா, காமிக்ஸ் படிச்சு தனியாகச் சிரித்துக் கொண்டிருக்கும் பெண்களைப் பார்க்கலாம். அந்த இடத்துக்குப் போனாலே மனம் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அதே போல், ஜப்பானிலும் 95% பேர் மாங்கா (ஜப்பானிய மொழியில் காமிக்ஸ்)-க்கு அடிமைகள். நம்மூர்ல எப்படி வாஷிங் மெஷின்க்கு பக்கத்தில் ந...
கலை உத்தியஸ்தர்

கலை உத்தியஸ்தர்

கட்டுரை, புத்தகம்
“எம்பெருமானே! இதென்ன மகாபாரதத்திற்கு வந்த சோதனை?” பல நூறாண்டுகளுக்குப் பிறகு, இப்பொழுதுதான் லஷ்மியின் முகத்தில் இருந்து பார்வையை மீட்டு வலது பக்கமாகப் புரண்டு படுக்கிறார். உடனே வியாசன், பரந்தாமன் முகத்தினைப் பார்த்து தனது வியாகூலத்தை வெளியிடுகிறார். “ஏன் வியாஸரே!? மகாபாரதத்துக்கு என்ன நேர்ந்தது?” “யாரோ ஜெமோ-வாம். தினம் ஒரு அத்தியாயமென பத்தாண்டுகளுக்கு மகாபாரதம் எழுதுகிறாராமே!?” “யாரோ ஜெமோவா? என்ன சொல்கிறீர் வியாஸரே! முக்காலமும் உணர்ந்த நீரா இப்படி அலட்சியமாகப் பேசுவது?” சற்று தயங்கிய வியாசர், “ஏன் பிரபோ? ஏதாவது தவறாகச் சொல்லிவிட்டேனா?” என பவ்யமாகக் கேட்டார். “தவறு செய்தால் பரவாயில்லையே! மாபெரும் குற்றமல்லவா இழைத்துவிட்டீர்?” “ஆ.. அப்படி என்ன செய்துவிட்டேன்?” “கதை சொல்லியான நீர்.. கலைக்காக வாழும் பேராசான் ஜெமோவைப் பற்றி அறியாதது பெருங்குற்றத்தில்தானே வரும்?” ‘பேராசானா?’ என யோசித்...
வேலா வளர்த்த தீ

வேலா வளர்த்த தீ

கட்டுரை, புத்தகம்
எழுத்தாளர் ஒருவர் பேரன்பும் பெருங்கோபமும் கொண்டு ஒரு நாவலை எழுதினால், அதைப் படிப்பவன் கதி அதோகதிதான் போல! குற்றப் பரம்பரை நாவல் படிப்பவரின் அகம், புறம் இரண்டையும் பதற்றத்துக்கு உள்ளாக்கி விடுகிறது. கதைசொல்லியான வேல ராமமூர்த்தி, நாவல் தொடங்கிய சில பக்கங்களுக்குள்ளாகவே உங்களை கெதியாய்த் தயார்படுத்தி, தான் கொண்டு செல்ல விரும்பும் இடத்திற்குக் கொண்டு போய்விடுகிறார். வழியில் நிற்பதென்ற பேச்சுக்கே இடமில்லை. அவரை மறுக்கவோ, கேள்வி கேட்கவோ முடியாதளவுக்கு மிக நேர்த்தியாய் ஒரு வாழ்க்கைக்குள் உங்களைத் தூக்கிப் போட்டு விடுகிறார். இது சரியா தவறா என நிதானித்து யோசிக்க விடாமல் கடைசி பக்கம் வரை ஒரே மூச்சில் ஓட விடுகிறார். இருட்டுக்குள் ஓடும் அத்தகைய ஓட்டம்தான் அவர் வெளிச்சமிட்டுக் காட்டும் வாழ்க்கை முறை. அவ்வாழ்க்கையில் கரணம் தப்பினால் மரணம். அப்படி நேரும் சிறு பிசகால்தான் கொம்பூதியைச் சேர்ந்த சோலை என்ப...
ஒரு கதையின் கதை

ஒரு கதையின் கதை

கட்டுரை, புத்தகம்
தமிழ் இலக்கிய உலகிலிருந்து அனேகமாக மறக்கப்பட்டுவிட்ட ஒரு சிறந்த சிறுகதையாசிரியர் கிருஷ்ணன் நம்பி. மிகக் குறைவாகவே எழுதி, மிகக் குறைவான வாசகர்களையே சென்றடைந்தவர் இவர். இவரது ‘மாஸ்டர் பீஸ்’, 1974 இல் எழுதப்பட்ட ‘மருமகள் வாக்கு’ எனும் சிறுகதை. (ஓவியம்: கார்த்திகேயன் சுகுமாரன்) அசோகமித்திரன் இக்கதையை ‘கணையாழி’ ஆசிரியராக, கையெழுத்துப் பிரதியில் படிக்கும்போதே, ஒரு மகத்தான படைப்பு என்று தனக்குப் பட்டதாகப் பதிவு செய்திருக்கிறார். எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ஒரு கட்டுரையில்.. பொப்புத்தி, ஆதிக்கக் கலாச்சாரம் என்று கலாச்சாரத் தளத்தில் மக்களின் மனங்களைத் தகவமைக்கும் அரசியலைப் பற்றியெல்லாம் இன்று நாம் பேசத் தொடங்கியுள்ளோம். இதையெல்லாம் விளக்கமாகப் புரிய வைப்பதற்கு கிருஷ்ணன் நம்பியின் ‘மருமகள் வாக்கு’ ஒரு கதை போதும் என்கிறார். இக்கதையை மேலும் பல இலக்கியவாதிகள் மிக உயர்வாகச் சொல்லுகிறார்கள். இக்கதை பி...
அமானுஷ்யமும் மர்மமும்

அமானுஷ்யமும் மர்மமும்

நம்பினால் நம்புங்கள், புத்தகம்
அமானுஷ்யமும் மர்மமும் போல் ஈர்ப்பான விஷயங்கள் உலகத்தில் வேறெதுவுமில்லை. அதைப் பற்றிப் பேசவும் கேட்கவும் எப்பொழுதும் தயாராகவே இருப்போம். அதுவே செவி வழி கதையாக இல்லாமல் தனக்கேற்பட்ட அனுபவங்களை ஒருவர் தொகுத்தால்? அப்படித்தான், ஜேம்ஸ் வான் பிராக் தனது புத்தகமான, Ghosts Among Us என்பதில் ஆவிகள் உலகத்தினைப் பற்றிச் சொல்கிறார். புத்தகத்தில் திகிலான சம்பவங்களோ, புனைவுக்குரிய சுவாரசியங்களோ இல்லை. மரணத்தைப் பற்றியும், மரணத்துக்குப் பின்னான வாழ்க்கையைப் பற்றியும் அலசுகிறார் அமெரிக்காவின் புகழ் பெற்ற ஆவி மீடியம்களில் ஒருவரான ஜேம்ஸ். அவர் சந்தித்த எண்ணற்ற மனிதர்கள் பற்றியும், ஆவிகள் பற்றியும் சொல்லியுள்ளார். அனைத்துமே ஆச்சரியத்தையும், நம்மை ஆழ்ந்து யோசிக்கவும் வைக்கும் அனுபவங்கள் என்பதுதான் புத்தகத்தின் விசேஷம். மனிதர்களுக்கு நல்லது செய்யவே ஆவிகள் எப்பவும் அவர்களைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. ஆவிகள...
சந்துருவுக்கு என்னாச்சு?

சந்துருவுக்கு என்னாச்சு?

புத்தகம்
சுமார் 7 வயது மதிக்கத்தக்க தருண் எனும் சிறுவனின் மனதில் எழும் கேள்வியான "சந்துருவுக்கு என்னாச்சு?" என்பதுதான் புத்தகத்தின் தலைப்பு. குழந்தைகள் உலகம் கேள்விகளால் நிரம்பியது. அவர்களின் கேள்விகளை எதிர்கொள்வது போல் பெரியவர்களைப் பதற்றத்துக்கு உள்ளாக்கும் விஷயம் வேறில்லை. அப்படித்தான், தருணின் கேள்வி அவனது அம்மா சரஸ்வதியை அதிர்ச்சியடைய வைக்கிறது. கொஞ்சம் அதட்டலுடன், அக்கேள்வியை எரிச்சலுடன் கடந்து விடுகிறார் சரஸ்வதி. இதற்கே தருண் தன் தந்தைக்குப் பயந்து, அவர் கொஞ்சம் தள்ளிச் செல்லும்வரை காத்திருந்தே தன் தாயிடம் கேட்கிறான். தந்தை முன் கேள்விகள் கேட்க தருண் ஏன் தயங்க வேண்டும்? "எங்கம்மா போறோம்?" "தொரைக்கு எங்கன்னு சொன்னாத்தான் வருவீங்களோ?" 'உனக்கு கேள்வி கேட்கும் அதிகாரமில்லை' என்ற எண்ணத்தை குழந்தைகள் மனதில் விதைப்பதுதான் அவர்கள் மீது செலுத்தப்படும் உச்சபட்ச உளவியல் வன்முறையாக இருக்கும். இத்த...
மலாலா என் ஜானி மன்!

மலாலா என் ஜானி மன்!

புத்தகம்
மலாலாக்கு நோபல் பரிசு அறிவித்த நாளன்று மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் மலாலா அமெரிக்கக் கைக்கூலி என பரவலான நம்பிக்கை ஒன்று நிலவி வருகிறது. ஊடகம் உயர்த்திப் பேசுமளவுக்கு மலாலா ஒன்றும் சாதிக்கவில்லை என்பது சிலரின் எண்ணம். உண்மை என்னவென்றால், மலாலா தாலிபானால் சுடப்படுவதற்கு முன்பே.. 2011 இல் பாகிஸ்தான் அரசின் தேசிய அமைதிப் பரிசைப் பெற்றவர். கூடவே, பாகிஸ்தான் அரசின் முதல் அமைதிப் பரிசைப் பெற்றவர் என்ற புகழும் மலாலாவுக்கே! அதன் பின் ஒன்பது மாதங்கள் கழித்தே மலாலா தாலிபானால் சுடப்படுகிறார். சுட்டதுக்குப் பொறுப்பும் எடுத்துக் கொண்டது தாலிபான். “மதச்சார்பின்மையை பரப்புவதில் முன்னோடியாக இருந்ததால்தான் மலாலா குறிவைக்கப்பட்டாள்” என எஹசுனுல்லா எஹஸான் என்ற TTP-இன் செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வ அறிக்கை விடுத்துள்ளார். (காலச்சுவடு பதிப்பகம் - தமிழில்: பத்மஜா நாராயணன் -  303 பக்கங்கள் -...